THENISAI THENDRAL DEVA
BORN NOVEMBER 20,1950
தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும்.
இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு தன்னுடைய சினிமா இசை பயணத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ முன்பெல்லாம் பாடகர்கள் வாய்ப்பு கேட்பதே சிரமமாக இருக்கும், பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வருகிறார்கள். அந்த காலத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். நான் தொடக்கத்தில் தூர்தர்ஷனில் அலுவலகத்தில் புளோர் அசிஸ்டெண்ட் வேலை பார்த்தேன். அப்படி என்றால் ஒரு மீட்டிங்
நடக்கிறது என்றால் அதில் கலந்துகொள்ள வருபவர்கள் அமர்வதற்காக நாற்காலி எடுத்து போடும் வேலை. மேடையை அலங்கரிக்கும் வேலை, இதுதான் எங்களுடைய வேலை. என்னுடைய சகோதரர்கள் சபேஷ், முரளி அனைவரும் ரெக்கார்டிங்காக அங்கு வருவார்கள், அவர்களுக்கும் நான் நாற்காலி எடுத்து போட்டிருக்கிறேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர்களெல்லாம் சினிமாவுக்கு உடனடியாக வந்துவிட்டார்கள். ஆனால், நான் லேட்டாகதான் வந்தேன்.
என்னுடைய நாற்பதாவது வயதில்தான் சினிமாவுக்குள் வந்தேன். என் முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் என்னிடம் வந்து ஒரு பாடகர் புல்லட்டில் வருவார். அவர் எப்படி பாடினாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் இசையமைப்பாளர். அவர் பணம் கொடுத்துத்தான் ரிக்கார்டிங்கே நடக்கிறது என்றார். புல்லட்டில் வந்தவர் எனக்கு முன்னமே தெரிந்தவர். அப்போது மயிலாப்பூரில் பெரிய மளிகை கடை ஒன்று வைத்திருப்பார். அவருடைய கடைக்காக வைத்திருக்கும் பெரிய பிளெக்ஸில் கீழே ரூ.150க்கு கச்சேரி செய்து தரப்படும் என்று எழுதியிருப்பார். ரெக்கார்டிங்கு வந்தவுடன் அவர், நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பாடினார். நானும் தயாரிப்பாளர் சொன்னதுபோல் மனசாட்சியை விற்று ரொம்ப நன்றாக இருக்கிறது என்று அவரை பாராட்டினேன்.
அந்த தயாரிப்பாளர் எனக்கு ஒரு அட்வான்ஸ் தருவதாக சொன்னார். நானும் நிறைய பணம் தருவார் என்று எதிர்பார்த்து உண்மையாக பல கற்பனையை மனதிற்குள் வைத்திருந்தேன் புஹாரி ஹோட்டலுக்கு போய் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ஹேப்பியாக அன்றைய நாளை என்ஜாய் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வெறும் எட்டணா கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் அந்த படத்துக்கு கதாநாயகன். ஆனால் படம் வெளிவரவில்லை. இப்போது முன்னுக்கு வர துடிப்பவர்களுக்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பது தெரிவதற்காக இதை சொல்கிறேன். ஆரம்பகாலத்தில் நான் இசயமைத்த 13 படங்கள் இன்னும் திரைக்கு வர்வில்லை, நான் இசையமைத்த பதினான்காவது படம்தான் ரிலீஸானது” என்று கூறினார்.
`` `வாங்க உட்காருங்க' லாஜிக் சொன்னேன்; `ரா ரா ராமையா' பாட்டு உருவாச்சு!’’ - இசையமைப்பாளர் தேவா
மா.பாண்டியராஜன்
தமிழ் சினிமாவின் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு நபர், இசையமைப்பாளர் தேவா. இவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அவருடன் ஓர் உரையாடல்.
``என் வாழ்க்கையில மறக்கவே முடியாத படம், `அண்ணாமலை’. பாலசந்தர் சார் என்னை அழைச்சு, `என் தயாரிப்புல ஒரு படம் நீ பண்ணணும். இதை நீ ரொம்ப நல்லாப் பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு ஸ்டைலில் இல்லாம பல ஸ்டைல்ல இந்த ஆல்பத்தைப் பண்ணு’ன்னு சொல்லி, `அண்ணாமலை’ வாய்ப்பைக் கொடுத்தார். ஒரு இன்ட்ரோ சாங், ஒரு மெலடி சாங், ரெண்டு ஃபோக் சாங், ஒரு வெஸ்டர்ன் சாங்னு இந்த ஆல்பத்தை ரொம்பவே மிக்ஸ் பண்ணித்தான் மியூசிக் போட்டேன். இந்தப் படத்தோட 6 பாடல்களில் அஞ்சு பாடல்களை எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையா பார்த்து, பார்த்து பண்ணினேன். ஆனால், ஒரு பாட்டுக்கு மட்டும் என்னை பம்பரமா ஓடவெச்சார், பாலசந்தர் சார். ஒருநாள் ராத்திரி எனக்கு போன் பண்ணி, `ரஜினியும் குஷ்புவும் நாளை மறுநாள் கால்ஷீட் கொடுத்திருக்காங்க. எனக்கு நாளைக்கு சாயங்காலம் ஒரு பாட்டு வேணும்’னு கேட்டார். `சார்... இது ரஜினி சார் படம். அப்படி அவசரமா பாட்டு போட்டு, அது சரியில்லாம போச்சுனா நல்லா இருக்காது’ன்னு சொன்னேன். `உன்னால முடியும்டா. இப்போவே ஆர்கெஸ்ட்ராவுக்குச் சொல்லிடு. காலையில சந்திப்போம்’னு சொன்னார். எனக்கு எப்படிப்பட்ட டியூன் வரப்போகுதுனே தெரியாம, எல்லா வாத்தியங்களையும் கொண்டுவரச் சொல்லிட்டேன்.
காலையில பாலசந்தர் சார், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, வைரமுத்து, நான், இசைக் கலைஞர்கள் எல்லோரும் ஆஜர் ஆகிட்டோம். நான் ஒவ்வொரு டியூனா போட்டுக்கிட்டே இருந்தேன். டக்குனு ஒரு டியூன் ரொம்ப நல்லா வந்துச்சு. உடனே வைரமுத்து அதுக்கு வரிகள் எழுதினார். அதுதான், `ரெக்கக்கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’ பாட்டு. 12 மணிக்குள்ள மொத்தப் பாட்டுக்கான வரிகளும் ரெடி. எஸ்.பி.பி-யையும், சித்ராவையும் வரவெச்சு பாட்டையும் ரெக்கார்டு பண்ணியாச்சு. ஆர்கெஸ்ட்ராவை வாசிக்க வெச்சு 3 மணிக்கே மொத்தப் பாட்டையும் முடிச்சுக் கொடுத்துட்டேன். பாலசந்தர் சாருக்கு செம ஹேப்பி. அவசரமா பண்ணினாலும், இந்தப் பாட்டு செம ஹிட். பாடல்கள் மட்டுமல்லாமல், இந்தப் படத்துக்காக நான் பண்ணின பின்னணி இசையும் நல்லா ரீச் ஆச்சு
இதேமாதிரிதான், `பாட்ஷா’ படமும் என் கரியரில் ரொம்ப முக்கியமானது. மாணிக்கம், பாட்ஷானு ரெண்டு கெட்-அப்களில் ரஜினி சார் வருவார். அதில், மாணிக்கம் கேரக்டருக்குதான் அதிக பாடல்கள் இருக்கும். பாட்ஷா கேரக்டருக்கு ரெண்டு பாடல்தான், அதில் ஒண்ணு தீம் சாங். `ரா ரா ராமையா’ பாட்டுதான் அவருக்கான ஒரே பாட்டு. இந்தப் பாட்டைப் பண்ணும்போது, `ஜாலியான கமர்ஷியல் பாட்டா இது இருக்கக் கூடாது. கொஞ்சம் தத்துவம் இருக்கிற மாதிரி எழுதுங்க’னு வைரமுத்துகிட்ட இயக்குநர் சொன்னார். அவரும், `எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ’னு முதல் வரியிலேயே மேட்டரைச் சொல்லி, பாட்டை எழுதிட்டார். நான் அவர்கிட்ட, ``என்ன சார் இதுல ஒரு `வாங்க உட்காருங்க’ இல்லை"ன்னு சொன்னேன். `அதென்னங்க, வாங்க உட்காருங்க’னு கேட்டார். `ஆசை’ படம் பண்ணும்போது டைரக்டர் வஸந்த் சார்தான் எனக்கு, `வாங்க உட்காருங்க’ விஷயத்தை அறிமுகப்படுத்தினார். `யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா, `சொல்லுங்க... என்ன விஷயத்துக்காக வந்தீங்க’ன்னு உடனே கேட்க மாட்டோம்ல. `வாங்க, உட்காருங்க, என்ன சாப்பிடுறீங்க’ன்னு கேட்டுட்டுதானே, `என்ன விஷயமா வந்தீங்க’னு கேட்போம். அதேமாதிரிதான் ஒரு பாட்டு ஆரம்பிக்கும்போது, உடனே மெயின் விஷயத்தைச் சொல்லிடாம, `வாங்க உட்காருங்க’ போடணும்னு சொன்னார். அதை நான் வைரமுத்துகிட்ட சொன்னதுக்கு அப்பறம், `ரா... ரா ரா... ராமையா, எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா’னு எழுதினார். "
``முதல்வர் கமல்ஹாசனின் முதல் நாள்'' - விகடன் பிரஸ்மீட்டில் நடந்தது என்ன?! #VikatanPressMeet #Kamal
``நான் யாரிடமும் உதவியாளரா வேலை பார்க்காம சினிமாவில் இசையமைப்பாளர் ஆனேன். ஆனா, சின்ன வயசில் இருந்தே எம்.எஸ்.வி ஐயாவின் பாடல்களைத்தான் கேட்டும், பாடியும் வளர்ந்தேன். இன்னைக்கும் நான் வாக்கிங் போகும்போதெல்லாம் அவரோட பாட்டைக் கேட்டுக்கிட்டுதான் போவேன். அந்தளவுக்கு நான் நேசிக்கிற ஒருத்தர்கிட்ட இருந்து எனக்கு `தேனிசைத் தென்றல்’னு பட்டம் கிடைச்ச தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு இந்தப் பட்டத்தைக் கொடுத்தார். நான் தூர்தர்ஷன் சேனலில் செட் போடும் ஆர்ட் டிபார்ட்மென்டில் வேலை பார்த்தேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு இசைமேல் ஆர்வம் இருந்ததால், தன்ராஜ் மாஸ்டர்கிட்ட இசை கத்துக்கிட்டேன். அதை வைத்து 150-க்கும்மேல பக்திப் பாடல் ஆல்பம் போட்டேன். தூர்தர்ஷனில் வேலை பார்த்த எம்.எஸ்.பெருமாள் சார்தான் என்னை பக்தி ஆல்பம் போடச்சொல்லி ஊக்குவித்தார்.
நான் போட்ட பக்தி ஆல்பங்களைப் பாராட்டி, திருவேற்காடு கோயிலில் எனக்குப் பாராட்டு விழா வெச்சாங்க. அந்தப் பாராட்டு விழாவில் எம்.எஸ்.வி ஐயாவை வைத்து எனக்கு `தேனிசைத் தென்றல்’ பட்டத்தைக் கொடுக்க வெச்சாங்க. அந்தப் பட்டத்தைக் கொடுக்கும்போது எம்.எஸ்.வி ஐயா, `தேவாவுக்குப் பட்டம் கொடுக்காதீங்க, யாராவது படம் கொடுங்க. அவன் நல்லா மியூசிக் பண்ணுவான்’னு சொன்னார். ஏன்னா, அதுவரை எனக்கு 13 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்து, அந்தப் படங்களெல்லாம் அடுத்தடுத்து ட்ராப் ஆகிட்டிருந்து. ஒரு கட்டத்தில் `தேவா ஒரு படத்தில் கமிட்டானா, அந்தப் படம் ட்ராப் ஆகிடும்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதனாலேயே யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கல. என்னை வெச்சுப் படம் எடுக்க வந்தவங்க, பணம் இல்லாம படத்தை ட்ராப் பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா காரணம். ஆனால், எம்.எஸ்.வி ஐயா அந்த மேடையில் சொன்னதுக்கு அப்பறம் ஒரு வாரத்திலேயே எனக்கு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படம் வெற்றிகரமா ரிலீஸும் ஆச்சு.’’
இசையமைத்த திரைப்படங்களில் சில[தொகு]
தமிழ் திரைப்படங்கள்[தொகு]
திரையில் தோன்றியவை[தொகு]
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1998 | உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் | அவராகவே |
1999 | சின்ன ராஜா | அவராகவே |
2004 | அடி தடி | "தகடு தகடு" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2009 | மோதி விளையாடு | "மோதி விளையாடு" பாடலில் சிறப்புத் தோற்றம் |
No comments:
Post a Comment