வெங்கட் பிரபு பிறப்பு 1975 NOVEMBER 7
முன்னணி நாயகர்களை இயக்கிவிட்டு, புகழ்பெற்ற தனது பழைய கூட்டணியோடு ‘சென்னை 28 இரண்டாம் பாகம்’ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அந்தப் படத்தில் இடம்பெறவுள்ள 'சொப்பன சுந்தரி' பாடல் முன்னோட்டத்தின் படத்தொகுப்புப் பணிகளுக்கு மத்தியில் நம்மிடம் அவர் பேசியதிலிருந்து…
‘சென்னை 28' படம் முடிவடையும் இடத்திலிருந்து 2-ம் பாகத்தின் கதை தொடங்குமா?
'சென்னை 28' படப்பிடிப்பின்போதே மூன்று பாகங்கள் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டேன். அப்போதே பண்ணியிருந்தால் இதில் நடித்த பசங்க வளர வளரக் கதையும் வளர்வது போன்று பண்ணியிருப்பேன். 'சென்னை 28 - 2nd இன்னிங்க்ஸ்', 'சென்னை 28 பைனல்ஸ்' என தலைப்பு முதற்கொண்டு முடிவு செய்திருந்தேன். ஆனால், காலங்கள் மாறி நான் 'சரோஜா' பண்ண வேண்டிவந்தது. பசங்களும் வெவ்வேறு படங்களில் நாயகர்களாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'சென்னை 28' படத்தின் முடிவிலிருந்து அந்தப் பசங்களோட வாழ்க்கையில் அடுத்த எட்டு வருடங்கள் என்னவெல்லாம் நடந்தது. அதற்குப் பிறகு அவர்கள் ஏன் ஒன்று கூடினார்கள் என்பதுதான் கதை.
தயாரிப்பில் இறங்கியதன் பின்னணி என்ன?
முன்பே தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இயக்குநர் சுந்தர்.சி சார்தான் ‘பிரபு நீ படத் தயாரிப்பாளரா மாறு, நல்லாயிருக்கும்’ என்று ஆலோசனை சொன்னார். எனக்கு உண்மையில் பயம் இருந்தது. எனக்குப் பக்கபலமாக சுப்பு பஞ்சு இருந்தார். என்னோட முழுப் பொறுப்பையும் அவர் பார்த்துக்கொண்டார். தினமும் செக்கில் கையெழுத்திட வேண்டும் அது மட்டும்தான் என்னுடைய பணி.
சூர்யாவை வைத்துப் பண்ணிய 'மாஸ்’ போதிய வரவேற்பு பெறாமல் போனதற்குக் காரணம் என்ன?
நான் பண்ணும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் ரொம்பவும் உழைத்த படம் 'மாஸ்'தான். அந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 75% பேர் பிடிக்கவில்லை என்றார்கள், சிலர் உன்னோட பெஸ்ட் 'மாஸ்'தான் என்றார்கள். நிறைய பேர் தங்களின் விமர்சனத்தில் ‘வழக்கமான பழிவாங்கும் கதை’ என்று தெரிவித்திருந்தார்கள். பேய்ப் படம் என்றாலே பழிவாங்குவதுதான். ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் அதில் பண்ணியிருக்கும் நல்ல விஷயங்கள் எல்லாமே அடிபட்டுவிடும் என்று தெரிந்துகொண்டேன். என்னுடைய படங்களில் 'கோவா', 'மாஸ்' இரண்டு மட்டுமே சரியாக வரவேற்பு பெறாத படங்கள். ஆனால், அவை இரண்டும்தான் எனக்கு ரொம்பவும் பிடித்த படங்கள்.
'சென்னை 28' 2-ம் பாகத்தின் டீஸரில், யூடியூப் விமர்சகர்களைக் கிண்டலடித்திருப்பதாக ஒரு சர்ச்சை நிலவுகிறதே?
கதைப்படி சிவா கதாபாத்திரம் படத்தை விமர்சனம் பண்ணுவது போன்று வடிவமைத்திருக்கிறோம். இன்று யூடியூப் விமர்சகர்களை எடுத்துக்கொண்டால் அனைவருமே பயங்கரமாகக் கலாய்க்கிறார்கள். இயக்குநர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார், இதை எந்தப் படத்திலிருந்து சுட்டிருக்கிறார் என என்னையே பயங்கரமாகத் திட்டியிருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கலாய்த்தார்கள், நானும் பதிலுக்கு அவர்களைக் கொஞ்சம் கழுவி ஊற்றலாம் என்று பண்ணியிருக்கிறேன்.
பார்ட்டிக்குப் போகிறவர்கள் என்று உங்கள் குழுவினர் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
யார் போகவில்லை? நாங்கள் பார்ட்டிக்குப் போகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்றோம். மற்றவர்கள் சொல்வதில்லை. நான் எட்டு வருடங்கள் லண்டனில் படித்த பையன். பார்ட்டிக்குப் போவது என்பது எனக்கு சாதாரண விஷயம். ஆனால், இப்போது அனைவருக்குமே பொறுப்பு வந்துவிட்டது. முன்பைப் போல பார்ட்டி என்று சுற்றுவது கிடையாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
உங்களுடைய உதவி இயக்குநர் ரஞ்சித் இரண்டாவது முறையும் ரஜினியை இயக்க இருக்கிறாரே?
ரொம்ப அமைதியான மனிதர் ரஞ்சித். அழகாக ஓவியம் வரைவார். 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா' என 3 படங்கள் பணியாற்றினார். இப்போது அவர் ரஜினி சார் படம் பண்ணுகிறார் என்பது எனக்கு எவ்வளவு பெரிய பெருமை. இன்று என்னிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் பலரும் அவரிடம்தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவருடைய குழு, என்னுடைய குழு மாதிரிதான். 2-வது முறையும் ரஜினி சாரை இயக்கப் போகிறேன் என்பதை அவர் என்னிடம்கூடச் சொல்லவில்லை. தனுஷ் சார் அறிவித்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
லண்டனில் படித்தபோது இயக்குநராக வேண்டும் என்று நினைத்ததுண்டா?
கண்டிப்பாக இல்லை. ஒரு பெரிய நடிகனாகி ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கான எண்ணமே அப்போது கிடையாது, ஹாலிவுட் படத்தில்தான் நாயகனாக வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் நான் படித்த பல்கலைக்கழகத்தில் பிலிம் ஸ்கூல் இருந்தது. அங்கு படித்தவர்கள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் மூலமாக ஹாலிவுடில் பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் என் திட்டம். சந்தர்ப்ப சூழ்நிலையால் இயக்குநராகிவிட்டேன். தமிழில் நாயகனாக நடித்ததில் 'பூஞ்சோலை' என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. நாட்டு மக்களின் நலன் கருதி வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.
'யு' சான்றிதழ் படம் பண்ணினால்தான் வரிச்சலுகை கிடைக்கும் என்ற நிலை வந்திருப்பது பற்றி..
இங்கு பிரச்சினை என்பது வரிச்சலுகைதான். மற்ற மாநிலங்களைப் போல, ஒரு குறிப்பிட தொகைக்கு மேல் செலவிட்டுப் பண்ணும் படங்களுக்கு இவ்வளவு வரி, மற்ற படங்களுக்கு இவ்வளவு வரி என்று கொண்டுவர வேண்டும். படங்களுக்கு வரிச் சலுகையே கிடையாது என்ற சூழல் வந்துவிடும். குழந்தைகள் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றை முன்வைத்து பண்ணும் படங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதில் தவறில்லை. தமிழில் பெயர், இந்த மாதிரியான வசனங்கள், காட்சிகள்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு இயக்குநரின் யோசிக்கும் திறமையை ஏன் ஒரு வட்டத்துக்குள் சுருக்குகிறீர்கள்?. தயாரிப்பாளர்கள் படத்தை விற்கும்போது கஷ்டமாகிறது. தணிக்கையை இந்திய அளவில் ஒரே குழுவாக மாற்றிவிட்டால் பிரச்சினை இருக்காது என்பது என் கருத்து.

No comments:
Post a Comment