Saturday 23 November 2019

#ஆஷ்துரை born November 23 ,1872




#ஆஷ்துரை born November 23 ,1872

ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்டது மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்...!

அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த #வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொ ள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்!) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டி ருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவ மனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்...?

அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்..!
அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்...?

அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர்.

அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்..!

அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே

ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.
இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்
ஆசிரியர் : மாற்கு.

தூத்துக்குடி சதிவழக்கு என்பது 1908-ல் வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தடையை மீறி மேடையில் பேசியதற்காக தொடரப்பட்ட சதிவழக்காகும். இவ்வழக்கில் இவர்கள் இருவரும் குற்றவாளிகளாக்கப்பட்டு சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு உதவியதற்காக ஒரு ஆயுள் தண்டனையும் மேடைப்பேச்சிற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வ. உ. சிதம்பரனாருக்கு வழங்கப்பட்டது. மேல் முறையீட்டுக்குப் பின்னர் இது குறைக்கப்பட்டது.

விடுதலைத் திருநாள் கூட்டம்[மூலத்தைத் தொகு]
வங்கத்தின் தீவிரவாதத் தலைவர்களில் ஒருவரான விபின்சந்திரபால், அலிப்பூர் சதிவழக்கில் அரவிந்தருக்கு எதிராகச் சாட்சிசொல்ல மறுத்து ஆறுமாதசிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவர் விடுதலையாகும் 1908 மார்ச் 9 ம் தேதியை நாடெங்கும் விடுதலை தினமாகக் கொண்டாடுவதென்று தேசபக்தர்கள் தீர்மானித்தனர். நெல்லை மாவட்டத்திலும் சிதம்பரனார் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இதை அறிந்த அரசு அதிகாரிகள் மார்ச் 9ம் தேதியன்று தூத்துக்குடியில் ஊர்வலமோ பொதுக்கூட்டமோ நடத்தக் கூடாது என்று தடை விதித்தனர். ஆனால், திருநெல்வேலியில் அதே நாளில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியர் விஞ்ச்துரை நெல்லையிலும் தடையுத்தரவை விதித்தார்.

ஆனால், சிதம்பரனாரும் சிவாவும் தடையுத்தரவை மீறி மார்ச் 9 ஆம் தேதியன்று விபின் சந்திரபாலின் விடுதலைத் திருநாள் கூட்டத்தை சிறப்பாக நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற ஊர்வலம் ஒன்றும் நடந்தது.

மறைமுகமான புறக்கணிப்பு[மூலத்தைத் தொகு]
பிரித்தானிய அரசுக்கு ஆதரவளிக்கும் இந்தியர்களுக்கு வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. சவரம் செய்வதற்கு சவரத்தொழிலாளி மறுத்தார். சலவைத் தொழிலாளி சலவை செய்ய மறுத்து ஒதுங்கினார். இப்படி யாருமே சொல்லாமல் மக்களே ஒரு மறைமுகமான ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கி நடத்தி வந்தனர். மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சிய அரசாங்கம் சிதம்பரனாரையும், சிவாவையும் எப்படியாவது கைது செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தது.

தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்தால் மக்கள் கலகம் செய்வார்கள் என்று அஞ்சிய மாவட்ட கலெக்டர் விஞ்ச்துரை, உடனே தம்மைச் சந்திக்குமாறு, வ. உ. .சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் 1908 மார்ச் 12-ஆம் தேதியன்று திருநெல்வேலிக்குச் சென்று ஆட்சியர் விஞ்ச் துரையைச் சந்தித்தனர். அப்போது அவருக்கும் சிதம்பரனாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைது நடவடிக்கை[மூலத்தைத் தொகு]
சிதம்பரனாரும் சிவாவும் நெல்லை மாவட்டத்தை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்கவேண்டும்; அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதில்லை என்று நன்னடத்தை ஜாமீன் தரவேண்டும் என்று விஞ்ச் ஆணவத்தோடு உத்தரவிட்டார். அதற்கு மறுத்துவிட்டு எழுந்தார் சிதம்பரனார். ஆனால் ஆட்சியர் முன்னிலையிலேயே சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்டனர். சிதம்பரனாரின் வீட்டையும் தூத்துக்குடியில் போலீசார் சோதனையிட்டு சில கடிதங்களைக் கைப்பற்றினர்.

சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்ட செய்தி திருநெல்வேலி நகரில் காட்டுத்தீ போல் பரவியது நெல்லை மக்கள் கொதித்தெழுந்தனர். மறுநாளான மார்ச் 13ம் தேதியன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லாமல் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம் புறப்பட்டனர்

தேசபக்தர்களின் கோபம் அளவு கடந்தது. திருநெல்வேலி இந்துக்கல்லூரி மாணவர்கள் கடுங்கோபத்தோடு வகுப்புக்களை விட்டு வெளியேறி வீதியில் புகுந்து முழக்கமிட்டவாறே ஊர்வலமாகச் சென்றனர். சிவாவையும், சிதம்பரனாரையும் அடைத்து வைத்துள்ள பாளையங்கோட்டை சிறைச்சாலையை உடைத்து நொறுக்கி விட்டு அவர்களை மீட்டுவருவோம்' என்று இளைஞர் கூட்டம் ஒன்று கிளம்பியது. கிராம நிர்வாக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், நகரசபை எண்ணெய்க் கிடங்கு ஆகியவற்றைத் தாக்கி ஒரு கும்பல் நெருப்பிட்டது மக்களின் ஆவேசமும், ஆர்ப்பாட்டமும்அளவு கடந்தன.

காவலர்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். தலைமைக் காவலர் குருநாத ஐயர் என்பவர் தேசபக்தர்களோடு சேர்ந்து கொண்டு தலைவர்களை விடுதலை செய் என்று முழக்கமிட்டார். அதனால் பின்னர் வேலையை இழந்தார்.

ஆஷ் துரை[மூலத்தைத் தொகு]
துணை ஆட்சியராக இருந்த ஆஷ்துரை என்பவன் அப்போது பெரும் காவலர் படையோடு களத்தில் இறங்கினான். வீதியில் கூடியமக்களை கண் மண் தெரியாமல் தடியடி செய்து கலைந்தோட வைத்தான். கலைய மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் மரணமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நால்வரின் பிணங்களும் அன்று மாலை வரை சாலையோரத்திலேயே கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தக்கூட ஆஷ்துரை அனுமதிக்கவில்லை. அதனைப் பார்த்தாவது கலகம் செய்கிறவர்களுக்கு புத்தி வரட்டும் என்று கொக்கரித்தான். மறுநாள் தூத்துக்குடிக்கும், தச்சநல்லூருக்கும் கலகம் பரவியது. தொடர்ந்து 4 நாட்கள் வரை கலவரம் நீடித்தது. இதனால் பாதுகாப்புப் படையை வரவழைத்து கலவரத்தை அடக்கினர். கலவரம் நடந்த பகுதி மக்களே பாதுகாப்புப்படையின் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று கூறி தண்டத் தீர்வையும் விதித்தான் ஆஷ்.

தூத்துக்குடியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் இரவு நேரங்களில் தங்கப் பயந்து, தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முயல் தீவுக்கு படகில் சென்று தங்கிவிட்டு பகலில் மட்டும் நகருக்குள் தக்க பாதுகாப்போடு வந்து போயினர்.

பாரதியார் கண்டனம்[மூலத்தைத் தொகு]
சிதம்பரனாரும், சிவாவும் கைது செய்யப்பட்டதை அறிந்த பாரதியார் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று, `இந்தியா' பத்திரிகையில் காரசாரமாகக் கட்டுரை எழுதினார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறி சுமார் நூறு பேரைக் கைது செய்து காவலில் வைத்து சித்திரவதை செய்ய ஆஷ் ஏற்பாடு செய்தான். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு அனைவர் மீதும் வழக்குத்தொடரப்பட்டு, பல்வேறு தண்டனைகளும் வழங்கப்பட்டன.

விசாரணை[மூலத்தைத் தொகு]
வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணியசிவா ஆகியோர் மீது தொடரப்பட்ட தூத்துக்குடி சதிவழக்கு திருநெல்வேலி துணை அமர்வு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஏ. எம். பின்ஹே என்பவர் முன்னிலையில் 1908 மார்ச் மாதம் 28-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டு[மூலத்தைத் தொகு]
1908 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23, 26, ஆம் தேதிகளிலும், மார்ச் 1, 3 தேதிகளிலும் சிதம்பரனார் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை என்றும், இந்திய மக்களை பிரித்தானிய மக்களுக்கும் மன்னர் பிரானுக்கும்எதிராகத் தூண்டிவிட்டு போர் புரிய ஆயத்தம் செய்யக் கூடியவை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான பேச்சாளரும் கலகக்காரருமான சுப்பிரமணிய சிவாவுக்கு தங்கும் இடமும், உணவும் அளித்துக் காப்பாற்றி இந்தியன் பீனல்கோடு 155-ஏ பிரிவுப்படி சிதம்பரனார் குற்றம் செய்திருக்கிறார் என்றும், சிதம்பரனாரும் சிவாவும் சேர்ந்து பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டினர். சுப்பிரமணிய சிவாவின் மீதும் அரசாங்கத்திற்கு எதிரான சொற்பொழிவுக்காகத் தனிக்குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

பாரதியார் சாட்சியம்[மூலத்தைத் தொகு]
வழக்கு விசாரணை சுமார் இரண்டு மாதகாலம் நடந்தது. சிதம்பரனாருக்காகவும், சுப்பிரமணிய சிவாவுக்காகவும் துவக்கத்தில் தஞ்சை என். கே. ராமசாமி ஐயரும் பின்னர் சடகோபாச்சாரியாரும் வாதாடினர். அரசுத் தரப்பில் பாரிஸ்டர் ரிச்பண்ட் என்பவர் வழக்காடினார். ஏராளமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிதம்பரனார் தரப்பில் மகாகவி பாரதியார் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தார். பாரதியார் நீதிமன்றத்தின் படியேறியது அதுதான் முதலும் கடைசியுமாகும். வழக்கு விசாரணை முடிந்து 1908 ஜுலை மாதம் 7 ஆம் தேதியன்று நீதிபதி பின்ஹே தீர்ப்புக் கூறினார்.

தீர்ப்பு[மூலத்தைத் தொகு]
"அரசாங்கத்திற்கு எதிரான குற்றத்திற்கு ஓர் ஆயுள் தண்டனையும் சிவாவுக்கு உதவிய குற்றத்திற்கு மற்றுமோர் ஆயுள் தண்டனையுமாக மொத்தம் 40 ஆண்டு தீவாந்திர சிட்சை தண்டனை வழங்கி, இரண்டையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும்" என்று நீதிபதி பின்ஹே தீர்ப்பளித்தார். சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கண்டனங்கள்[மூலத்தைத் தொகு]
வ.உ. சிதம்பரனாரின் சாதாரண மேடைப் பேச்சுக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் அதையும் அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும். அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும்(40 ஆண்டுகள்) என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனையைக் கேள்விப்பட்டு தேச மக்களும், தலைவர்களும் கொதித்து எழுந்தனர். நாடெங்கும் கண்டனக் கூட்டங்களும், கண்டனத் தீர்மானங்களும் போடப்பட்டன. சுதேசமித்திரன், ஸ்டேட்ஸ்மேன், வங்காளி ஆகிய இந்திய இதழ்களும் பிரித்தானிய இதழ்களும் கண்டனத் தலையங்கங்களை எழுதின. அநியாயத் தீர்ப்பு எனக் கண்டித்தனர். இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியாவிற்கான மந்திரியாக இருந்த லார்டு மோர்லி என்பவரே இந்தத் தண்டனையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, "ஒரேயொரு சொற்பொழிவுக்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையா? இது என்ன நீதி? " என்று இந்திய வைசிராயான லார்டு மிண்டோவுக்கு ஒரு கண்டனக் கடிதத்தை எழுதினார்.

உயர்நீதிமன்ற மேல் முறையீடு[மூலத்தைத் தொகு]
பின்ஹேவின் தீர்ப்பை எதிர்த்து சிதம்பரனார், சிவா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை 1908 அக்டோபர் 13-ல் முதன்மை நீதிபதி. ஆர்னால்ட் ரைட், நீதிபதி மன்றோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது சிதம்பரனாருக்காக வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார் ஆகியோர் வாதாடினர். உயர்நீதி மன்றம் குற்றங்கள் அனைத்தையும் சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் செய்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தினாலும், தண்டனைக் காலத்தை 6 ஆண்டு, 3 ஆண்டு என்று குறைத்து, இரண்டையும் ஏக காலத்தில், அதாவது 9 ஆண்டுகள் அனுபவித்தால் போதும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதிலும் நிறைவடையாத சிதம்பரனாரின் நண்பர்கள், பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். பிரிவி கவுன்சிலும் 6 ஆண்டு தண்டனையை உறுதிப்படுத்திற்று. ஆனால், அதை அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று இருந்ததை மாற்றி, உள்நாட்டு சிறையில் கழித்தால் போதும் என்று தீர்ப்பளித்தது.

இந்திய வரலாற்றில் திரிவுகள் மிகவும் சகஜமானவையே .அதன் அடிப்படை ஜாதி,மதம் , என்பதுதான் வேதனையான விஷயம் .
வேலூரில் முதன் முதலாய் ஆங்கிலேயரை எதிர்த்து 1806 ஜூலை 10 இல் நடைபெற்ற புரட்சியே முதல் சுதந்திரப்போருக்கான விதை . ஆனால் நடத்தியவர்கள் கீழ் ஜாதியினர் . இந்த புகழ் இவர்களுக்கு போய் விடக்கூடாது என்பதற்காக இவை கலகங்கள் என்று பெயரிடப்பட்டது

இதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் நடை பெற்ற அனைத்திற்கும் இவ்வாறே கேவல படுத்தப்பட்டது .
வீர முழக்கமிட்ட கட்டபொம்மன் ஒரு தெலுங்கன் ,திப்பு சுல்தான் ஒரு முஸ்லீம் ,மருது சகோதரர்கள் , வேலுநாச்சியார் தேவர் இனம் , கிட்டூர் சென்னம்மா ,பழசி ராஜா இவர்கள் அனைவருமே கீழ் சாதியில் தாழ்ந்தவர்கள் . எனவே இவர்கள் வெள்ளையரை எதிர்த்தது கலகம் தான். விடுதலைக்கு எந்த சம்பந்தம் இல்லாதவர்கள் .

ஆனால் மங்கள் பாண்டே என்ற உயர் ஜாதிக்காரன் வெள்ளைக்காரனை சுட்டு தோற்று வித்த சிப்பாய் கலகம் ஆனது முதல் சுதந்திரப்போர் என்று போற்றப்பட்டு பாடப்புத்தகத்தில் அச்சேற்றப்பட்டது .

சோனியா அரசு 2007 ஆம் ஆண்டு இதற்கு ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட்டு உயர் ஜாதியினருக்கு பல்லக்கு தூக்கியது .தமிழ் அறிஞர் கருணாநிதி தனது வாலை சுருட்டி வாயில் வைத்துக்கொண்டார் .

இதே போல் ரூபாய் சிம்பல் ஹிந்திக்கு மாற்றப்பட்டது .அப்போது தமிழ் நாட்டை பங்கு போடுவதில் மும்முரமாய் இருந்ததால் ஹிந்தி ஒழிக ன்னு கோஷமிட்ட கருணாநிதி மூச்சு கூட விடவில்லை .

கனிமொழிக்கு ஜாமீனுக்கு அலையணுமே !
என்ன செய்யிறது !!

இனி ஆஷ் துரை விவகாரத்துக்கு வருவோம் .எங்களுக்கு வாஞ்சிநாதன் சுதந்திர போராளி .சிதம்பரம் பிள்ளையையும் ,சுப்ரமணிய சிவாவையும் ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்டார் என்று சுதந்திர இந்தியா செப்பியது .

ஆனால் ஆங்கிலேய ரிகார்டுகள் ஆஷ் துரை ஏழைப்பங்காளன் ,சமதர்மவாதி என்று அவருக்கு நினைவு மண்டபம் கட்டியது . அதற்கு உதவியவர்கள் யார் தெரியுமா ? ஆஷ் துரைக்கு எதிராயும்,வாஞ்சிக்கு ஆதரவாய் சாட்சியம் அளித்த உயர்ஜாதியினர் தான் .

குற்றாலத்தில் அருவிகளில் கீழ் ஜாதியினர் குளிக்க முடியாது .இதை மாற்றி எல்லோரும் குளிக்கலாம் என்று சட்டம் போட்டவர் ஆஷ் துரை . 1908

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயே கலெக்டர் ஆஷ்துரை கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவை மீட்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த காலக்கட்டத்தில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதனும், சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வந்தார்.

இந்நிலையில், அப்போது நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் எஸ்கார்ட் ஆஷ் ரயிலில் பயணம் செய்த போது, மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனும் தன்னைத்தானே சுட்டுக் கொன்று வீர மரணத்தைத் தழுவினார். இந்த சம்பவம் ஆங்கிலேயருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை பல்வேறு அமைப்பினரும் அனுசரித்து வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் வீரவாஞ்சி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரை கல்லறைக்கு ஆதி தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள இங்கிலீஷ் சர்ச் வளாகத்தில் ஆஷ்துரை கல்லறைக்கு இன்று காலை வந்த ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளான கலைக்கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினர்.

இதுபற்றி கூறிய கலைக்கண்ணன், ''தீண்டாமை நிலவிய கொடூரமான காலக்கட்டத்தில் சமத்துவத்துக்காக பாடுபட்டவர் ஆஷ்துரை. அனைத்து மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய காரணத்தால், சனாதன தர்மத்தை வலியுறுத்தியவர்களின் கோபத்துக்கு உள்ளானவர். சமூக விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுள் முதன்மையானவர் ஆஷ்துரை என்பதால் அவருக்கு எங்களது கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினோம்'' என்றார்.

ஒரு பக்கம் வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்துவதும், இன்னொரு பக்கம் அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ்துரைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்ததால், நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-ஆண்டனிராஜ்

வாஞ்சிநாதன் & ஆஷ் துரை! மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஜூலை /09/14 :பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.

அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.

மணியாச்சியின் புகை வண்டி நிலையத்தில் வைத்து ஆஷ் துரையை சுட்டுக் கொன்றனர். அப்போது வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே ஆஷ் துரையின் மீதான வெறுப்புக்கு காரணம் சாதி வெறிதான் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளளாம்.

*யாழினி*

Vanchinathan
3:53 PM  UNKNOWN  NO COMMENTS
Vanchinathan (1886 – June 17, 1911), popularly known as Vanchi, was an Indian Tamil independence activist. He is best remembered for having shot dead Ashe, the Collector of Thirunelveli and having later committed suicide in order to evade arrest.
Personal life

Vanchinathan was born in 1886 in Shenkottai to Raghupathy Iyer and Rukmani Ammal. His actual name was Shankaran. He did his schooling in Shenkottai and graduated in M.A. from Moolam Thirunal Maharaja College in Thiruvananthapuram. Even while in college, he married Ponnammal and got into a lucrative Government job.
Freedom Movement

On June 17, 1911, Vanchi assassinated Ashe, the district collector of Tirunelveli, who was also known as Collector Dorai. He shot Ashe at point-blank range when Ashe's train had stopped at the Maniyachi station, en route to Madras. He committed suicide thereafter. The railway station has since been renamed Vanchi Maniyachi.

On that day, Ashe boarded the 9-30 a.m. Maniyachi Mail at Tirunelveli junction. With him was his wife, Mary Lillian Patterson, who had arrived from Ireland only a few days earlier. They had married on April 6, 1898, in Berhampore; Mary was about a year older than Ashe. They were on their way to Kodaikanal where their four children, Molly, Arthur, Sheila, and Herbert, lived in a rented bungalow. At 10-38 the train pulled in at Maniyachi. The Ceylon Boat Mail was due to arrive at 10-48. As the Ashes sat facing each other in the first class carriage, waiting for the Boat Mail to arrive, a neatly dressed man with tufted hair and another young man wearing a dhoti approached the carriage. The former boarded the carriage and pulled out a Belgian-made Browning automatic pistol. The bullet hit Ashe in the chest and he collapsed. The sound of the pistol shot was absorbed by the howling wind.

After the shooting the assassin ran along the platform and hid in the latrine. Some time later he was found dead, having shot himself in the mouth. In his pocket was found following letter:

"The mlechas of England having captured our country, tread over the sanathana dharma of the Hindus and destroy them. Every Indian is trying to drive out the English and get swarajyam and restore sanathana dharma. Our Raman, Sivaji, Krishnan, Guru Govindan, Arjuna ruled our land protecting all dharmas and in this land they are making arrangements to crown George V, a mlecha, and one who eats the flesh of cows. Three thousand Madrasees have taken a vow to kill George V as soon as he lands in our country. In order to make others know our intention, I who am the least in the company, have done this deed this day. This is what everyone in Hindustan should consider it as his duty.

The contents of the letter indicated that the murder was political and caused great apprehension. The timing of the assassination indicated a protest against the impending coronation.

Vanchi was a close collaborator of Varahaneri Venkatesa Subrahmanya Iyer (normally shortened to V.V.S.Aiyar or Va.Ve.Su Iyer), another freedom fighter who sought arms to defeat the British. He trained Vanchinathan to execute the plan in all perfection.They belonged to Bharatha matha Association.

The Tamil Nadu Government has decided to build a memorial in Shenkottai the birthplace of this martyr.
Posted in:


No comments:

Post a Comment