father house
அப்பா வீடு! - நெகிழ்ச்சி சிறுகதை .. பக்கத்தில் கட்டிலில் வந்து அமர்ந்த மகனைப் பார்த்தார். `பகல் கனவோ’ என்றது மனக் குரல்...காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார். ``அப்பா! நல்லாருக்கீங்களா?” என்று சிரித்தபடி நின்றிருந்தான் மகன். மருமகள் கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள். ``தாத்தா” என்று ஓடிவந்தான் பேரன். மழைக்கான மேகம்கூட இன்றி வானத்தில் வெயில். ``வாங்க” என்று பேரன் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று ஃபேனின் வேகத்தை அதிகப்படுத்தினார். மருமகள் சோஃபாவில் அமர்ந்தபடி, ``இப்போ உடம்பு எப்படி இருக்கு மாமா?” என்றாள். ``ம்ம்ம்… நல்லாருக்கேம்மா. நீங்கள்ளாம் எப்படி இருக்கீங்க?” பக்கத்தில் கட்டிலில் வந்து அமர்ந்த மகனைப் பார்த்தார். `பகல் கனவோ’ என்றது மனக் குரல்.. ``நல்லாருக்கோம். அதே பிஸி. இரண்டு பேருக்கும் இன்னும் நைட் ஷிஃப்ட்தான். பகல்லாம் தூக்கத்துல போயிடுது. அஷ்வின் அத்தை வீட்லதான் இருக்கான். ...