HUMANITY.....THE BEST ,FORGET RELIGION
மனிதம் ஒன்றே போற்றற்குரியது... மனிதன் படைத்த மதங்கள் அனைத்தும் மறத்தற்குரியது... -திருப்பூர் சுகுணாதேவி- // "கிறிஸ்துவத்தில் சாதி இல்லை, பேய் இல்லை கிறிஸ்துவர்கள் ஒரே குடும்பமாய் உள்ளார்கள். கிறிஸ்துவ பைபிள் எல்லோருக்கும் பொது என்றெல்லாம் சிலர் எழுதும் போது வேடிக்கையாக உள்ளது.கிறிஸ்துவத்தில் பிரிவுகள் இல்லையா ? பிரிவு சார்ந்த பேதங்க ளும், சண்டைகளும் இல்லையா ? பின் ஏன் கத்தோலிக்கர்களும்,ப்ராட்டஸ்டுகளும் பல நூற்றாண்டு கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ? ஐரோப்பிய வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியாதா ? அயர்லாந்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றைப் படித்து பாருங்கள். பைபிள் என்பது ஏதோ யேசுவே கைப்படஎழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஒரு புத்தகம் போல்ஒரு மாயையை உருவாக்குகின்றனர் பல மத வியாபாரிகள். உண்மையில் யேசு என்று ஒருவர் இருக்கப்பட்ட தாகச் சொன்ன காலத்திற்குப் பின், பல ஆண்டுகள் கழித்து பலரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றை வைத்துத் தொகுக்கப்பட்டதுதான் "ஹோலி பைபிள்" என்று அழைக்கப்படும் "கிறிஸ்துவ பைபிள்". இன்றைய தேதியில் பல ஆயிரம் பைபிள்கள் உள்ளன. ...