Posts

Showing posts with the label P.ARUNACHALAM

KARUKURICHI P.ARUNACHALAM , NAGASWARAM FLUTE MUSICIAN BORN 1964 APRIL 8

Image
KARUKURICHI P.ARUNACHALAM , NAGASWARAM FLUTE MUSICIAN BORN 1964 APRIL 8 karukurichi P Arunachalam (1907 - 8 ஏப்ரல் 1964)[1] தமிழகத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர். இசை வாழ்க்கை திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊர் காருக்குறிச்சி. இந்த ஊரில் அருணாசலம் 1907 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை. இந்த ஊரிலுள்ள கோயிலில் நாதசுவரம் வாசித்துக் கொண்டிருந்த இவர், சில திரைப்படப் பாடல்களுக்கும் நாதசுவர இசையைச் சிறப்பாகச் செய்து கொடுத்துப் புகழ் பெற்றிருக்கிறார். இவரின் நாதசுவரக் கச்சேரிகளுக்கு யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளையும், நீடாமங்கலம் சண்முக வடிவேலும் இணைந்து சிறப்புத் தவில் வாசித்துள்ளார்கள்[2]. இசைத்துறையில் நுழையக் காரணம் காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் புகழ்பெற்ற நாகசுர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம் இசைக்க வேண்டும். இதற்கிடையில், நெல்தானியம் அளந்து கொடுக்கும் பரம்பரை வேலையா...