Monday 20 November 2017

MGR சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?



MGR , சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?



இந்த சொத்தை எப்போது கைப்பற்ற போகிறார்கள் ?
ஊழலை ஒழிப்பேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தார் தலைவர் எம்ஜியார் . தன்னுடைய வருமான வரி பாக்கிக்கு வி .என் .ஜானகி பெயரில் இருந்த 
வீட்டை விற்று ௨,50 ,000 கட்டினார். அங்க ஆரம்பிச்ச பிராடு வேலை அவரையும் அவர் சீடரையும் ,சிஷ்யை ஜெயலலிதாவையும் அவர் வழியிலேயே பிரயாணம்  நடத்தியது .ஆட்சியின் அவலமோ சொல்லிமாளாது .ஒரு கட்டத்தில் கருணாநிதியே தேவலை என்று தமிழகம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ௨% தேய்ந்தே வந்தது .கருணாநிதி பதவி விட்டு போகும்போது 15 வது இடத்தில இருந்த தமிழகம் 26 ஆம் இடத்துக்கு கடைசிக்கு தள்ளப்பட்டது .
முன்னேற்றம் என்று பார்த்தால் ஆயிரக்கணக்கில்  லஞ்சம் வாங்கியவர்கள் லட்சக்கணக்கில் வாங்கினார்கள் .திட்டங்களை நிறைவேற்றாமல் 
நிறைவேற்றியதாய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் எம்ஜியார் . இவரே ஊழலின் ஊற்று கண் . இதெல்லாம் தன் வள்ளல் தன்மையால் மக்களின் அறியாமை ,பல்பொடி ,செருப்பு , என்ற இலவசங்களை வழங்கி மூடி மறைத்தார் .இவருடைய சொத்துக்கள் சசி ,ஜெயா சொத்துக்களை விஞ்சி கருணாநிதி சொத்து க்கு இணையாக ஊழலில் திளைத்து மாண்டு போனார் எம்ஜியார் .மறந்து போன மக்கள் .இந்த சொத்தை எப்போது கைப்பற்ற போகிறார்கள் ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேடு கெட்ட தமிழர்கள் சார் நாம்....

ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம்?
ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா ஏங்கி தவிச்சிருப்போம்?
ஒரு நல்ல பிராண்டட் டிரெஸ் பிராண்டட் ஷூ எப்போ போட்டுருப்போம்?
அட ஒரு ஃபிகர உஷார் பண்ண எவ்ளோ ரிஸ்க் எடுத்திருப்போம்? பணக்காரனா நம்மல காட்டிக்க எவ்ளோ வேஷம் கட்டியிருப்போம்?
“புடிச்சத படிக்க, நினைச்சத செய்ய, ஆசைப்பட்டத அடைய” என எவ்வளவு போராடியிருப்போம்.
ஆனால் உதயநிதி ஸ்டாலினோ? துரை தயாநிதியோ? அருள்நிதியோ? திவாகரன் மகன் ஜெய்ஆனந்தோ? 
இளவரசி மகன் விவேக் ஜெயராமனோ? கார்த்திக் சிதம்பரமோ? இப்படி எதுக்காகவாவது ஏங்கியிருப்பாங்களா?

25 வயசுக்கு பிறகு தான் நமக்கெல்லாம் குடும்ப பாரம் என்றால் என்ன என்றே தெரிய ஆரம்பிக்குது, மாதம் 50,000 சம்பாதித்தால் கூட 3 லட்ச ரூபாவை சேமிக்க 10 வருஷம் போராட வேண்டியிருக்கு, ஆனால் அழகிரி மகன் சினிமா தாயாரிப்பாளர், ஸ்டாலின் மகன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர், 27 வயசுல ஒரு டிவி சேனலுக்கு அதிபர் ஆகின்றான் விவேக் ஜெயராமன், வருங்கால கல்வி மஹானாகின்றான் ஜெய்ஆனந்த். துபாயில் பல ஆயிரம் கோடிகளில் நட்சத்திர ஓட்டல் அதிபராகிரார் கார்த்திக் சிதம்பரம்... 5000 ருபாய் மாசம் சேமிக்க அல்லாடிகிட்டு இருக்கையில் 1000 கோடி ரூபாய்க்கு விவேக் பெயரில் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது என்ற செய்தியை கேட்டப்போ என்னை மாதிரி எவனாவது ஒருத்தனாவது “எவன் அப்பன் வீட்டு காசுடா இதெல்லாம்” என கோவப்பட்டதுண்டா?

உதயநிதியையும், துரைதயாநிதியையும், விவேக்கையும் ஜெய்ஆனந்தையும்,கார்த்திக் சிதம்பரத்தையும் பெத்தவங்க எல்லாம் திறமைசாலிகள் எனில் நம்மை பெத்தவங்க எல்லாம் முட்டாளா? இல்லை நாம தான் திறமையற்றவர்களா? பெத்தவங்களை சார்ந்து வாழ்ந்து வளர்ந்து நிற்கும் அவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது., சொந்த கைய ஊன்றி எழுந்து நிற்கும் நமக்கெல்லாம் எவ்வளவு இருக்கனும்?
டிடிவி வீட்ல ரைடாம்? ஒண்ணும் கிடைக்கலையாம்? அய்... ஜாலி... என சந்தோஷப்படுவதற்கு என்ன சார் காரணம்?
உங்க சாதிப்பற்றா? இல்ல அவங்க உங்க சொந்தக்காரங்களா? இல்ல பிஜேபி எதிர்ப்பு மனநிலையா?போயஸ் கார்டனில் ரைடாம்? அய்யஹோ... கோவிலாக மதிக்கப்பட வேண்டிய அம்மா வாழ்ந்த வீட்டில் ரைடா? என கோவப்பட வைப்பது எது சார்? உங்க கட்சி பாசமா? இல்ல அந்த கட்சியில் வாங்கி தின்ன விசுவாசமா?

அந்த கோவிலில் வாழ்ந்த தெய்வம்.. தான் சாகும் போதும் கூட ஊழல் குற்றவாளியாகவே இருந்தாங்க அதுவாவது ஞாபகம் இருக்கா சார்?
உன்னையும் என்னையும் ஏய்த்து உனக்கும் எனக்கும் எட்டாக்கனியாக இருக்கும் பல விஷயங்களை எளிமையாக அடைந்து வாழ்ந்து பெருத்து அசுரராய் நிற்பவர்களை நம்மால் எதிர்க்க முடியவில்லை எனில் எவனோ ஏறி மிதிக்கின்றான் எனில் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள், உன் உரிமைகளையும் உனது இனப்பற்றையும் காட்ட இது நேரமில்லை, நம் இயலாமையின் வலிக்கு எவனோ ஒருவன் மருந்து போடுகின்றான் என நினைத்துக்கொள். இன்றைக்கு இவனை மிதிப்பவன் தவறு செய்தால் நாளைக்கு எவனோ ஒருவன் மிதிப்பான் என நம்பிக்கை கொள். திருடனாய் இருந்தாலும் தமிழன் எனில் ஆதரவு கொடுக்கனும் என்ற முட்டாள் தனம் இருக்கும் வரை நம்ம அப்பனும் பாட்டனும் சலாம் போட்ட மாதிரி தான் நாளைக்கு உன் மகனும் என் மகனும் விவேக்குக்கோ? ஜெய் ஆனந்துக்கோ? உதயநிதிக்கோ துரை தயாநிதிக்கோ? கார்த்திக் சிதம்பரத்துக்கோ? சலாம் அடிப்பானுங்க.

என்னடா ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, சிதம்பரம், சசிகலா, திவாகரன், தினகரனை எல்லாம் விட்டுட்டேனே என பார்க்குறீங்களா? அவங்களுக்கெல்லாம் தான் நாம சலாம் அடிச்சிகிட்டு இருக்கோமே இத சொல்ல எதுக்கு வெட்கப்பட்டுகிட்டு.
மானத்தமிழன் சார்...!

சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?

No comments:

Post a Comment