Tuesday 12 November 2019

CHEN QUANCHENG ,CHINESE ACTIVISTS BORN 1971 NOVEMBER 12,



CHEN QUANCHENG ,CHINESE ACTIVISTS 
BORN 1971 NOVEMBER 12,



சென் குவாங்செங் (பிறப்பு 12 நவம்பர் 1971) சீனாவைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான உரிமைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர். சிறுவயது முதலே கண் பார்வை இழந்த சென் தாமாகவே சட்டம் படித்தவர். பெண்கள் மற்றும் வறியவர்களின் உரிமைக்காகப் போராடும் இவர் வெறுங்கால் வழக்கறிஞர் என அழைக்கப்படுகிறார். அரசின் குடும்பநலத் திட்டங்களின் பெயரில் நடைபெறும் அதிகார மீறல்களையும் கட்டாயக் கருக்கலைப்புக்களையும் எதிர்த்துப் போராடி வருகிறார்.இவர் சீனாவின் சிற்றூர்களின் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளியுலகுக்கு கொண்ணர்ந்ததற்காக அறியப்படுகிறார். இவர் அமெரிக்க ரைம் இதழோடு சீனாவின் ஒரு பிள்ளை கொள்கையை விமர்சித்து, குறிப்பாக காலம் தாழ்த்திய கருக்கலைப்பை எதிர்த்துப் பேசியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் வேறு குற்றங்களுக்காக இவரை 4 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். 2010 வெளியே வந்த இவர், சீனக் காவல்துறையின் வீட்டுக் கண்காணிப்பில் இருந்தார். 2012 ஏப்பிரல் மாதம் இவர் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் கோரியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[1] பின்னர் தொடர்ந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்பு 2012 மே 19 ம் திகதி இவர் ஐக்கிய அமெரிக்காவில் வந்திறங்கினார்.

சீனாவின் கண் பார்வையற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரான சென் குவாங்செங் அவர்கள் தான் தஞ்சமடைந்திருந்த அமெரிக்க தூதரகத்தில் இருந்து தற்போது வெளியேறியிருக்கிறார்.

தனக்கு மருத்துவ உதவி தேவை என்று கூறி அங்கு தஞ்சமடைந்த அவர், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தற்போது வெளியேறியுள்ளதாக, ஒரு அமெரிக்க தூதரக பேச்சாளரும், சீன அரச ஊடகமும் உறுதி செய்திருக்கின்றன.

சிரியா மற்றும் வணிக விவகாரங்கள் குறித்து அமெரிக்க அரசுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கும் சீன அரசுக்கும் இடையே பேச்சு நடக்கவிருந்த நிலையில் சென் அவர்கள் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

முன்னதாக சீனா அவர் அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்தமை குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவர் தனது நாடான சீனாவில் சுதந்திரமாக வசிக்க அனுமதிக்கப்படுவார் என்ற உறுதி வழங்கப்பட்டதை அடுத்தே அவர் அமெரிக்க தூதரகத்தில் இருந்து மருத்துவமனை ஒன்றுக்கு சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

தனது சிறுவயதிலேயே கண்பார்வையை இழங்த சென் குவாங்செங் அவர்கள்,


ஷடொங் மாகாணத்தில் லின்யீ என்னும் இடத்தில் சீனாவின் ''ஒரு குழந்தை'' திட்டத்துக்காக பெண்கள் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டமை, நிரந்தரமாக கருவுறும் தகமையை இழக்கச் செய்யப்பட்டமை ஆகிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி அதற்கெதிராக போராட்டங்களை நடத்தியவர் அவர்.

அதற்காக, போக்குவரத்துக்கு இடையூறு செய்தமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு, அவர் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ச்சியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் .

ஆயினும் தனது நண்பர்களின் துணையினால், வீட்டுக்காவலில் இருந்து தப்பித்து அவர் அமெரிக்க தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

படத்தின் காப்புரிமைREUTERS
சீனாவைப் பொறுத்தவரை அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகமான விமர்சனங்களை சகித்துக்கொள்வதில்லை. விமர்சகர்கள் பலவந்தமாக நாவடக்கப்படுவார்கள்.

நோபல் பரிசை வென்ற லியு ஷியாபோ அவர்கள் அரசியல் மாற்றம் கோரியதற்காக 11 வருடங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஆகவே சென்னும் தொடர்ந்தும் அநீதிக்கு எதிராகப் பேசத்தொடங்கினால், சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படுவது அங்கு சிரமமே.

அவர் சுதந்திரமான சூழலில் வாழ அனுமதிக்கப்படுவார் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால், அது மீறப்பட்டால், அமெரிக்காவுக்கும் அது சிக்கலாகிவிடும்.

சீனா வழங்கியதாகக் கூறப்படுகின்ற உறுதி மொழியை தொடரச் செய்வதற்கான சக்தியும் அமெரிக்காவுக்கு இருக்கிறது என்று கூறமுடியாது.


No comments:

Post a Comment