Posts

Showing posts with the label ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட்

Image
ஜேம்ஸ் பாண்ட் *மார்ச் 2015 'தென்றல்' இதழில் பிரசுரமானது! “என்னய்யா, உங்க சவுத் இந்தியன் ஒருத்தன் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பண்ணி இருக்கான் போல? அவனப் போயி நேர்ல பார்த்து சூடா ஒரு பேட்டி எடுத்துட்டு வாய்யா” பத்திரிகை ஆபீசில் நுழைந்தவுடன் என் ஆசிரியர் என்னை விரட்டினார். சொற்பமாக விற்கும் சுமாரான பத்திரிகைதான் என்றாலும், நாங்களும் கொஞ்சம் 'கழுகு', 'பருந்து' மாதிரியெல்லாம் பறந்து பறந்து செய்திகள் சேகரித்துப் போடுவோம் என்பதால் இந்தோ அமெரிக்கன் மார்க்கெட்டில் எங்களுக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. 'நியூ இந்தியா ஜர்ன'லில் நான் சீஃப் இன்வெஸ்டிகேடிவ் ரைட்டர். வெளியில் சொல்லாதீர்கள். சில நேரங்களில் சப் எடிட்டர், ஆபீஸ் பாய் எல்லாமும் நான்தான். சம்பளமெல்லாம் ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம்தான் என்றாலும், வேலை படு சுவாரசியம், “சார், மோர்” என்று சலாம் போடவேண்டாம். பாஸுடன் வம்பளக்கலாம், நிறைய சுதந்திரம் என்பதால் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். 'வாஷிங்டன் போஸ்ட்'டில் அடுத்த வாரமே சேர்ந்து விடுவேன், ஆஃபர் லெட்டர் இருக்கி...