Tuesday 19 November 2019

CLARK GABLE , ACTOR MADE OF TIME MACHINE



CLARK GABLE , ACTOR MADE OF TIME MACHINE



ஹாலிவுட் ஸ்டார்ஸ்' என்ற ஆங்கில நுாலிலிருந்து: அக்காலத்தில், உலகப் புகழ்பெற்ற கனவுக் கன்னியாக திகழ்ந்தவர், நடிகை, சோபியா லாரன்ஸ். இவருடன், ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார், கிளார்க் கேபிள் என்ற நடிகர்.
ஒரு நாள் படப்பிடிப்பில், இயக்குனர், 'ஸ்டார்ட்' என்று சொன்னதும், சோபியாவை முத்தமிடத் துவங்கினார், கிளார்க். ஐந்து வினாடிகளுக்கு பின், அவரது கைக் கடிகாரத்தில் அலாரம் அடித்தது. அவ்வளவு தான்... சோபியாவின் கரங்களை விலக்கியவர், 'ஓ... மணி ஐந்து ஆகிவிட்டது...' என்று கூறியபடியே வேகமாக புறப்பட்டு விட்டார்.
சோபியா லாரன்சை முத்தமிடும் காட்சிகளில், டைரக்டர், 'கட்' சொன்ன பின்பும், அவரை விட்டு விலக மாட்டார்கள், சில நடிகர்கள். சோபியா லாரன்ஸ் சும்மா சும்மா கிடைப்பாரா என்ன!
ஆனால், இவரோ, பாதியில் ஓடி விட்டார்.

அவரை பற்றி எல்லாருக்கும் தெரியும்; காலை, 8:00 மணிக்கு, 'மேக் - அப்' அறைக்குள் வருவார்; 9:00 மணிக்கு செட்டில் தயாராக இருப்பார். மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு போய் விடுவார்.
'என்னை முத்தமிடும் போது கூடவா பாதியில் போக வேண்டும்...'என நினைத்த சோபியா, இதை, தன் பெண்மைக்கு ஏற்பட்ட இழுக்காக எண்ணி, குமுறியவர், கோபமாக சென்று விட்டார்.
இரவு முழுதும் இதுபற்றி யோசித்தவர், 'கிளார்க் கேபிள் செய்தது தான் சரி...' என்பது புரிய, காலையில், அவரது, 'டைம் சென்ஸ்' குறித்து பாராட்டினார். இதுபற்றி, தன் வாழ்க்கை வரலாற்றில், 'கிளார்க் கேபிளுக்கு அன்று முக்கியமான புரோகிராம்; மணி, 5:30க்கு அமெரிக்காவில் இருக்கும் மனைவியிடமிருந்து டிரங்கால் வரும்; அதை தவிர்க்க முடியுமா என்ன!

'கிளார்க் திட்டமிட்ட வாழ்க்கை நடத்துபவர்; படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட தாமதமாக வந்ததில்லை. தாமதமாகும் என்று முன்கூட்டியே தயாரிப்பாளர் சொல்லி விட்டால், அன்று, வேறு நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ள மாட்டார்.
'ஒரு தடவை கூட வசனத்தை மறக்காத நடிகர்; மறுநாள் பேச வேண்டிய வசனத்தை, முதல் நாள் இரவு, 8:00 மணிக்கே பாடம் செய்யத் துவங்கி விடுவார். பலவிதமாக பேசி நடித்து பார்த்துக் கொள்வார். ஒரு வசனத்தை இரண்டு விதமாக பேசலாம் என்று தோன்றினால், அவற்றை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து, மறுநாள் காலை, இயக்குனரிடம் போட்டுக் காட்டுவார்; டைரக்டர் தேர்ந்தெடுப்பதை பேசுவார்...' என்று கூறியுள்ளார், சோபியா லாரன்ஸ்.

No comments:

Post a Comment