CLEOPATRA VII ,EMPRESS HISTORY DIED AUGUST 12, 30 B.C
CLEOPATRA VII ,EMPRESS HISTORY DIED AUGUST 12, 30 B.C மாற்றங்களின் தேவதைகள் - 2. கிளியோபாட்ரா பெயரைச் சொன்னவுடனேயே மனதில் ஒரு சிலிர்ப்பு தோன்றுமளவிற்கு மிகப் பரிச்சயமான வரலாறு. அது தான் கிளியோபாட்ரா என்ற பெயரில் மறைந்திருக்கும் ஈர்ப்பின் ரகசியம். கருப்பழகி, பேரழகி என்றெல்லாம் அறியப்படும் கிளியோபாட்ரா உண்மையில் ஏழாம் கிளியோபாட்ரா ஆவார். உலகின் பண்டைய வரலாறுகளைத் தேடி திரிந்தால் அவை கண்டிப்பாக எகிப்து நாகரீகத்தையும் தொட்டுச் செல்லும். அத்தைகைய பாரம்பரியம் மிக்க எகிப்தின் புகழ்பெற்ற அரச குடும்பம் தாலமி வம்சம். அந்த தாலமி வம்சத்தின் ஒப்பற்ற வாரிசு தான் ஏழாம் கிளியோபாட்ரா. தாலமி வம்சத்தின் பனிரெண்டாம் தாலமியின் மூத்த மகள் தான் ஏழாம் கிளியோபாட்ரா. பனிரெண்டாம் தாலமிக்கு, பதிமூன்றாம் தாலமி, பதினான்காம் தாலமி என மேலும் இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் ஏழாம் கிளியோபாட்ராவிற்கு இளையவர்களே. கிமு 69-ல் கிளியோபாட்ரா பிறந்தார். தந்தையின் ஆட்சிக் காலத்தின் போதே அரசில் அதிகாரத்தை பகிர்ந்து ஆட்சி செய்தார். பனிரெண்டாம் தாலமியின் மறைவிற்குப் பின் அரியணையில் யாரை அமர்த்துவது எ...