SASIKUMAR IN DEATH BED ,
SIVAJI GANESAN TOOK REST IN
TANJORE REFUSED TO COME HIS FUNERAL
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சசிகுமார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
சசிகுமார் – தென்னிந்திய திரையுலகில் மறக்க இயலாத ஒரு சிறந்த நடிகர். இவரை திருமலை-தென்குமரி படத்தில் ஏ.பி.நாகராஜன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பணத்துக்காக, அவள், ரோஷக்காரி, வெள்ளிக்கிழமை விரதம், திருடி, தாய்க்கு ஒரு பிள்ளை, தெய்வாம்சம், ராஜபார்ட் ரங்கதுரை, சமர்ப்பணம், மனிதனும் தெய்வமாகலாம், காசேதான் கடவுளடா, வீட்டுக்கு ஒரு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தவர். 8.12.1944- இல் கும்பகோணத்தில் பிறந்த இவர் இவ்வுலகில் வாழ்ந்தது மொத்தம் முப்பது ஆண்டுகள் மட்டுமே
சசிகுமார் வீட்டில் சம்பவத்தன்று காலை எண்ணூரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார் சசிகுமார். அப்போது பால் தயார் செய்து தரும்படி மனைவியிடம் கேட்க , அவரும் பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்தார். அப்போது ஏற்பட்ட தீ இவரது மனைவியின் சேலையில் பற்றிக்கொண்டது. அப்போது எழுந்த கூக்குரலைக் கேட்டு மறு அறையில் நின்றிருந்த சசிகுமார் ஓடோடிச் சென்று விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடினார். அப்போது அவர் சந்தனக்கலரில் டெர்லின் சட்டை அணிந்திருந்ததால் தீ அவரையும் எளிதில் பற்றியது
இவர்களது குழந்தைகளுக்கு அப்போது வயது பெண் குழந்தைக்கு ஆறு. இளையவர் விஜயசாரதிக்கு வயது நான்கு. இருவரும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். கணவனும் மனைவியும் தீவிபத்திற்குப் பின் ராயப்பேட்டை மருத்துவமனை யில் தீவிர சிகிட்சைக்காக சேர்க்கப்பட்டனர். மூன்று நாட்கள் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்ட பின்னரும் சிகிட்சை பலனின்றி முதலில் சசிகுமாரும்; அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பின் சசிகலாவும் ஒருவர் பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர்.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சசிகுமார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு சிவாஜி மேல் அளப்பரிய பற்று இருந்தது . தீப்புண் காயங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது . JIஎனவே அவரது கடைசி ஆசை சிவாஜியை பார்க்கவேண்டும் என்று மேஜர் சுந்தர்ராஜனிடம் கேட்டுக்கொண்டார் .
அப்போது தஞ்சாவூரில் சூரக்கோட்டையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் சிவாஜி கணேசன் .
மேஜர் சுந்தரராஜன் பலமுறை காலையில் இருந்து மாலைவரை போன் போட்டும் சிவாஜி வர மறுத்து விட்டார் .ஏனென்றால் சசிகுமார் ஒரு துணை நடிகராகவே தான் இருந்தார் . கிட்டத்தட்ட 19 முறை அழைத்தும் பிடிவாதமாய் வர மறுத்தார் .கடைசியில் மேஜர் சுந்தரராஜன்
ப த்திரிக்கையாளரை அழைத்து உண்மையை சொல்லிவிடுவேன் என்று மிரட்டியதால் வேண்டா வெறுப்போடு சசிகுமாரை பார்க்க வந்தார் .
இந்த சம்பவத்திலிருந்து சிவாஜியும் ,சுந்தர்ராஜனும் பேசிக்கொள்வதே இல்லை .அப்போதும் சில சில்லறை ஏடுகளில் இந்த சம்பவம் வந்தாலும் ,பெரிய பத்திரிக்கைகளில் வரவில்லை . இந்த சம்பவம் சிவாஜி மேல்நான் வைத்து இருந்த மதிப்பை குறைத்தது .
அப்புறம் ராஜபாண்டியன் என்ற துணை நடிகர் தற்கொலைக்கு மூல காரணம் சிவாஜி கணேசன் மட்டுமே .இந்த ராஜபாண்டியன் தாலாட்டு படத்தில் கே ஆர் விஜயாவுடன் கதாநாயகனாக நடித்தவர் .
No comments:
Post a Comment