BABUR MASJIT -AYODHYA VERDICT
அயோத்தி வழக்கின் தீர்ப்பு! - முக்கிய அம்சங்கள் #AYODHYAVERDICT
தினேஷ் ராமையா
சகாயராஜ் மு
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள்
இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒருமித்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும் என்று கூறிய அவர் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.
* குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது.
* ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது
*அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
* மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது.
* அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.
* மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.
* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.
* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை, மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது.
28 mins ago
ஒருமித்த கருத்து! - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதனால், ஒருமித்த தீர்ப்பளிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம்
50 mins ago
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
50 mins ago
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
Amith sha
Amith sha
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதையொட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத் துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ANI
அயோத்தி தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தீர்ப்பு வழங்கப்படும் தலைமை நீதிபதி அமர்வு அறை இதுவரை திறக்கப்படவில்லை. அறை திறக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த அறையின் முன்பே வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குழுமியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
Today at 9 AM
அமைதிகாக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி, தீர்ப்பு எதுவாக இருப்பினும் தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் டிசம்பர் 10ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. `தீர்ப்பு எதுவாக இருந்தாலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்விநிலையங்களும் நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விடுமுறை அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
Today at 9 AM
வழக்கின் பின்னணி
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அஹாரா ஆகிய 3 அமைப்புகளுக்கும் அந்த நிலத்தை சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 40 நாள்கள் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டநிலையில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சனிக்கிழமை (9-11-2019) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment