HUMANITY.....THE BEST ,FORGET RELIGION








மனிதம் ஒன்றே போற்றற்குரியது...
மனிதன் படைத்த மதங்கள் அனைத்தும் மறத்தற்குரியது...

-திருப்பூர் சுகுணாதேவி-

// "கிறிஸ்துவத்தில் சாதி இல்லை, பேய் இல்லை கிறிஸ்துவர்கள்
ஒரே குடும்பமாய் உள்ளார்கள். கிறிஸ்துவ பைபிள் எல்லோருக்கும் பொது என்றெல்லாம் சிலர் எழுதும் போது வேடிக்கையாக உள்ளது.கிறிஸ்துவத்தில் பிரிவுகள் இல்லையா ? பிரிவு சார்ந்த பேதங்க ளும், சண்டைகளும்
இல்லையா ? பின் ஏன் கத்தோலிக்கர்களும்,ப்ராட்டஸ்டுகளும் பல நூற்றாண்டு கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ?

ஐரோப்பிய வரலாறு எல்லாம்
உங்களுக்குத் தெரியாதா ?
அயர்லாந்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றைப் படித்து பாருங்கள்.
பைபிள் என்பது ஏதோ யேசுவே கைப்படஎழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஒரு புத்தகம் போல்ஒரு மாயையை உருவாக்குகின்றனர் பல மத வியாபாரிகள். உண்மையில் யேசு என்று ஒருவர் இருக்கப்பட்ட
தாகச் சொன்ன காலத்திற்குப் பின், பல ஆண்டுகள் கழித்து பலரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றை வைத்துத் தொகுக்கப்பட்டதுதான்
"ஹோலி பைபிள்" என்று அழைக்கப்படும் "கிறிஸ்துவ பைபிள்". இன்றைய தேதியில் பல ஆயிரம் பைபிள்கள் உள்ளன.

மேலும் ஒரு பிரிவினரின் பைபிளை மற்ற பிரிவினர் ஏற்பதில்லை. புதிய
ஏற்பாடு என்று அழைக்கப்படும் கிறிஸ்துவ பைபிள் முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, பின்பு லத்தீன் மொழியில் மொழிபெயர்க்க
ப்பட்டு, பின்னர் லத்தீனில் இருந்து ஆங்கிலத்தில் பல விதமாக மொழி
பெயர்க்கப்பட்டு, பின் தற்போது ஆங்கிலத்தில் இருந்து தமிழில்
பலவாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவத்தில் மட்டும் 41000 பிரிவுகள்இருக்கின்றன என்கின்றனர்.

இப்படிப் பல ஆயிரம் பிரிவுகள், பல விதமான நம்பிக்கைகள். ஒருவர்
மற்றவரின் சர்ச்சுக்கு போவதில்லை.உதாரணத்திற்கு ஒரு கத்தோலிக்கர்
ஒரு ப்ராட்ஸ்டன்ட் (சி எஸ் ஐ) சர்ச்சுக்குப் போய் நான் பார்த்ததி
ல்லை. மேலும் ஒருவரின் சுவர்க்கத்தில் மற்ற பிரிவினருக்கு இடம் இல்லை.ஒருவர் மற்றவரை ஏற்பதில்லை. கத்தோலிக்க போப்
நரகத்துக்கு செல்வார் என பல பெந்தகொஸ்டுகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கலாம். இதில் ஒரே குடும்பம் என்றெல்லாம் வேறு காமெடி செய்கிறார்கள் !!

இந்துக்கள் சாதி பார்க்கிறார்கள் என்று பேசுபவர்கள், கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிவிட்டால் அது சரியாகி விடுமா என்றால் நிச்சயம்இல்லை என்பதுதான் பதில். உதாரணத்திற்கு ஒரு ஜாதி கிறிஸ்டியன், அந்த கிறிஸ்டியனோடுதான்
சம்பந்தம் பேசுகிறார். தலித் கிறிஸ்டியன் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.

எங்கே ஒழித்தீர்கள் சாதியை ? 41000 பிரிவுகளோடு பல சாதிப் பிரிவுகளும்
சேர்ந்துவிட்டன அவ்வளவே !!

அன்புதான் கிறிஸ்துவத்தின் அடித்தளம் என்று வேறு அடித்து விடுகிறார்கள்.
அமெரிக்காவில் 13.5 கோடி அப்பாவி செவ்விந்திய மக்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்களால் கொன்றுகுவிக்கப் பட்டனர். லத்தீன் அமெரிக்காவிலோ மிகக் கொடுமையான சித்ரவதை க்கு அவர்கள் ஆட்படுத்தப்பட்டு,
ஸ்பானிய, போர்ச்சுக்கீசிய‌ கிறிஸ்துவ மதவெறியர்களால்
மதமாற்றம் செய்யப் பட்டனர்.

ஆப்ரிக்காவைப் பொறுத்தவரை இவர்கள் அங்கிருந்த பல்வேறு
பழங்குடியினரை மதமாற்றியது கண்களில் ரத்தத்தை வரவழைத்து
விடும்.

"எங்கள் நாட்டுக்கு பாதிரிகள்
வந்த போது நாடு எங்களிடம்
இருந்தது, பைபிள் பாதிரிகளிடம் இருந்தது,

பைபிளைக் கொடுத்து எங்களை பிரார்த்தனை செய்யச்
சொன்னார்கள்.நாங்கள் விழிக்கத்
தொடங்கியபோது பைபிள் எங்களிடம் இருந்தது,
நாடு அவர்களிடம் போய் விட்டது"
என்று ஒரு பிரபல ஆப்ரிக்க அறிஞர்
கூறியதை நினைவு கூறுகிறேன்.

பல ஆப்ரிக்கப் பழங்குடி இனங்களை யும், மதங்களையும் கிறிஸ்துவம்
பூண்டோடு அழித்து விட்டது.ஆஸ்த்ரேலியாவிலோ கேட்கவே வேண்டாம். இவர்கள் அந்தக்கண்டத்தைப் பிடித்ததும் அங்கிருந்தபழங்குடியினரைக் கொன்று குவித்தனர். இன்று உண்மையான ஆஸ்த்ரேலியர்கள்
"இண்டிஜினியஸ் பீபிள்" என்று ஒரு புதியவார்த்தையில் அழைக்கப்படு
கின்றனர்.


ஆசியாவில் இவர்களின் வன்முறை தாண்டவம் மிகக் கொடூரமானது. உதாரணத்திற்கு "பிலிப்பைன்ஸ்"ஐப்பிடித்த ஸ்பானிய படை அங்கிருந்த
பெண்களை வரிசையில் நிற்க வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு,தொடர்ந்து வன்புணர்வு செய்து வாரிசுகளை உருவாக்கி, அதை கிறிஸ்துவநாடாய் மாற்றியது வரலாறு.

உலகிலேயே வன்முறையில் பரவிய மதத்தில் முதன்மையானது
கிறிஸ்துவம் என்றால் அது மிகையில்லை. இன்றைய காலத்தில்
வன்முறை வேலைக்கு ஆகாது என்பதால் ரொட்டிகளை வீசத் தொடங்கி யுள்ளனர்.இதெல்லாம்நம் பாரதத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு மத மாறியவர்களின் வாரிசுகள் அறியாதது, சொன்னாலும் புரியாதது." //

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER