Monday 4 November 2019

NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS DIED 2007 AT AGE OF 44




NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS  DIED 2007 AT AGE OF 44


சினிமா திரை உலகில் 80ஸ் கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் தான் நடிகை நிஷா நூர். கலக்கியவர் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தவர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிக்கு பேர் போன சில்க்குக்கு பிறகு கவர்ச்சி நாயகி என்று தான் நிஷாவை அழைப்பார்கள். மேலும், நிஷா அவர்கள் அதுவே(கவர்ச்சி) தன்னுடைய வாழ்க்கை எனவும், பாதை எனவும் உறுதி செய்து அதன் வழியிலேயே கண்ணை மூடிக் கொண்டு சென்றார். அதுமட்டும் இல்லாமல் நிறைய தவறான பழக்க வழக்கங்கள் செய்ய தொடங்கினார். அந்த பழக்கவழக்கங்களினால் தான் நடிகை நிஷா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்காவில் கவனிப்பு இன்றி பெண் ஒருவர் கிடந்து உள்ளார் என்றும், அந்த பெண்ணின் மீது எறும்புகள்,ஈ மொய்க்கும் அளவிற்கு இருந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிறகு தான் தெரிந்தது அது நடிகை நிஷா நூர் என்பது.

நடிகை நிஷாவின் சொந்த ஊர் நாகூர். நிஷாவிற்கு அப்பா, அம்மா, பெரியப்பா, அத்தை, மாமா என ஒரு பெரிய குடும்பம் பட்டாளமே உள்ளது. அவர்களுடைய சொந்த குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் நிஷா. மேலும்,தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை நிஷா. இவர் தமிழ் சினிமா உலகில் ‘கல்யாண அகதிகள்’ என்னும் படத்தின் மூலம் புகழ்தான் அதிகம் பெற்றார். இவர் “டிக் டிக் டிக், முயலுக்கு மூன்று கால். இளமை இதோ இதோ. மானா மதுரை மல்லி. எனக்காகக் காத்திரு” போன்ற பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும்,அவர் நடித்துக்கொண்டே சில படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். பின் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இவர் இணைந்துள்ளார் என்ற தகவலும் தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து நிஷா தவறான பழக்கத்தினால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். பின் எய்ட்ஸ் நோய் அவரது இளமையையும், உடலையும் உருக்குலைத்து விட்டது என்றும் சொல்லலாம். நிஷா எய்ட்ஸ் விட்டது பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்தவுடன் அவர் குடும்பம் அவரை வெளியே துரத்தி விட்டது.பின்னர் நிஷாவை கவனிக்க ஆட்கள் இல்லாமல்,உண்ண சாப்பாடும் இல்லாமல் ஒரு அனாதையாக வீதியில் கிடந்தார்.மேலும், நிஷா நூர் சுமார் ஆறு நாட்களுக்கும் மேல் அனாதையாக பரிதாபமான நிலையில் கிடந்துள்ளார். அப்போது தான் சில பேருக்கு மட்டும் நிஷாவை அடையாளம் தெரிந்தது. அந்த பெண் 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமா நடித்த நடிகை நிஷா நூர் என்று தெரிந்தது. 

மேலும், இவருடைய நிலைமையைப் பார்த்து உள்ளூர் மக்களும், செய்தியாளர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். இதை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் உரிமை இந்தப் பிரச்சினையைச் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். பின் அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் ,அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். பின்பு சில காலத்திற்கு பிறகு நிஷா உடல் நலிவடைந்து எறும்புகள், பூச்சிகள் மொய்க்க கூடிய அளவில் அவருடைய நிலைமை இருந்தது. அவர் அனாதையாக சாலையிலேயே இறந்து கிடந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், 2007 ஆம் ஆண்டு நிஷா நூர் அகாலமரணம் அடைந்தார் என்றும் தெரியவந்தது. அப்போது அவருக்கு வெறும் 44 வயது தான்.

Nisha Noor was a popular South Indian actress. She was mainly active in Tamil and Malayalam films. She also acted in few Telugu and Kannada as well
Career
Nisha Noor was popular for her roles in the films like Kalyana Agathigal (1986) and Iyer the Great (1990). She acted in several other films like Tik Tik Tik (1981), the critically acclaimed Chuvappu Naada, Mimics Action 500, Inimai Idho Idho etc. She was at the peak of her career during 1980 to 1986 and worked with directors such as K. Balachander, Visu and Chandrashekar.

Noor died in 2007.[1]

Partial filmography
Tamil
Mangala Nayagi (1980)
Muyalakku Moonu Kaal (1980)
Enakkaga Kaathiru (1981)
Tik Tik Tik (1981)
Manamadurai Malli (1982
Inimai Idho Idho (1983)
Aval Sumangalithan (1985)...Stella
Sri Raghavendrar (1985)
Kalyana Agathigal (1986)
Aval Oru Vasantham (1992)
Malayalam
Chuvappu Naada (1990)
Mimics Parade (1990)
Iyer the Great (1990)
Mimics Action 500 (1995)

No comments:

Post a Comment