Showing posts with label BABUR. Show all posts
Showing posts with label BABUR. Show all posts

Sunday, 4 October 2020

INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30 -BABUR MASJID CASE

 


 INJUSTICE WAS SOLVED BY INJUSTICE JUDGEMENT 2020 SEPTEMBER 30

vகடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

.


இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.


பிரீமியம் ஸ்டோரி

டெல்லி நகரத்துக்குச் செல்பவர்களெல்லாம் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். இந்து, இஸ்லாமிய மன்னர்கள், தேச பக்தர்கள், உலக மனித விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்களின் பெயர்களே பல தெருக்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும். ஆனால், திடீரென்று `ஔரங்கசீப் மார்க்’ (தெரு) பெயர் மாற்றப்பட்டு, `அப்துல் கலாம் மார்க்’ என்று போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முகலாய மன்னர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் பலகைகளை மாற்றுவதற்கு, சில அடிப்படைவாதிகள் குரல் கொடுத்துவருகின்றனர்.

ஔரங்கசீப் பெயர் எடுத்துவிடப்படுவதும், அதே சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுவதும் எதை வெளிப்படுத்துகிறது? வரலாற்றைக் கட்டமைப்பது பலம் பொருந்திய அரசுகளே. அவற்றில் பெரும்பாலும் பெரும்பான்மையினரின் விருப்பங்களே உள்ளடங்கியிருக்கும். இயற்றப்பட்ட சட்டங்களின் ஆட்சியைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் நம்பிக்கைகளே ஆட்சியாளர்களின் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படும்.



 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

லக்னோ சி.பி.ஐ நீதிமன்ற விசாரணை நீதிபதி எஸ்.கே.யாதவ், தனது 2,300 பக்க தீர்ப்பில், பாபர் மசூதியை இடித்ததற்கான சாட்சிகள் போதாமையையும், இடிப்பதற்கான ரகசிய சதியை சி.பி.ஐ நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதையும் கூறியதோடு, தீர்ப்பு கூறிய அன்றே பதவியிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். அவர் கொடுத்த தீர்ப்பு இறுதியானது அல்ல; எனினும், அதன்மீது அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு, பிறகு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு இப்படிக் காட்சிகள் மாறலாம். ஆனால், தீர்ப்புகள் என்னவோ நமது பேரக்குழந்தைகள் காலத்தில்தான் வரக்கூடும்.


தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்று கருத்து தெரிவித்தார். அரசு மற்றும் நீதிமன்றங்களின் லச்சினைகளிலும் இந்த கோஷமே பொறிக்கப்பட்டிருக்கும். `நீதி வென்றதா?’ என்ற கேள்விக்கு தீர்ப்பு வெளியான மறுநாள், டெலிகிராப் நாளிதழில் முதல் பக்கத்தில் கழுதையின் படம் ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

இந்தியாவின் சிறப்பு புலனாய்வுக்குழுவான சி.பி.ஐ எடுத்த ஒரு வழக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிற தென்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. விசாரணைக் குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் பெயர்களைப் பார்த்தாலே நமக்கு ஒரு விஷயம் புரியும். எல்.கே.அத்வானி முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர். அவரது துறையின் கீழ்தான் சி.பி.ஐ செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராகவும், உமாபாரதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்கள். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கும் ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர்.



1992, டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால், ‘மசூதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது’ என்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு அந்த அரசுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி மசூதி இடிக்கப்பட்டதால், நீதிமன்ற கண்டனத்துக்குள்ளானதோடு, மாநில முதல்வருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. காலையில் தனது பரிவாரங்களுடன் நீதிமன்றம் வந்த முதல்வர், மாலையில் வீடு திரும்பியது அந்த தண்டனையையே கேலிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பெருமையுடன், ‘நான் பாபர் மசூதியை இடிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று காவல்துறைக்கு எழுத்து மூலமாக உத்தரவிட்டேன். அதனால் ஒரு கரசேவகர்கூட உயரிழக்கவில்லை’ என்று குறிப்பிட்டார் கல்யாண் சிங்.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் பரவலான கோபக்கணைகளை எழுப்பியதோடு, நூற்றுக்கணக்கான உயிர்ச் சேதங்களையும் விளைவித்தது. ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையும் வலுத்தது. `ஆட்சி பறிபோய்விடுமோ...’ என்று பரிதவித்த அவர், அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் தனது அரசைக் கலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.


மசூதியை இடித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடியவர்கள், உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஏழாண்டு ஆட்சியை இழந்தாலும், கட்சியை பலப்படுத்திக்கொண்டார்கள். 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன், மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். பிறகு, 2017-ல் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.


`உலகமே பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமராக்களில் பதிவான 500 வருடங்கள் பழைமையான பாபர் மசூதியை இடித்ததற்கு, ஒரு கிரிமினல் வழக்குகூட கிடையாதா?’ என்ற கேள்வி எழுந்துவிடும் என்பதால், கடமைக்கு ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேசமயத்தில், கல்யாண் சிங் முதல் குற்றவாளியாக ஆக்கப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை 2014-ல் ராஜஸ்தானின் ஆளுநராக நியமித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவில், குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் 2019-ல் தனது பதவிக்காலத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால், வழக்கோ முடிவதாக இல்லை.


ராமர் கோயில் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், `பாபர் மசூதி இடிப்பு மிகக் கொடூரமான செயல் மட்டுமன்றி, சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கியது’ என்று கோபமாகக் குறிப்பிட்டதுடன், வழக்கை 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது. பின்னர், தொற்றுநோய் காரணமாக ஒரு மாத நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.


இடையே, ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தனது முக்கிய அரசியல் கோரிக்கையாக வைத்ததோடு, அதன் தலைவர் அத்வானி குஜராத் சோமநாதர் கோயிலிலிருந்து ரதயாத்திரையாகப் புறப்பட்டது நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டியது. `ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுந்தது.



கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பதா?

அந்தச் சமயத்தில்தான், ‘நாட்டிலுள்ள பிரச்னைகளையெல்லாம் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் தீர்த்துவிட முடியாது; பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட முடியாது’ என்றெல்லாம் புதிது புதிதாக முத்துகளை உதிர்க்க ஆரம்பித்தனர் பா.ஜ.க தலைவர்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமான சொத்து வழக்கு நீதிமன்றங்களில் நடக்கிறதே என்று அவர்கள் அமைதியாகச் செல்ல விரும்பவில்லை. மாறாக, தாங்கள் அதிகாரத்திலிருந்த காலகட்டங்களில் சூட்சுமமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். கோயில் கட்டுவதற்கான செங்கற்களை நாடு முழுவதும் தயார் செய்து அயோத்தியில் கொண்டு சேர்த்தனர். ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக கோயிலின் கல்தூண்கள் வடிவமைக்கப்பட்டன.


மசூதியைச் சுற்றியிருந்த நிலங்களை மத்திய பா.ஜ.க அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் கையகப்படுத்தியது. அந்த நடவடிக்கையை ‘சட்டப்படி செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லையென்றாலும், அதன் ஒரு பகுதியில் ராமர் சிலைக்கான வழிபாடுகள் தொடர்ந்து நடத்துவதற்கு நீதிமன்றங்கள் அனுமதித்தன. `வழிபாட்டுத்தலம் யாருக்குச் சொந்தம்...’ என்ற வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இத்தனை ஏற்பாடுகள்... அப்படியென்றால், அவர்களுக்கு நீதிமன்றங்கள்மீது எத்தகைய ‘நம்பிக்கை’ இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.


தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த அரசியல் சாசன அமர்வு, ராமர் கோயில் விவகாரத்தில் விசித்திரமான தீர்ப்பொன்றை அளித்தது. ‘பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தில், ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததற்கான தடயங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், 500 வருடங்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் அங்குதான் ராமர் தோன்றினார் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டுவருகின்றனர். அதனால், இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடிய ஓர் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து, ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம்’ என்ற அதிர்ச்சியான தீர்ப்பை நீதிபதிகள் தங்களது சிறப்பு அதிகாரத்தின் மூலம் வழங்கினர். ஆக பா.ஜ.க, ‘சட்டங்களால் தீர்க்க முடியாது; மக்களின் நம்பிக்கையைக் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறிவந்தது நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்தது.


இப்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில், ‘பத்திரிகைக் குறிப்புகளைக் கொடுத்த சி.பி.ஐ., அந்தச் செய்திகள் வெளியான முழுச் செய்தித்தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காணொளிக் காட்சிகள் பதிவான குறுந்தகடுகளை, சீலிட்ட உறையில் நீதிமன்றத்துக்குத் தரவில்லை’ என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘மசூதியை இடிப்பதற்கு ஒன்றுகூடி ரகசியச் சதி தீட்டியதற்கான சாட்சியம் இல்லை’ என்று கூறிய நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 149-வது பிரிவைப் பார்க்க மறந்துவிட்டார். அதன்படி, சட்டவிரோத கும்பலில் இருக்கும் ஒவ்வொரு நபரும், அந்த கும்பல் செய்யும் குற்றங்களுக்கான சதியிலும் ஈடுபட்டிருப்பார்கள் என நம்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.



ரத யாத்திரையில் தொடங்கி இன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் முடிந்துவிட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட நீதிபதி மசூதி இடிப்பில் வேறு என்ன தீர்ப்பு கொடுத்திருக்க முடியும்? அரசு மற்றும் கட்சி இயந்திரங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதுடன், மக்களிடமும் செய்த பிரசாரங்களின் விளைவு, ‘குற்றவாளிகள்’ என்று நிறுத்தப்பட்டவர்கள் இன்று ராம பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன் காணொளியில் ஆஜரான அத்வானி சொன்ன வார்த்தை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதே.


கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பது என்பதற்கு இதைவிட நல்ல விளக்கம் இருக்க முடியாது!


Tuesday, 25 August 2020

BABUR , FORMATION OF MOGHUL DYNASTY 1526





BABUR , FORMATION OF MOGHUL DYNASTY 1526



Babur was the eldest son of Umar Sheikh Mirza, governor of Farghana and great grandson of Timur the Great. He ascended the throne of Farghana in its capital Akhsikent in 1494 at the age of twelve and faced rebellion. He conquered Samarkand two years later, only to lose the vilayat of Fergana soon after. In 1504, he conquered Kabul, which was under the rule of the infant heir of Ulugh Begh. Babur formed a partnership with Safavid ruler Ismail I and reconquered parts of Turkistan, including Samarkand, only to again lose it and the other newly conquered lands to the Sheybanids

After losing Samarkand for the third time, Babur turned his attention to the South. At that time, the Indo-Gangetic Plain of the northern Indian Subcontinent was ruled by Ibrahim Lodi of the Afghan Lodi dynasty, whereas Rajputana was ruled by a Hindu Rajput .  According to historical records and Baburnama (autobiography written by Babur himself) Daulat Khan Lodi invited him to attack on Delhi where Ibrahim Lodi was ruling at that time. He sent his ambassador to him to support him in his attack on Delhi. Also in 1524, Daulat Khan Lodi, a rebel of the Lodhi dynasty, invited Babur to overthrow Ibrahim and become ruler. Babur punished him for his mistake Ibrahim Lodi at the First Battle of Panipat in 1526 CE and founded the Mughal empire. However, he again faced opposition, this time from Rana Sanga of Mewar and Medini Rai,another rajput ruler in the battle of Chanderi who considered Babur a foreigner. The Rana was defeated in the Battle of Khanwa.Babur married several times. Notable among his sons are Humayun, Kamran Mirza and Hindal Mirza. Babur died in 1530 and was succeeded by Humayun. According to Babur's wishes, he was buried in Bagh-e-Babur in Kabul, Afghanistan.


Babur was born on 14 February 1483 in the city of Andijan, Andijan Province, Fergana Valley, contemporary Uzbekistan. He was the eldest son of Umar Sheikh Mirza,[13] ruler of the Fergana Valley, the son of Abū Saʿīd Mirza

Most territories around his kingdom were ruled by his relatives, who were descendants of either Timur or Genghis Khan, and were constantly in conflict. In 1497 he besieged Samarkand for seven months before eventually gaining control over it.[21] He was fifteen years old and for him the campaign was a huge achievement
 Babur was able to hold the city despite desertions in his army, but he later fell seriously ill.[citation needed] Meanwhile, a rebellion back home and lost his empire
Babur suffered many short-lived victories and was without shelter and in exile, aided by friends and peasants.

Formation of the Mughal Empire

Babur still wanted to escape from the Uzbeks, and he chose India as a refuge instead of Badakhshan, which was to the north of Kabul. After his third loss of Samarkand, Babur gave full attention to the conquest of North India, launching a campaign; he reached the Chenab River, now in Pakistan, in 1519.[24] Until 1524, his aim was to only expand his rule to Punjab, mainly to fulfill the legacy of his ancestor Timur, since it used to be part of his empire.[At the time parts of north India were under the rule of Ibrahim Lodi of the Lodi dynasty, but the empire was crumbling and there were many defectors. He received invitations from Daulat Khan Lodi, Governor of Punjab and Ala-ud-Din, uncle of Ibrahim.[36] He sent an ambassador to Ibrahim, claiming himself the rightful heir to the throne, but the ambassador was detained at Lahore and released months later.

First battle of Panipat

Babur started for Lahore, Punjab, in 1524 but found that Daulat Khan Lodi had been driven out by forces sent by Ibrahim Lodi.[37] When Babur arrived at Lahore, the Lodi army marched out and his army was routed.[38] In response, Babur burned Lahore for two days, then marched to Dipalpur, placing Alam Khan, another rebel uncle of Lodi, as governor.[39] Alam Khan was quickly overthrown and fled to Kabul. In response, Babur supplied Alam Khan with troops who later joined up with Daulat Khan Lodi, and together with about 30,000 troops, they besieged Ibrahim Lodi at Delhi.[40] He easily defeated and drove off Alam's army and Babur realised Lodi would not allow him to occupy the Punjab. Babur marched on to Delhi via Sirhind. He reached Panipat on 20 April 1526 and there met Ibrahim Lodi's numerically superior army of about 100,000 soldiers and 100 elephants.[24][36] In the battle that began on the following day, Babur used the tactic of Tulugma, encircling Ibrahim Lodi's army and forcing it to face artillery fire directly, as well as frightening its war elephants.[36] Ibrahim Lodi died during the battle, thus ending the Lodi dynasty.[2

Personal life

Babur's first wife, Aisha Sultan Begum, was his paternal cousin, the daughter of Sultan Ahmad Mirza, his father's brother. She was an infant when betrothed to Babur, who was himself five years old. They married eleven years later, c. 1498–99.

 The couple had one daughter, Fakhr-un-Nissa, who died within a year in 1500. Three years later, after Babur's first defeat at Fergana, Aisha left him and returned to her father's household.[48][32] 

In 1504, Babur married Zaynab Sultan Begum, who died childless within two years. In the period 1506–08, Babur married four women, Maham Begum (in 1506), Masuma Sultan Begum, Gulrukh Begum and Dildar Begum.[48]

 Babur had four children by Maham Begum, of whom only one survived infancy. This was his eldest son and heir, Humayun. Masuma Sultan Begum died during childbirth;
The tomb of the first
Mughal Emperor Babur
 in Kabul


 the year of her death is disputed (either 1508 or 1519). Gulrukh bore Babur two sons, Kamran and Askari, and Dildar Begum was the mother of Babur's youngest son, Hindal.[48]

 Babur later married Mubaraka Yusufzai, a Pashtun woman of the Yusufzai tribe. Gulnar Aghacha and Nargul Aghacha were two Circassian slaves given to Babur as gifts by Tahmasp Shah Safavi, the Shah of Persia. They became "recognized ladies of the royal household

Saturday, 9 November 2019

BABUR MASJIT -AYODHYA VERDICT




BABUR MASJIT -AYODHYA VERDICT 


அயோத்தி வழக்கின் தீர்ப்பு! - முக்கிய அம்சங்கள் #AYODHYAVERDICT
தினேஷ் ராமையா
சகாயராஜ் மு
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒருமித்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும் என்று கூறிய அவர் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

* குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது.

* ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது

*அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது.

* அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.


* மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை, மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது.

28 mins ago
ஒருமித்த கருத்து! - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதனால், ஒருமித்த தீர்ப்பளிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம்


50 mins ago
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
அயோத்தி தீர்ப்பையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

50 mins ago
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
Amith sha
Amith sha
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதையொட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத் துறை தலைவர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.



ANI
அயோத்தி தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தீர்ப்பு வழங்கப்படும் தலைமை நீதிபதி அமர்வு அறை இதுவரை திறக்கப்படவில்லை. அறை திறக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த அறையின் முன்பே வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் குழுமியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

Today at 9 AM
அமைதிகாக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி, தீர்ப்பு எதுவாக இருப்பினும் தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.


பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் டிசம்பர் 10ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. `தீர்ப்பு எதுவாக இருந்தாலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்விநிலையங்களும் நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விடுமுறை அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

Today at 9 AM
வழக்கின் பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அஹாரா ஆகிய 3 அமைப்புகளுக்கும் அந்த நிலத்தை சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 40 நாள்கள் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டநிலையில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சனிக்கிழமை (9-11-2019) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Wednesday, 14 February 2018

BABUR ,THE FOUNDER OF MOGHUL DYNASTY BORN 1483 FEBRUARY 14



BABUR ,THE FOUNDER OF MOGHUL DYNASTY
BORN 1483 FEBRUARY 14




பாபர் (Babur) எனப்படும் சாகிருதீன் பாபர், அல்லது சாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.
பின்னணி[மூலத்தைத் தொகு]

தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.

கன்னிப்போரும் அதன் பிண்ணனியும்[மூலத்தைத் தொகு]
இவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார்.
பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும்.

பிற வெற்றிகள்[மூலத்தைத் தொகு]
பானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது.

பழைய பகை[மூலத்தைத் தொகு]

தில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற்கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது.

ஆட்சிக்காலங்கள்[மூலத்தைத் தொகு]
இவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை.

மறைவு[மூலத்தைத் தொகு]

இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி[மூலத்தைத் தொகு]

பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Thursday, 22 June 2017

MUGHAL EMPIRE முகலாயர் ஆட்சி (கி.பி.1526-1858, ஹி.932-1274)






MUGHAL EMPIRE முகலாயர் ஆட்சி 
(கி.பி.1526-1858, ஹி.932-1274)



புகழ் மிக்கதோர் ஆட்சி மரபினை இந்தியாயாவில் நிலை நாட்டிய பெருமை முகலாயரையே சாரும். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களது ஆட்சியின் பொற்காலமாக முகலாயரது ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள்
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக/துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.


இந்தியாவில் இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பிலான  ஆட்சியை முகலாயர் தமதாட்சிக் காலத்தில் ஏற்படுத்தினர். இவர்களது ஆட்சியின் கீழ் இவர்கள் பின்பற்றிய சமயப் பொறை காரணமாக மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். நீண்ட கால ஆட்சியொன்றை முகலாயர் தொடர்வதற்கு அவர்கள் பின்பற்றிய சமய சகிப்புத் தன்மையே காரணமாக அமைந்தன எனலாம். இவர்களது இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யாவிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருந்தது.

முகலாயராட்சியில் இஸ்லாமிய கலாசார முறை நங்கு பேணப்பட்டது. முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாட்டு அம்சங்களிலும் இஸ்லாமிய நடைமுறைகளையும் பின்பற்றியதுமட்டுமன்றி அதனை ஒரு கௌரவமாகவும் கருதினர். 


சாதிப்பாகுபாடு நிறைந்திருந்த இந்தியாவில் சமத்துவத்தை நிலை நாட்ட முகலாயர் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கவரப்பட்டுத்தான் இந்துக்களில் அதிகமானோர்  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதற்கு மாறான வேறெந்த வழிமுறையாலும் இஸ்லாம் அங்கு பரவவில்லை. 


பாபர் (கி.பி.1526 - 1530)

துருக்கியில் கலீபா சுலைமானும் பிரான்ஸை 1ம் ஃபிரான்சிஸ்ஸும் ஜெர்மனியை 5ம் சார்ல்ஸ்ஸும் இங்கிலாந்தை 8ம் ஹென்றியும் ஆரசோச்சிய காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தவரே பாபராவார். இவர்களோடு பாபரை ஒப்பிடும்போது பாபர் மிகச் சிறந்த வீரராகவும் கலைஞராகவும் அறிஞராகவும் விளங்குகிறார். இதனால்தான் வின்ஸ்ஸன் ஸ்மித் போன்றவர்கள்  இவரை 16ம் நூற்றாண்டில் ஆசியாவிலேயே தலை சிறந்த ஆட்சியாளர் என சிலாகித்துக் கூற்கின்றனர். மனிதாபிமானமிக்க இவர் தனது நண்பர்களைப் போற்றினார்; உறவினர்களை நல்வழிப்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுத்து கொள்ளையடித்துச் சென்ற முன்னோர்களைப் போலல்லாமல் நிரந்தர ஆட்சி அமைத்து மக்களுக்கு நிலையான வாழ்வு தந்தார். அவரது சகோதரர் நஸீர் மிர்ஸா அவருக்குப் பல தொல்லைகள் தந்த போதிலும் தன்னம்பிக்கையுடையவர் பாபர். எது நடப்பினும் அது ஆண்டவன் செயல் என்று இருப்பார். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு சோம்பியிராமலும் தன் செயல்களை சீர்பட நடத்தினார். 

இவர் 1483ல் பர்கானாவின் ஆட்சியாளர் உமட்ஷேக்கின் புத்திரராவார். துருக்கிய மொழிச் சொல்லன "பாபர்" எனும் பதத்திற்கு புலி என்பது பொருள் பாபரும் தன் பெயரின் பொருளுக்கேற்ற வகையில் வலிமை மிக்கவராகவும் துணிவுள்ளவராகவும் விளங்கினார். இவர் மத்தியாசியாவில் வாழ்ந்த இரு பெரும் போர் வீரர்களான ஜங்கீஸ்கான், தைமூர் முதலானவர்களின் வழித்தோன்றலாவார்.பாபரின் தந்தை அகால மரணமடிந்ததால் 11 வயதிலேயே பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். 


இவர் முதலில் சமர்க்கந்த். ஆட்சியாளராக இருந்து அதை இழந்த பின்னர் 1504ல் காபூல் பிரதேசத்தின் ஆட்சியாளரானார். இக்காலை டில்லி இப்ராஹீம் லோடிக்கு எதிராகப் படை நடாத்திச் சென்று லோடியத் தோற்கடித்து இந்தியாவின் ஆட்சியாளரானார். இப்படையெடுப்பு முதலாம் பனிபட் படையெடுப்பு எனப்படுகிறது. இப்படையெடுப்புக்கு அப்பாலும் இவரது காலத்தில் பல படயெடுப்புக்கள் இடம்பெற்றன. 1ம் பனிபட் போர் (1526), கான்வாப் போர் (1527), சந்தேரிப் போர், கோக்ரா நதிப் போர் (1529) முதலாம் போர்கள் பாபர் காலத்து முக்கிய போர்களாகும். 


பாபர் பன்முக ஆளுமை படைத்த ஒருவராக விளங்கினார். கலைஞர், கவிஞர், இலக்கியவாதி, பேச்சாளர், கட்டடக்கலை நிபுனர் என  ஆவரது ஆளுமையின் தளம் பரந்து நின்றது. இளமையில் அனுபவித்த துன்பங்கள் காரணமாக இரக்கம், அன்பு, வீரம், சகிப்புத் தன்மை ஆதியாம் குணங்கள் பாபரிடம் குடிகொண்டன.  இவர் கண்ட போர்க்களங்களின் எண்ணிக்கை  அவரது வாள் நாளைவிட  அதிகமான்னதாகும். 


தனது  ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டிய பாபர்,  நாட்டு மக்களோடு மிக நல்ல முறையில் நடந்து கொண்டார். மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாத்தார். திருடர்களையும் வழிப்பறிக்காரர்களையும் ஒடுக்கிய அவர் குறு நில மன்னர்களின் துன்புறுத்தல்களில் இருந்தும் மக்களைக் காத்தார்.


பாபர் தனது வரலாற்றை "பாபர் நாமா"  என்ற பெயரில் துருக்கி மொழியில் எழுதினார். ஃபார்ஸியிலும் துருக்கி  மொழியிலும் போர், காதல், மது போன்ற தலைப்புக்களில் கவிதைகள் எழுதினார்.இவர் ஹனஃபி மத்ஹபைத் தழுவி சட்ட நூலொன்றையும் எழுதியுள்ளார். 


ஓய்வின்றிப் பல போர்களில் தொடராக ஈடுபட்டதாலும் இந்தியாவின் சுவாத்திய நிலை தனது உடல் நிலைக்குச் சாதகமாக அமையாததாலும் இவரது நிலை குன்றியது. இவ்வேளை மகன் ஹுமாயூனுக்கு ஏற்பட்டிருந்த குணப்படுத்த முடையாத நோய் கண்டு மேலும்  மனம் வருந்தினார். முன்பே நோய்வாய்ப்பட்டிருந்த பாபரின் உடல் நிலை இதனால்  மேலும் மோசமாகியது. இறுதியாக பாபருக்கு ஏற்பட்ட வயிற்றுக் கோளாறின் காரணமாக  1530ல் பாபர் மரண்மானார். பாபர் மரணப் படுக்கையில் இருந்தபோது தனது மகநுமாயூனை  அடுத்த வாரிசாக  நியமனம் செய்தார்.



ஹுமாயூன் (1530 - 1556 / 937 - 963)

இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்த மகனாகிய இவரது இயற் பெயர்  நாஸிருத்தீன் ஹுமாயூன் என்பதாகும். 1508ல் காபூலில் பிறந்த இவரது தாயின் பெயர் மஹிம் பேகம் என்பதாகும். சிறு வயதிலேயே அரபு, ஃபார்ஸீ, துருக்கி முதலாம் மொழிகளையும் சோதிடம், கணிதம் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

பாபருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஹுமாயூன், ஷாஹ் நஸீருத்தீன் ஹுமாயூன் எனும் பெயருடன் 1530ல் அஆக்ராவில் மகுடம் சூடிக்கொண்டார். இவரது ஆட்சியைக் கவிழ்க்க இவரின் உடன் பிறந்தவர்களும் ராஜபுத்திரர்களும் ஆப்கானியரும் முனைப்புக் காட்டினர். அவருக்கெதிராகப் போர்களும் சதிகளும் புரட்சிகளும் தொடர்ந்தன. எனினும் தனது தந்தையின்,  "உடன் பிறந்தவர்களோடு நல்ல முறையில்  நடந்து கொள்ள வேண்டுமென்ற"  இறுதி அறிவுரையை கடைசிவரை காப்பாற்றினார். அந்தவகையில் தனது சகோதரர்களை ஆளுநர்  பதவிகளில் அமர்த்தினார்.  இத்தனை செய்தும் அவகள் ஹுமாயூனுக்குத் துரோகமே இழைத்தனர். 


ஆட்சிக்கு வந்ததும் ஹுமாயூனுக்கு எதிராகப் பல எதிர்ப்புக்கள் தோன்றின. அவற்றைச் சரியான திட்டங்களின்றி  எதிர்க்க முற்பட்டார். அதிராளிகளை அன்புக்கரம் கொண்டு அரவணைத்தார். உண்மையில் இதுவே அவரதுவீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.


1540ல் கன்னோசிப் எனும் போரில் ஷெர்ஷாஹ் என்பவர் ஹுமாயூனைத் தோற்கடித்ததால்  அவர் ஆட்சியை இழந்தார். 1555ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வரை ஊரூராக உதவி கேட்டு அலைந்து திரிந்தார். இக்காலங்களில் (1540 - 1555) அவரது சகோதரர்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பாரசீகரின்  உதவியோடு மீண்டும் டில்லியைக் கைப்பற்றினார்.  பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஹுமாயூன் ஆட்சியை மீண்டும் கப்பற்றியபோதும் அரச வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. 1556ல் ஒரு நாள் வாசிகசாலையில் இருந்து மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது நினைவிழந்து கீழே விழுந்தார்.  மறு  நாள் மரணமானார்.  இவர் மரணித்தபோது மகன் அக்பர் போர் முகாமொன்றில் வெகு தொலைவில் இருந்தார். அக்பர் வந்து சேரும்வரை சுமார் 17  நாட்கள் ஹுமாயூனின் மரணம் வெளி உலகிற்குத் தெரியாதிருந்தது. அக்பர் வந்து சேர்ந்த பிற்பாடே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


சுமார்கால் நூற்றாண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்துள்ள இவர் ஐந்தாண்டு காலம் பல நாடுகளுக்கு அலிந்து திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார். ஆட்சிக்காலம் முழுவதும் சோதனை மிகுந்த காலமாக  அமைந்திருந்ததே தவிர நிலையான - உறுதியான - முன்னேற்றம் தரும் ஆட்சியொன்றை அவரால் அளிக்க முடிய்ட்வில்லை.  ஆயினும் அவர் கலை, இலக்கியத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். கட்ட்டக் கலையும் ஓவியக் கலையும் சிறப்புற்று விளங்கின. கட்ட்டக் கலைஞ்சர்களும் ஓவியர்களும் பாரசீகத்திலிருந்து அழைத்துவரப்பட்டனர். 


ஹுமாயூன் அன்புள்ளமும் ஈகைக் குணமும் முகுந்தவர்.பிறரை மன்னிக்கும் தயாள குணம் படைத்த இவர் எவருக்கும் தீங்கு  செய்யா உள்ளம் படைத்தவராகவும் காணப்பட்ட்டார். இருப்பினும் அவரது வாழ்க்கை போராட்டம் மிக்கதாகவே அமைந்திருந்தது. அப்போராட்டங்கள் முடிவுறும்  தருணத்தில் அவரது வாழ்வும் முடிந்து போனது.


ஹுமாயூன் இந்தியாவுக்கு வழங்கிவிட்டுச் சென்ற அன்பளிப்புக்களுள் பெறுமதி மிக்கதும் போற்றுதலுக்குரியதுமான  அன்பளிப்பாக அவரியடுத்து ஆட்சிபீடமேறிய மாமன்னர் அக்பர் கருதப்படுகின்றார்.


அக்பர் (1556 - 1605 / 963 - 1014)

இந்தியாவில் அரசாண்ட சிறப்புமிக்க அரசர்களுள் அக்பரும் ஒருவர். அளப்பரிய அல்லல்களுக்கிடையில் பிறந்து வளர்ந்து, படிக்காத மேதையாகி, வீரனாகவும் விவேகியாகவும் வாழ்ந்து பேரரசு ஒன்றை அமைத்து எம்மதமும் சம்மதம் என்ற சமயப் பொறையுடன் செங்கோலோச்சிய ஒருவர் இவர். இந்தியாவிலிருந்த இரு பெரும் மதங்களான இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, காலமெல்லாம் இருந்துவந்த மதப் பூசல்களுக்கு முடிவவு காண முயன்ற விந்தை மனிதர் இவர். களத்தில் தோல்வியே கண்டிறாதவர். அவரது சீரிய ஆட்சி முறையின் சுவடுகளை முகலாயருக்குப் பின் வந்த ஆங்கிலேயரின் ஆட்சி முறையிலும் காணலாம். அக்பரின் ஆட்சியில் மத பேதமின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன. எல்லா மதத்தினரையும் பின்னிப் பிணைத்து வலிமைமிக்க பேரரசொன்றை நிறுவிய பெருமை அக்பரையே சாரும்.  அக்பர் நிலவரி நிர்வாகத்திலும் சமூகத்திலும் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு வரலாற்றில் நிலையான ஒர் இடத்தைப் பெற்றுத் தந்தன. இவரது அரவணைப்பில் கலைகள் வளர்ந்தன; கற்றோர் களிப்புற்றனர். முஸ்லிம்கள் இந்தியாவில் காலூன்றிய நாள் முதல் அவர்களது ஆட்சி முடிவடையும் வரை அக்பரைப் போன்ற ஒரு மாமன்னர் தோன்றவில்லை எனலாம். 

அக்பரின் தந்தை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் ஆவார். ஹுமாயூன் ஆட்சியை இழந்து சிந்துவில் அலைந்து கொண்டிருந்தபோது அப்பிரதேசத்தில் இருந்த அமர்கோட் எனும் சிற்றூரில் கி.பி.1542ல் அக்பர் பிறந்தார். இளமையில் புத்தகப் படிப்பு அக்பருக்கு வேம்பாய்க் கசந்தது. பாரசீக அறிஞர்  அப்துல் ல்தீப் என்பவர் அவருக்கு முழு நேர ஆசிரியராக நியமிக்கப்பட்டபோதும் இவர் படிப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மாறாக குதிரைச் சவாரியிலும் அம்பெய்தல், வேட்டையாடுதல் முதலானவற்றிலும் அலாதிப் பிரியம் காட்டினார். இயல்பிலேயே இவர் சிறந்த அறிவுக்கூர்மையையும் நினைவாற்றலையும் பெற்றிருந்தார். 


தந்தை ஹுமாயூனின் மரணத்தயடுத்து அப்போது 13 வயது மட்டுமே நிரம்பியிருந்த அக்பர் ஆக்ராவில் வைத்து பாதுஷாவாக 1556ல் முடிசூட்டப்பட்டார். இவர் சிறுவராக இருந்ததால் ஆரம்பத்தில் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அக்பரின் உதவியாளராக இருந்த பைராம்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. வயது 18 ஆனதும் ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுக்க விரும்பியதால் பைராம்கானுக்கும் அக்பருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தனது ஆப்கானிய உதவியாளர் ஒருவரின் துணை கொண்டு  பைராம்கானைத் தீர்த்துக் கட்டி, ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டார். 



ஆட்சியைப் பலப்படுத்திய அக்பர் பின்னர் தனது சாம்ராஜ்யத்தின் எல்லையை விஸ்தரிக்க விரும்பினார். முதற்கட்டமாக குவாலியர் கோட்டை மீது படை நடாத்திச் சென்று அதனைத் தன்வசப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து மாளவம் (1561), கோண்டுவானா (1564), சிதூர் (1567), குஜ்ராத் (1572), கிழக்கு வங்கம் (1574), மேவார் (1576), காஷ்மீர் (1586) போன்ற பல பிரதேசங்கள் கைக்கப்பற்றப்பட்டு அக்பரின் ஆட்சியின் கிழ் கொண்டுவரப்பட்டன.இதன் பின்னரும் தக்காணம், அஹ்மத் நகர், காந்தேஷ் முதலாம் பகுதிகள் அக்பரால் கைப்பற்றப்பட்டன.


ஆட்சியைப் நிலைப்பலப்படுத்தும் தனது திடடத்தின் அடுத்த கட்டமாக இராஜபுத்திரர்களுக்கும் தனக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார். இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி வேரூன்ற வேண்டுமானால் இந்து வீரர்களான இராஜபுத்திரர்களின் உறவும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை அக்பர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அக்பர் இராஜ புத்திரர்களோடு மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களை அரவணைக்கவும் செய்தார்.  1562ல் தனதாட்சிக்குப் பணிந்த ஜெய்ப்பூர் அரசர் பீஹர்மாலின் புத்திரியைத் தனது மனைவியாக்கிக் கொண்டார். இவரின் புத்திரர்தான் இள்வரசர் ஸலீம். பின்னரும் தனக்குப் பணிந்த ஆட்சியாளர்களின் புத்திரிகளை மணந்து கொண்டதோடு மட்டுமன்றித் தனது உறவினர்களையும்  இந்துப் பெண்களை மணக்கச் செய்தார்.  இராஜபுத்திரர்கள் பலரை அக்பர் தனது நிர்வாகத்தில் உயர் பதவிகளிலும் அமர்த்திக் கொண்டார். இத்தகைய திருமணங்கள்  ஆட்சிக்கு நன்மை பயப்பதாகவே அமைந்தன. 


மன்னர் அக்பரது இந்த இராஜ புத்திரக் கொள்கை இந்து முஸ்லிம் பண்பாட்டு ஒருமுகப்பாட்டுக்கு வழிகோலியது. கருத்துப் பரிமாற்றமும் கலாசாரப் பரிமாற்றமும் தடையின்றி இடம்பெற்றன. இந்துக்கள் உருது, பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றனர். முஸ்லிம்களும் சமஸ்கிருதம்,  இந்தி ஆகிய மொழிகளைக் கற்றனர். இந்நடைமுறை நாளடைவில் இந்து மதக் கொள்கைகளின்பால் அக்பரை ஈர்க்கச் செய்தது.தனது இந்துமத மனைவியருக்கு அவர்களது சம்மயச் சடங்குகளையும் விழாக்களையும் மேற்கொள்ள இடமளித்ததோடு நில்லாது தானும் அம்மதத்தின் ஆசாரங்கள் பலவற்றையும் மேற்கொண்டார். நாள்தோறும் தனது ஜன்னல்லருகே நின்று பொது மக்களுக்கு தரிசனமளித்தார். தீபாவளி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினார். நெற்றியில் திலகமிட்டுக்கொண்டார். இந்துக்களைப் போலவே தலையில் குடுமி வைத்து தலைப்பாகை கட்டிக்கொண்ட அக்பர், இந்து மத ஆசாரப்படி காலில் வீழ்ந்து வணங்கும் வழகத்திற்கும் தனது சபையில் அக்பர் அனுமதி வழங்கியிருந்தார்.


அக்பர் புகுத்திய புதிய சமயக் கொள்கையே "தீனே இலாஹீ"  (இறை ஒருமைப்பாடு) என்பதாகும். பல ஆண்டுகளாக  இறைவனைப் பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவர், இதர சமயங்களின் குறை நிறைகளையும் அலசி ஆராய்ந்தறிந்ததன் விளைவாகப் பிறந்ததே இந்தப் புதிய மார்க்கமாகும். நாடு முழுவதற்குமான ஒரு பொதுச் சமயம் தேவை எனும் கருத்தியலை மையப்படுத்தியதாகவே  அக்பரின் இக்கொள்கை அமைந்தது.


அக்பர் தனனது பாட்டனைப்போலவே நெஞ்சுரம்மிக்க ஒரு கடமை வீரராகத் திகழ்ந்தார். இளமை முதல் போர்களிலும் வேட்டையாடுவதிலும் ஈடுபாடு காட்டியதால் அவர் மிகச் சிறந்த உடற்பலத்தைப் பெற்றிருந்தார். வீரத்தில் மாவீரன் அலக்ஸாண்டருக்கு ஒப்பிடப்பட்டார். கடினமான ஒரு பணியைக்கூட விருப்போடு ஏற்றுக்கொள்வது அவரது இயல்பாக இருந்தது. ஒரு சமயம் அஜ்மீருக்கும் ஆக்ராவுக்கும் இடையிலான 240 மைல் தூரத்தை சரியாக ஒரே நாளில் சவாரி மூலம் சென்று முடித்தார். 


அக்பர் சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சிலபோது அளவு கடந்து குடித்ததால் தன்னிலை கெட்டுத் தடுமாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. வாலிப வயதில் காம வெறி கொண்டலைந்த அக்பர், அழகிய பெண்களை அடைவதில் அதீத ஆவல் கொண்டிருந்தார்.  பிற்காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தார். கோபமுற்ற சந்தர்ப்பங்களில் தீயெனக் கொதித்த அக்பர், கோபம் தணிந்த வேளைகளில் குளிரும் நிலவு போன்று காட்சியளித்தார். 


படியா மேதையான அக்பருக்கு கேள்வி ஞானமே அதிகமிருந்தது. அவரிடம் காணப்பட்ட இந்த இயல்பான ஞானம்தான் அவரை மெய்ப்பொருள் காணவும்  வைத்தது. 


எல்லா மன்னர்களியும் போலவே இவரும் இந்தியக் கட்டடக் கலை வளர்ச்சியில்  பெரும் பங்களிப்புச் செய்தார். தனது மகன் ஸலீமின் பிறப்பையொட்டி ஆக்ராவில் 7 மைல் சுற்றளவு கொண்ட , மூன்று பக்கங்கள் சுவரால் சூழப்பட்ட ஒரு சிறுப்                                                                                                              நகரை நிருமணித்தார். ராணி ஜோத்பாய் மாளிகை, பீர்பால் இல்லம், தீவானி காஸ், செங்கோட்டை, திவனே ஆம், யானை வாசல், ஹிரான் மினார், லாகூர் கோட்டை, அலகாபாத் கோட்டை முதலியன அக்பரின் கட்டடக் கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அக்பர் அசோகரோடு ஒப்பிடப்படுகிறார். சமய விவாதங்களில் கலந்து கொண்டு பரம் பொருள் ஒன்றுதான் என்பதை வ்லியுறுத்தினார்.  மக்களிடையே சமய ரீதியாக ஏற்படும் பூசல்களுக்கு  இறைவன் பற்றிய அறிவின்மையே காரணமென்றார்.சமய சார்பற்ற சமூகமைப்பொன்றைத் தோற்றுவிக்கும் பணியில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள்  புரட்சிகரமானவை.  இவரது சிந்தனைப் போக்குகள்  ஷரீஅத்துக்கு முரணாக அமைந்தமையால் 


சுமார் 50 வருடகால ஆட்சியின் பின்னர் மன்னர் அக்பர் தனது 63ம் வயதில் காலமானார். இவரது அடக்கவிடம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமையப் பெற்றுள்ளது.




ஜஹாங்கீர் (1605 - 1627 / 1014 - 1036)

அக்பர் இறக்கும்போது தந்து புத்திரர் ஸலீம்தான் தனக்குப் பின்னர் ஆட்சியாளராக வரவேண்டுமென விரும்பினார். இதன்படி 1605ல் (ஒக்டோபர் 21)நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி எனும் பட்டப்பெயரோடு ஆட்சியில் அமர்ந்தார். ஜஹாங்கீர் என்ற பாரசீகப் பதத்திற்கு உலகைக் கைப்பற்றி ஆள்பவன் என்பது பொருள்.

1569ல் பிறந்த இவர் இளம் பராயத்திலேயே பாரசீகம், துருக்கி, ஹிந்தி முதலாம் மொழிகளை விரும்பிக் கற்றார்.  இளமையிலேயே இலக்கியம், கணிதம், புவியியல், உயிரியல், இசை, ஓவியம், தாவரவியல்  முதலானவற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஃபைராம்கானின் மகன் அப்துர்ரஹீம் போன்ற திறமை மிக்க ஆசாங்களிடம் கல்வி பயின்றார். இவரிடம் நற்குணங்கள் குடிகொண்டிருந்தது போலவே தீய குணங்களும் குடிகொண்டிருந்தன. 17 வயதிலேயே ஜஹாங்கீர் குடிப்பழக்கத்துக்கு  அடிமையானார். சிற்றின்ப ஆசையில் மூழ்கித் திளைத்தார். ஓயாத குடியும் ஒழியாத சிற்றின்ப நாட்டமும் தனது தந்தை அக்பரிடமிருந்து பெற்றிருந்த உடற்கட்டை நிலைகுலையச் செய்தன. இவர் தனது இறுதிக் காலத்தில் அதிகாரத்தை இழந்து, அவரது அழகிய மனைவி நூர்ஜஹானை  கைகளில் ஒரு பொம்மை போலவே செயற்பட்டு வந்தார். 


பதவிக்கு வந்த ஜஹாங்கீர் ஆரம்பமாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  அவற்றுள்  பன்னிரு கட்டளைகள் (துஸ்தூருல் அமல்)  என்ற பெயரிலவர் வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாகும். இதற்கு மேலாக அவர் ஆற்றிய பணிகளைப் பின்வருமாறு நோக்கலாம். 

1. கைதிகளை விடுதலை செய்தார்.
2. அவரது பெயர் பொறிக்காப்பாட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன.
3. நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.
4. ஆக்ரா கோட்டையில்  ஒர் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிடார். பொற் சங்கிலியொன்று அந்த மணியோடு இணைக்கப்பட்டிருந்தது.  நீதி வேண்டுவோர்  அந்தப் பொற்சங்கிலியை அசைத்து மணியோசை செய்தால் அரசர் நேரில் வந்து அவர்தம் குறைகளைத் தீர்த்து வைத்து முறை வழங்குவார். 

முன்னைய முகலாய மன்னர்களின் காலத்தில் போலவே ஜஹாங்கீரின் காலத்திலும் பல்வேறு படையெடுப்புக்கள் இடம்பெற்றன.  அவற்றுள் கீழ்க் குறிப்பிடப்படும் இடங்களில் இடம் பெற்ற படையெடுப்புக்கள் முக்கியமானவை. 

1. வங்காளம் (1612)
2. மேவார் படயெடுப்பு (1614)
3. தக்காணத்தின் மீதான படயெடுப்புக்கள் (1608 - 1617)
4. காங்காரா (1620)


இவ்வளவு வெற்றிகளுக்கு  மத்தியில் ஏற்கெனவே ஹுமாயூன் காலத்தில் கைநழுவி அக்பரால் மீண்டும் கைப்பற்றப்பட்டிருந்த கந்தகார் பிரதேசம் இவரது காலத்தில் மீண்டும் கை நழுவிப் போனது.   இவரது கட்டளையை ஏற்று இவரது மகன் குர்ரம்  கந்தகார்மீது படையெடுப்பு மேற்கொள்ளாததே  இதற்குக் காரணமாகும்.  இவரது மூத்த மகன் குஸ்ரூ இவரை எதிர்த்துக் கலகம் செய்தபோது மகனின் எதிர்ப்பை வெற்றீகரமாக முறியடித்தார். 


உல்லாசப் பிரியரான ஜஹாங்கீர் சுகபோகங்களில் மூழ்கித் திழைத்தார். இதனால் இவரது  காதல் மனைவி நூர்ஜஹானே ஆட்சியை நடாத்தி வந்தார். நூர்ஜஹான் தனது கணவனை பொம்மையாக்கி அதிகாரம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டார். இதன் மூலம் தன் உறவினர்களை உயர் பதவிகளில் அமர்த்தினாள். தன் சகோதரனுக்கு ஆஸப்கான்  எனப்  பட்டம்  சூட்டி அரசவையில் அவருக்கு முக்கிய இடம் கொடுத்தார். நூர்ஜஹானின் தந்தை கியாஸ்பேக்கும்  அரசவையில் முக்கிய செல்வாக்குப் பெற்றார். இக்காலத்துப் பெண்கள் போதியளவு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்தனர். கலைத்துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்கிய இவர் பாரசீகப் பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார். எல்லையற்ற அதிகாரங்களோடு நடந்து கொண்டதால் குர்ரம் புரட்சி செய்தார். 


ஜஹாங்கீர் அளவுக்கு மீறி மதுவருந்தியதால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். ஓய்வுக்காக காஷ்மீர் சென்றார். அங்கு கி.பி.1627ல் காலமானார். மனைவி நூர்ஜஹான் 1645ல் காலமானார்.


ஷாஹ்ஜஹான் (1627  - 1658  /  1037 - 1067)

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது புதல்வரான இவர் கி.பி.1592/3ல்  லாகூரில் பிறந்தார். தாயார் பெயர் பல்மதி - ராஜா உதை சிங்கின் மகள். இவரது இயற் பெயர் மிர்ஸா குர்ரம் என்பதாகும். இவர் அக்பரின் முகச்சாயலைப் பெற்றிருந்தார். இளமையில் இவர் மீது ஜஹாங்கீர் அதிக அன்பு செலுத்தியதோடு இவரைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்து வந்தார். பாரசீக மொழியில் ஆர்வம் காட்டிய ஷாஹ்ஜஹான்; அரசியல், சமயம், மருத்துவம்  முதலாம் துறைகளை விரும்பிக் கற்றார்.  1610ல் மீர்சா எனும் பெண்ணையும் 1612ல்  அர்ஜுமந்த் பானு பேகம் எனும் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மேலதிகமாகத் தனது அந்தப்புரத்தில் இருந்த பல பெண்கள் ஷாஹ்ஜஹானின் நெஞ்சத்தில் உலா வந்தனர்.

இவர் ஆட்சிக்கு வருவதை விரும்பாத இவரது எதிரிகள் இவருக்கெதிராகப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இவரின் செல்வாக்கைக் குலைக்க நூர்ஜஹான செய்த சதிகளும் முறியடிக்கப்பட்டன.  எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிபோல திடமான உள்ளத்தோடு போராடி  சகல் எதிர்ப்புக்களையும் வெற்றி கொண்டவராய் 1628ல், அபுல் முஸாபிர் ஷஹாபுத்தீன் முஹம்மது ஷாஹ்ஜஹான் அனும் பட்டத்தோடு ஆட்சியில் அமர்ந்தார். 


ஷாஹ்ஜஹானின் ஆட்சிக் காலத்தை முகலாய ஆட்சியின் பொற்காலம் என்பர். இக்காலத்தில் ஆட்சி செழிப்புற்று ஓங்கியது. பொன்னும் பொருளும் காண்போரை மலைக்கச் செய்தன. தாஜ்மஹல், முத்து மசூதி, அலிமசூதி முதலியவை அவரது ஆட்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. டெல்லி, லாகூர், காஷ்மீர் முதலாம் இடங்களில் அமைக்கப்பட்ட எழில் மிகு பூங்காக்கள் இவருக்கு தோட்டக் கலையிலும் மலர்களிலும் இருந்த ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன. தைமூரின் வழிவந்த முகலாயரின் வழித்தோன்றலில் ஷாஹ்ஜஹானே ஆட்சித் திறனிலும் கருவூலத்தைக் கட்டிக் காப்பதிலும் நிலவரிச் சீர்திருத்தங்கள் செய்வதிலும் படை வீரர்கள், அதிகரிகளின் திறமைகளைக் கண்டறிவதிலும் சிறந்தவராக விளங்கினார். குடி மக்களுக்கு துன்பம் விளைவித்த கவர்னர்களையும் இதர அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ததால் ஆட்சியில் அமைதி நிலவியது.


முகலாயர் ஆட்சியில் ஷாஹ்ஜஹான் காலத்து ஆட்சி பரந்து விரிந்த ஒரு பேரரசாகக் காணப்பட்டது. ஒரு தந்தை தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பது போல அவர் தனது குடிமக்களைக் காத்தார். முகலாயரது கட்டடக் கலை இவரது காலத்திலேயே உச்ச நிலையை அடைந்தது. ஷாஹ்ஜஹான் நிறுவிய எழில் மிகு காதல் சின்னத்தை (மாளிகையை) அவரே, "இவ்வுலகின் விண்ணுலகம்" எனக் குறிப்பிடுகிறார். வெண் சலவைக் கற்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வழகு மாளிகை இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.  தனது முன்னோரிடம் இருந்து பெற்றுக்கொண்ட செல்வமும் நாட்டின் வர்த்தக விருத்தியால் கிடைத்த வருமானமும் தனது ஆட்சியின் கீழிருந்த பெரு நிலப்பரப்புக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற திறைகளும் இவரை மிகப்பெரும் செல்வந்தனாக்கின. இதனால், இது நுண்கலையில் அவருக்கிருந்த ஆர்வத்தைத் தூண்டியது. இதன் விளைவாக எழில் மிகு கட்டடங்கள் அவரது ஆட்சியில் எழுந்தன. இவர் முகலாயரின் அகஸ்டஸ் என்று கூட வர்ணிக்கப்படுகிறார். தனித் தங்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட முத்துக்களும் நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஒளி மிக்க மயிலாசனத்தில் ஆட்சி செய்த ஷாஹ்ஜஹானின் ஆட்சி இன்னும் ஒளி பெற்று விளங்கியது. இவரது அரசவையை போர்வ்வீரர்களும் கவிஞர்களும் கலைஞர்களுமே அணி செய்தனர். 


ஷாஹ்ஜஹான்  ஆட்சியில் இந்துக்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அவரது மகன் தாரா இந்துக்களோடு  நெருங்கிப் பழகினார். இருப்பினும் இவரது ஆட்சியை சமயப் பொறையுடன் கூடிய ஆட்சிதான் என்று கூறுவதற்கில்லை. ஷாஹ்ஜஹான் அடிப்படையில் ஒரு ராஜபுத்திரியின் மகனாக இருந்தபோதும் இவரது காதலி மும்தாஜின் மார்க்க ஈடுபாடு இவரையும் பற்றிக்கொண்டது. இதனால் அக்கால முஸ்லிம்கள் இவரை சமயத்தின்  காவலர் என அழைத்தனர். ஷாஹ்ஜஹான் தன் தந்தையை விட வைதீகமானவர். அவரிடம் சமய வெறி காணப்படாவிட்டாலும் சிலபோது அவரது நடத்தைகள் அவரிடம் சமயவெறி இருந்தது என்பதைக் காட்டின. அவர் தனதாட்சியில் முஸ்லிமல்லாதோரை துன்புறுத்தாவிட்டாலும் அக்பரின் சமயப் பொறை படிப்படியாக இவரது காலத்தில் கைவிடப்பட்டது எனலாம். 


இவ்வளவு சிறப்புக்களையும் பெற்றிருந்த ஷாஹ்ஜஹான் தான் இறப்பதற்கு முன்பு தனது மகன் ஔரங்கசீப்பாலும் சிறைக்காவலன் முதாமத் என்ற கொடியவனாலும் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையில் உயிர் நீத்தார். ஒரு தாய் வயிற்றில் பிறந்த தனது பிள்ளைகள் நால்வரும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு யுத்தங்கள் செய்து கொண்டதை கண்கூடாகக் கண்டு துயருற்ற ஒரு துர்ப்பாக்கியசாலித் தந்தை வரலாற்றில் இவரொருவராக மட்டுமே இருந்திருக்க முடியும்.