NAMBIAR WITH JEYALALITHA
NAMBIAR WITH JEYALALITHA நம்பியார் சாமியுடனான எனது பந்தம் அரை நூற்றாண்டுக்கும் மேலானது. அவருடைய மகன் சுகுமாரின் வகுப்புத் தோழி நான். அவரையும் அவருடைய தங்கை ஸ்நேகாவையும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல எப்போதாவது நம்பியார்சாமி வருவார். நான் திரைத்துறையில் நுழைந்தபோது, அவர் ஏற்கெனவே வில்லன்களின் ராஜ்ஜியத்தில் ஒரு அரசனாகக் கோலோச்சிக் கொண்டிருந்தார். நான் எப்போதும் தனிமையை விரும்புபவளாகவும் திரைத்துறையிலும் வெளியிலும் நண்பர்கள் விஷயத்தில் மிகவும் தேர்வு கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன். ஆனாலும், ஒரு நண்பரைவிட மேலாக, நம்பியார்சாமியை நான் எனது வழிகாட்டியாகக் கருதினேன். எனது பதினாறாம் வயதுப் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் வேண்டி அவருடைய வீட்டுக்கும் சோவின் வீட்டுக்கும் தான் நான் போனேன். அவரது செல்லப் பேரனான தீபக், அந்த மாபெரும் மனிதர் குறித்து எழுதிய புத்தகத்தைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நம்பியார்சாமியுடனான எனது வாழ்நாள் காலப் பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்குச் சில நிமிடங்கள் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்தது. நம்பியார்சாமியுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் பணியாற்றிய...