KI. RAJ NARAYANAN WRITER 1923 SEPTEMBER 16 -2021 MAY 17
KI. RAJ NARAYANAN WRITER 1923 SEPTEMBER 16 -2021 MAY 17 வெய்யில்-. "ஆனந்த விகடன்" கரிசல் மக்களின் துயரங்களையும் கொண்டாட்டங்களையும், அவர்களின் அசல் மொழியிலேயே பதிவு செய்த தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராவுக்கு வயது 95. அவரைப் பற்றிய குறிப்புகளும், அவரது சில கருத்துகளும் இங்கே... * கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். (முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.) 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. * “மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்” இப்படிச் சொல்லும் கி.ரா 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * “அசட்டுத்தனங்கள் பல கொண்டதுதான் இந்த உலகமாக இருக்கிறது; அதில்தான் சுவாரஸ்யமும் இருக்கிறது”, “காதல் ஒரு தடவை மட...