MORARJI DESAI BIOGRAPHY
MORARJI DESAI BIOGRAPHY “நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்கு போடுங்க!” ஆதங்கப்பட்ட மொரார்ஜி சோ-வின் ‘ஒசாமஅசா தொடர் ; 21 எழுத்தும், தொகுப்பும் ; மணா மிக உயர்ந்த பொறுப்பு, அதிகாரம், புகழ் எல்லாம் இருந்தும் எளிமையாக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். உண்மையிலேயே அப்படி எளிமையாக இருந்த தலைவர் மொரார்ஜி. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இப்படி ஒரு பிரதமர் இருந்தார் என்று நம்புவதற்குச் சற்று சிரமமாகக் கூட இருக்கும். டெல்லியில் இருந்த மூத்த பத்திரிகையாளரான கே.ஸ்ரீநிவாசன் மூலம் எனக்கு அறிமுகமான பல தலைவர்களில் முக்கியமானவர் மொரார்ஜி. ஜனதா கட்சி உதயமாகி இருந்த நேரம். தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு வந்திருந்தார் மொரார்ஜி. இரண்டு விஷயங்கள் என்னைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. ஒன்று – காமராஜருக்கு நெருக்கமானவன். இரண்டாவது – எமர்ஜென்சியைத் துணிந்து எதிர்த்த பத்திரிகையாளர்களில் ஒருவன். தி.மு.க.வுடன் அப்போது ஜனதா கூட்டணி வைத்திருந்தது. நான் அவரைப் பேட்டி கண்டபோது கேட்டேன். “ஊழலை எதிர்க்கிற நீங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.” சிறிதும் தயங்காமல் அதற...