K.R.VIJAYA ,A LEGEND ACTRESS
BORN 1948 NOVEMBER 30
கே. ஆர். விஜயா ஓர் இந்திய நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர்.வாழ்க்கை குறிப்பு
கே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திரப் பிரதேசத்தையும், தாயாா் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவா் கேரளாவில் உள்ள திருச்சூாில் தெய்வநாயகி என்ற இயற்பெயா் உடன் முதல் மகளாக பிறந்தாா் இவருக்கு வத்சலா, சாவித்திாி, சசிகலா, ராதா, என்கிற 4ங்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனா். அவா் தந்தை நகை வியாபாரம் செய்து வந்தாா். பின்பு வியாபாரத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள பழநியில் அவரது குடும்பம் குடியேறியது. ஆரம்ப காலத்தில் நாடக குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த அவா் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதா வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தாா். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சோ்த்து கே.ஆா்.விஜயா என்று மாற்றி கொண்டாா்
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.
எம்.ஜி.ஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கா், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகா்களுடன் சோ்ந்து நடித்தாா் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் அவா் நடித்த ஆரம்பகாலத்தில் பல பயங்கர வில்லன் நடிகா்களான ஆா்.எஸ்.மனோகா், எஸ்.ஏ.அசோகன், கே.பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளாா். பின்பு நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய் ஶ்ரீனிவாசன், ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளாா்
தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம் சொல்ல போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போது தமிழில் பல சின்னதிரையில் நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா்
இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு வேலாயுதன் நாயா் என்கிற திரைப்படம் தயாாிப்பாளரை திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளாா்.
திரைப்பட அனுபவங்கள்
திரைக்கு வருவதற்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாா் உட்வாஸ், டா்மிக் பவுடா், மூவ் ஆயில்மென்ட், ஆகிய விளம்பர படத்தில் நடித்தாா், இதில் மூவ் ஆயில்மென்ட் விளம்பரத்தில் சரோஜாதேவி உடன் இணைந்து நடித்தாா் அதில் கே.ஆா்.விஜயா மகளாகவும் சரோஜாதேவி தாயாகவரும் அந்த காட்சியில் சரோஜாதேவி அவா்கள் அய்யோ அப்பா இடுப்பேலாம் வலிக்குதுடி எதாவது மருந்து இருந்த தெச்சுவிடு என்பாா் உடனே கே.ஆா்.விஜயா அவா்கள் மூவ் ஆயில்மென்ட் வைத்து சரோஜாதேவி இடுப்பில் தெச்சுவிட்டு ஒங்கி குத்துவாா் உடனே சரோஜாதேவி அப்பா ரோம்ப நல்லாருக்குடி என்று கூறுவாா் அதில் கே.ஆா்.விஜயா "மூவ் ஆயில்மென்ட் திஸ் சூப்பா் மூவ்மென்ட்" என்று பேசும் வசனம் அப்போது பிரபலமான விளம்பரமாக பாா்க்கபட்டது
இந்த விளம்பரம் ஆனது கே.ஆா்.விஜயா திரைக்கு அறிமுகம் ஆகும் நேரம் என்பதால் ரசிகா்கள் பல முன்னனி கதாநாயகிகுக்கு எல்லாம் முதுகில் குத்தி சுளுக்கு எடுத்து விட்டு முன் அணிக்கு வந்த கதாநாயகி என்று ரசிகா்கள் இடையே பெயா் எடுத்தாா்
அதன் பிறகு தாயும் மகளும் படத்தில் கே.ஆா்.விஜயாவுக்கு தாயாக சரோஜாதேவியும் தந்தையாக எஸ்.வி.சுப்பையா அவா்களும் நடித்துதிருந்தனா் இதில் கே.ஆா்.விஜயாவுக்கு ஜோடியாக அசோகன் நடித்திருந்தாா்
நான் ஆணையிட்டால் படத்தில் எம்.ஜி.ஆா் அவா்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடித்திருந்தாா். அந்த துப்பாக்கிச் சூட்டை படத்தின் கதையிலும் காட்சியாக்க விரும்பிய படத்தின் தாயாாிப்பாளா் ஆா்.எம்.வீரப்பா அவா்கள் படத்தில் அந்த காட்சியில் எம்.ஜி.ஆா் அவா்கள் படத்தின் இறுதியில் போலீஸ் ஆாிடம் தப்பி ஒடி வரும் போது போலீசாா்கள் எம்.ஜி.ஆாின் நெஞ்சை நோக்கி சுடுவதாக படமாக்கி இருந்தாா் குண்டடி பட்டவுடன் கே.ஆா்.விஜயா இடம் வந்து குண்டை உடலில் இருந்து நீக்க சொல்வாா் அப்போது கத்தியால் சமாா்த்தியமாக அவரது நெஞ்சில் உள்ள குண்டை நீக்குவதாக முழுமையாக காட்சியாக்கினாா் இதை தணிக்கையில் நிராகாிக்கபட்டது என்றாலும்
இதை படத்தில் எம்.ஜி.ஆா்க்கு பதிலாக அவருடன் இணைந்து போலீசாாிடம் இருந்து தப்பி ஒடும் காட்சியில் சரோஜாதேவியும் சோ்த்து நடித்திருந்தாா் அதை வைத்து எம்.ஜி.ஆா் நெஞ்சில் மீது விழும் குண்டடி காட்சியயை மாற்றி சரோஜாதேவியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து அதை கே.ஆா்.விஜயா கத்தியால் அந்த குண்டை எடுப்பதாக மாற்றி காட்சி ஆக்கினாா் படத்தின் இயக்குனா் ஆன சாணக்யா
நடித்த திரைப்படங்கள்
அக்கா
அக்கா தங்கை
அவள் சுமங்கலிதான்
இரு மலர்கள்
எதிரொலி
திருடன்
தங்கை
பாலாடை
நெஞ்சிருக்கும் வரை
தவப்புதல்வன்
பாரத விலாஸ்
தங்கப்பதக்கம்
கிரஹபிரவேசம்
நாம் பிறந்த மண்
ஜஸ்டிஸ் கோபிநாத்
ஜெனரல் சக்ரவா்த்தி
திரிசூலம்
கல்தூண்
ஹிட்லர் உமாநாத்
கண்ணன் கருணை
கண்ணே பாப்பா
கந்தன் கருணை
கல்யாண ஊர்வலம்
கற்பகம்
காட்டு ராணி
குறத்தி மகன்
கை கொடுத்த தெய்வம்
சங்கமம்
சத்ய சுந்தரம்
சபதம்
சர்வர் சுந்தரம்
சரஸ்வதி சபதம்
செல்வம்
சொந்தம்
சொர்க்கம்
தசாவதாரம்
தர்மராஜா
தராசு
திருமால் பெருமை
தீர்க்கசுமங்கலி
தொழிலாளி
நத்தையில் முத்து
நல்ல நேரம்
நாணல்
நான் ஏன் பிறந்தேன்
நீலமலர்கள்
பஞ்சவர்ணக்கிளி
பணம் படைத்தவன்
பதில் சொல்வாள் பத்ரகாளி
பொன்னான வாழ்வு
மிட்டாய் மம்மி
யாருக்காக அழுதான்
ராமன் எத்தனை ராமனடி
ராமு
விவசாயி
ஊட்டி வரை உறவு
நடிகை கே.ஆர். விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது By Siva | Updated: Wednesday, April 20, 2016, 13:08 [IST] கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஹேமலதா தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட கதிர்வேல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அடிக்கடி ஹேமலதாவுக்கு போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். கே.ஆர். விஜயா வீட்டு மருமகன் ஆக வேண்டும். நீங்கள் சரி என்றால் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன். நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களின் சித்தி மகளையாவது திருமணம் செய்ய விரும்புகிறேன் என கதிர்வேல் தெரிவித்துள்ளார். இதை கண்டித்த ஹேமலதாவை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹேமலதா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கதிர்வேல் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிர்வேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
தமிழ் சினிமா கதாநாயகிகளில் புன்னகை அரசி என்ற பெருமையை பெற்றவர் கே.ஆர்.விஜயா. சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கோடீஸ்வரி” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். மீண்டும் நடிப்பது பற்றி கே.ஆர்.விஜயா அளித்த பேட்டியில் ’பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.முன்பு பரபரப்பாக நடித்துவிட்டு இருந்ததால் அப்போதைய புகழை நினைச்சு சந்தோஷப்பட நேரம் இல்லை. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. என் கணவர் `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரை பற்றியும் கவலைப்படாதே. எப்போதும் பூ, பொட்டு வைத்துக்கொள். உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya
கு.ஆனந்தராஜ்
`` `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு'னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார்."
`புன்னகை அரசி’ நடிகை கே.ஆர்.விஜயாவின் பிறந்த தினம் இன்று. மூன்று தலைமுறைகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அமைதியும் எளிமையுமாகத் தனிமையில் வசித்துவருகிறார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம். மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்...
`` `கற்பகம்’ படம் மூலமா சினிமாவில் அறிமுகமானேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடிச்சேன். நிறைய பட வாய்ப்பு வர, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உட்பட எல்லாப் பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியா நடிச்சேன். அப்போ வருஷத்துக்குக் குறைந்தபட்சம் பத்து படங்களாவது என்னோடது ரிலீஸாகிடும். குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். ஒவ்வொரு படத்துக்கும் எல்லோரும் குழுவா வேலை செய்வோம். கதைகளுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச்சு. அதனால அப்போதைய சினிமா சூழல் ஆரோக்கியமா இருந்துச்சு. அந்நிலையை இன்னைக்கு எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில பீக்ல இருக்கும்போதே கல்யாணம் பண்ணிகிட்டேன். சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்துச்சு. `நல்லா படிச்சவங்களே வேலை வாய்ப்புக்காக கஷ்டப்படுறாங்க. நீ பெரிசா படிக்கவும் இல்லை. ஆனா, உன் நடிப்புத் திறமைக்கும் அழகுக்கும் இப்போக்கூட வாய்ப்புகள் வருது. எல்லோருக்கும் அமையாத இந்த வாய்ப்பை, சரியா பயன்படுத்திக்கோ'னு என் கணவர் வேலாயுதம் சொன்னார். அதன்படி தொடர்ந்து நடிச்சேன். என் பொண்ணு பெரியவளா வளர்ந்த பிறகும்கூட ஹீரோயினாவே நடிச்சேன்’’ என்கிறார் பெருமிதத்துடன்.
``பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரலை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிடுச்சு. முன்பு பரபரப்பா நடிச்சுகிட்டு இருந்ததால, அப்போதைய புகழை நினைச்சு சந்தோசப்பட நேரமில்லை. இப்போதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. செல்வத்திலும் புகழிலும் எனக்கு எந்தக் குறையுமில்லை. நல்ல நிலையில் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தப் பிறப்புக்குப் போதும். `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்.
அவ்வப்போது எங்க காலத்து கலைஞர்களுடன் போன்ல பேசுவேன்; நேரில் மீட் பண்ணுவோம். மத்தபடி சென்னையில நான் தனியாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இந்தத் தனிமையும் எனக்குப் பிடிச்சிருக்கு. கோயிலுக்குப் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்பு தெய்விக படங்கள்ல அதிகம் நடிச்சேன். அப்படங்களின் ஷூட்டிங் கோயில்ல நடக்கும். இப்போ ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதால, தவறாம கோயில்களுக்குப் போயிட்டு இருக்கேன்’’ என்றவர்,
பிறந்த நாள் பற்றி கூறும்போது, ``விக்கிப்பீடியா உட்படப் பல இடங்கள்ல என் பிறந்த நாள் தேதி மாறுபட்டு இருக்கு. சிவராத்தி நாளான இன்னைக்குதான் என் பிறந்த நாள். எனவே, வருஷத்துக்கு எனக்கு ஒருமுறை மட்டும் பிறந்த நாள் இல்லை. நான் இறந்துட்டதா முதலில் தவறான செய்தி வந்தப்போ, வருத்தமா இருந்துச்சு. பிறகு, அதே செய்தி பலமுறை வந்ததால பழகிட்டுச்சு. என் பிறந்த நாளும் சரி, இறந்த நாளும் சரி... பல முறை நடந்திருக்கு. இதுவும் ரசிகர்களின் ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். அதனால என்னைப் பத்தி வரும் எந்தச் செய்தியையும் நல்ல செய்தியாகவே எடுத்துக்கிறேன். அதனால, இப்போ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் பணியாற்றியிருக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட எல்லா சினிமா கலைஞர்களுக்கும் நன்றி’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தார் கே.ஆர்.விஜயா.
கோழிக்கோடு – பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் கேரளாவில் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். பிரபல தொழில் அதிபரான இவர் 80 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். அவருக்கு வயது 83.
இவர் குடும்பத்துடன் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரில் வசித்து வந்தார்.
Vijaya KR-Husband and familyகுடும்பத்தினருடன் கே.ஆர்.விஜயா…
தமிழில் கற்பகம் படத்தில் அறிமுகமான கே.ஆர்.விஜயா பின்னர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். அவரை 1966இல் வேலாயுதம் காதலித்துத் திருமணம் புரிந்துகொண்டார். கே.ஆர் விஜயா அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.
அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
நடிகை கே.ஆர்.விஜயாவின் நடிப்பு பிடிக்கும் என்று சொல்வதைவிட அவரது அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றக்கூடியது என்பதால் அவர் நடித்த பல திரைப்படங்களை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன்,
புன்னகையரசி என்ற பட்டப் பெயர் அவருக்கு மட்டும் தான் சொந்தமானது, வேறு ஒருவர் அந்த இடத்தை நிரப்ப முடியாது என்பது நிஜம்.
அவர் நடித்த கற்பகம் துவங்கி பல காலம் அவரது மெல்லிய இடையும் ஓய்யார நடையும் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தது, அவரது உடல் எடை கூடிய பிறகும் முக அழகு என்னவோ அப்படியே மாற்றமில்லாமல் இருந்தாலும் அவரது மெல்லிய உடலழகு அவரது அழகுக்கு அழகு சேர்த்தது. அவரது கண் போதையூட்டும் அழகு.
'ஊட்டிவரை உறவு', 'பட்டணத்தில் பூதம்', 'சர்வர் சுந்தரம்', 'இரு மலர்கள்', 'சொர்க்கம்', 'நெஞ்சிருக்கும் வரை', 'கைகொடுத்த தெய்வம்' போன்ற திரைப்படங்களை பார்த்து கே.ஆர் விஜயாவின் அழகை ரசித்திருக்கிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து இவர் நடித்ததை பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன், அடுத்தது முத்துராமன் ஜெய்ஷங்கர் இருவருடனும் இணைந்து நடித்த திரைப்படங்களையும் நான் பார்த்து மிகவும் ரசித்தவை. நான் கே.ஆர் விஜயாவின் ரசிகை என்றால் அது மிகையில்லை. .
தேடலின் பாதையில்....
பொற்காலம்: நான் பேசிப், பழகி, நடித்த ஜாம்பவான்கள், இருந்த காலம் எல்லாம் பொற்காலம் என்று கூறுவேன். ஒவ்வொருவரையும் பற்றிக் கூற எனக்கு ஒரு நாள் போதாது. அவ்வளவும் சந்தோஷமான நினைவுகள். அவர்கள் எல்லோருடனும் நான் நடித்தேன் என்பதை விட அவர்களின் ஆசிகளைப் பெற்றேன் என்று தான் கூறுவேன். 'கற்பகம்'படம் முதல் இன்று வரை நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் இவற்றை மட்டுமே நான் தாங்கி ஒவ்வொரு நாளையும் சந்தோஷமான நாளாக மாற்றிக் கொண்டு வருகிறேன்.
கோயில்: எல்லாக் கோயில்களும் எனக்கு விருப்பமானதுதான் என்றாலும், பழனியில் உள்ள முருகன் கோயிலில் என்னை இறக்கி விட்டால் அங்கு இருக்கும் செந்தில் வேலனைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். கே.பி.சுந்தராம்பாள் பாட்டு, அந்த ஆண்டவனின் அபிஷேக ஆராதனை, இவற்றை எல்லாம் பார்த்து-கேட்டுக் கொண்டே இருந்தால், எனக்கு நேரம் போவதே தெரியாது என்றுதான் சொல்வேன். குறிப்பாகக் காலை 5.30 மணிக்கு அந்த ஆண்டவனைப் பார்க்கச் சென்றால், என்னை மறந்து அங்கேயே நின்றுவிடுவேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர்: மக்கள் அவர் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும், இவர் மரியாதை கொடுப்பது பெரிய விஷயம். அதே போல் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள எல்லோருக்கும், அது ஒலி-ஒளி உதவியாளராக இருந்தாலும் சரி, எல்லோரையும் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். உதவி என்றால் அவர்கள் கேட்கும் முன்பே உதவுவது அவர் பழக்கம்.
நடிகர் சிவாஜி கணேசன்: நடிப்பிற்கே இவர் தலைவன் என்று கூறினால் அது தவறில்லை. காலையில் படப்பிடிப்பு தளதிற்குள் இவர் நுழைத்து விட்டால், இயக்குநர் பிரேக் என்று கூறும் வரை எல்லோரது நடிப்பையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நாம் ஏதாவது சரியாகச் செய்யவில்லை என்று தோன்றினால், நம்மை அழைத்து விவரத்தை கூறி இன்னும் ஒருமுறை அதே காட்சியை எடுக்கச் சொல்வார். மற்றவர்கள் நடிப்பதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று சொல்வார்.
ஜெமினி கணேசன்: என்னுடைய திரை உலக வாழ்கையில் easy going person என்றால் ஜெமினி தான். எனது முதல் படமே அவருடன் தான். "கற்பகம்'" படத்தில் நான் நடித்தது மட்டுமல்ல, எனது 100 வது படமான "நத்தையில் முத்து', 200 வது படம், 350 வது படம் என்று சில முக்கியப் படங்களிலும் அவர்தான் நாயகன். நடிகர் ஜெமினி கணேசன்தான் என்னை முதன்முதலாகப் பாராட்டினார். நான் அப்பொழுது நடிகை இல்லை. எனது நடன நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். என் நடனத்தை பற்றி புகழ்ந்துப் பேசினார். நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அன்றும் அப்படியே செய்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர்.
இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் :
இவர் இயக்கும் பாணி வித்யாசமானது. அவரே நடித்துக் காட்டுவார். அவரிடம் பாராட்டுப் பெற்றால் அதுவே ஒரு சிறந்த விருதுதான் என்று கூறுவேன். அவர் சொல்வதைச் சரியாகச் செய்துவிட்டால் புகழ்வார். எனது முதல் படம் அவரது இயக்கத்தில் வெளியானது நான் செய்த பக்கியம்.
இயக்குநர் ஏ. பி.நாகராஜன்: ஆண்டவனின் திருவிளையாடல்களை, பல்வேறு அவதாரங்களைப் படமாக எடுப்பதில் மிகவும் சிறந்தவர். இப்படிப்பட்ட படங்கள் என்பதினால் நடிப்பதிலும், வசனங்களை உச்சரிப்பதிலும் பயிற்சி தேவை. அதனால் படப்பிடிப்பிற்கு முன்பே அதற்கான பயிற்சிக்கு அழைப்பார்கள். அது குருகுலவாசம் போல் இருக்கும். "ஆச்சி' மனோரமா, சாவித்ரி ஆகியோர் வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.
இயக்குநர் ஸ்ரீதர் - மதுரை திருமாறன்: இருவரது முறையும் வெவ்வேறு விதம் என்றாலும் இருவரும் மக்களை மிகவும் கவர்ந்தவர்கள். இயக்குநர் ஸ்ரீதர் காதலை இதமாக, பதமாகக் காட்டி மக்களை மயக்கியவர். ஒரு சிணுங்களில் காதல் உணர்வுகளைக் காட்டக் கூடியவர். அவர் நகத்தைக் கடித்த வண்ணம் காட்சியை அமைக்கும் முறையிலேயே வித்தியாசம் தெரிந்து விடும். இந்த வித்தியாசம் "ஊட்டிவரை உறவு'" படத்தில் பல இடங்களில் பார்க்கலாம். இயக்குநர் மதுரை திருமாறனை என்னால் மறக்க முடியாது. நான் நடிக்க முடியாது என்று நினைத்த பாத்திரங்களில் எல்லாம் என்னை நடிக்க வைத்து என் திறமையை வெளிக்கொண்டு வந்தவர். உதாரணதிற்கு "வாயாடி". நான் அதிகமா பேசமாட்டேன். என்னை வாயடியாக மாற்றிப் பெயர் வாங்க வைத்தவர்.
நாகேஷ்-மனோரமா: இந்த இருவருடன் நடிக்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக நடிப்பேன். காரணம் rehearsal இல் எல்லாம் சாதாரணமாக நடித்து விட்டு take இல் நம்மைத் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். வசனங்களை அசால்டாகப் பேசக் கூடியவர்கள். அதே போல் நாகேஷின் உடம்பு செய்ய சொல்லும் எல்லாவற்றையும் செய்யும். ரப்பர் பந்தை போல் துள்ளிக் குதித்து நடனம் ஆடக் கூடியவர். ஆச்சியும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல.
நடிகர் முத்துராமன்: என்னைப் பொருத்தவரை மிகச்சிறந்த நடிகர் மட்டும் அல்லாமல் மென்மையாகப் பேசும் நல்ல பண்பாளர். அவ்வப்போது குறும்புகள் செய்வார். அவரை என் இனிய அண்ணன் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தக் காலத்தில் சில வேடங்கள் என்றால் இவரை விட்டால் வேறு ஒருவர் கிடையாது என்று கூறும் அளவிற்குக் கதை எழுதும் போதே கதாசிரியர் மனதில் வந்து நிற்பார்.
No comments:
Post a Comment