Sunday 19 November 2017

DHANSIKA , TAMIL ACTRESS BORN 1989 NOVEMBER 20



DHANSIKA , TAMIL ACTRESS 
BORN 1989 NOVEMBER 20


Dhansika biography:
Dhansika is a Tollywood Actress, model. She was born in Thanjavur. Her Date of Birth is 20-Nov-89.


Dhansika first film is Thirudi. Some of the film fare awards the actor received are Vijay Award,Filmfare Award. Some of the famous films in which Dhansika acted are Thirudi,Aravaan,Paradesi,Thiranthidu Seese,Kaalakkoothu,Kitna.









‘விழித்திரு

 சென்னை:    ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை டைரக்டு செய்த மீரா கதிரவன் தயாரித்து டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘விழித்திரு.’ இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், தம்பி ராமய்யா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில், டி.ராஜேந்தர் நடித்து இருக்கிறார். படக்குழுவினர் அனைவரும் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது தன்சிகா கூறியதாவது:-

“இது, ஒரு இரவில் நடக்கிற கதை. படத்தில் 4 கதைகள் உள்ளன. அந்த 4 கதைகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் உச்சக்கட்ட காட்சி. இதில் காதல், மோதல், நகைச்சுவை, திகில் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன. சென்னை குடிசைவாசி பெண்ணாக நான் நடித்து இருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சரோஜாதேவி.

தற்காப்பு கலை

படத்தில், எனக்கு ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதில், துணிச்சலாக நடித்தேன். நான் ஏற்கனவே சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று இருப்பதால், சண்டை காட்சியில் நடிப்பது சுலபமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், பெண்கள் அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது, அவசியம். பாலியல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, தற்காப்பு கலை உதவும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால், முரட்டு சுபாவம் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். மனம், ஒரு நிலைப்படும். கோபம் குறையும். பதற்றம் ஏற்படாது.

ஆபாச படங்கள்

டுவிட்டரில், நடிகர்-நடிகைகளும் இருக்கிறார்கள். பொதுமக்களும் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும். சர்ச்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீப நாட்களாக டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவது, அருவருப்பாக இருக்கிறது.

நான், எந்த விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை.” 

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த 28-09-2017 நடைப்பெற்றது. அப்பொழுது பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய டி. ராஜேந்தர், விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்த பிறகு தான் கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடித்தவுடன் தன்னை மறந்துவிட்டதாக டி. ராஜேந்தர் தெரிவித்தார். மேலும் இது தான் உலகம் எனவும் தெரிவித்தார். 

அதற்கு மேடையிலேயே நடிகை தன்ஷிகா டி. ராஜேந்தரின் காலை தொட்டு மன்னிப்புகேட்டார். ஆனால் அதற்கு டி.ராஜேந்தரோ, “நீ Sareeயே கட்டிட்டு வரல அப்றம் என்ன Sorry கேக்குறனு” சொல்லி அவரை கடுமையாக விமர்சித்தார். மேலும் நடிகை தன்ஷிகாவிற்கு மேடை நாகரீகம் என்பது இல்லை எனவும் கூறினார். இதனால் மேடையிலேயே நடிகை தன்ஷிகா கண்கலங்கினார். 

நடிகர் டி.ராஜேந்தரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் தன்ஷிகாவிற்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் தன்ஷிகாவின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை தன்ஷிகா அவருடைய ட்விட்டர் வலைபக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை தன்ஷிகாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

அவரது அறிக்கையில், 'ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர்  டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஷாலின் அறிக்கையில், “ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர்.  அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகை தன்ஷிகாவிற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மேடை நாகரீகத்தை சரியாக பின்பற்றியது தன்ஷிகா தான் என்றும், அவர் மேடை நாகரீகத்தை பின்பற்றியதால் தான் டி. ராஜேந்தர் திட்டும்போது அமைதி காத்தார் என்று கூறியுள்ளார். மேலும் டி. ராஜேந்தர் விமர்சித்ததை கைத்தட்டி ரசித்த இயக்குநர் வெங்கட் பிரபு, மற்றும் நடிகர்களையும் நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு நடிகையை கண்கலங்குவதை பார்த்து மேடையில் அமர்ந்து சிரித்து ரசிப்பது தான் மேடை நாகரீகமா என்றும் கேள்வி எழுப்புகிறார் நடிகை கஸ்தூரி. 

மேலும் நடிகை தன்ஷிகாவிற்கு ஆதரவாக நடிகை குஷ்புவும் அவருடைய ட்விட்டர் சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை தன்ஷிகா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தினார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

சினம்
பல படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சினம் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். கல்கத்தாவில் நடக்கும் விபச்சாரத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் தன்ஷிகா பாலியல் தொழிலாளியாகவும், புகைப்பிடிப்பது போலவும் நடித்துள்ளார்.



No comments:

Post a Comment