Posts

Showing posts with the label INDIA2016

பதான்கோட் தாக்குதல் முதல் ஜெயலலிதா மறைவு வரை : அதிர்வுகள் நிறைந்த 2016

Image
பதான்கோட் தாக்குதல் முதல் ஜெயலலிதா மறைவு வரை : அதிர்வுகள் நிறைந்த 2016 2016-ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள் என பல அதிர்வுகளைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதுபற்றி, முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு. ஜனவரி 2 : பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான எல்லைப்பகுதியில் உள்ள பதான்கோட்டில், ராணுவத்திற்கு சொந்தமான விமான தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஜனவரி 2 ஆம் தேதி இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் ராணுவம் மீது நடத்திய தாக்குதலில், 7 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று நாட்கள் முடிவில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் பதற்ற நிலைக்கு இத்தாக்குதல் வழிவகுத்தது. பதான்கோட் தாக்குதல் ஏப்ரல் 5 : பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. எதிரும், புதிருமாக இருந்த நிதிஷ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இருவரும் இணைந்து ஒன்றாக களம் கண்டு தேர்தலில் வெற்றி பெற்றனர். வெற்றியை தொடர்ந்...