SALIYA-ASOKKAMAALA ANCIENT LOVE HISTORY
SALIYA-ASOKKAMAALA ANCIENT LOVE HISTORY இது “சாலியா – அசோக்கமாலா” சிங்களத்துக்கு காதல் ! இலங்கையில் நடந்த காதல் கதைகளில், சரித்திர வரலாறு படைத்த கதை “சாலியா – அசோக்கமாலா” காதல் கதை. அக்கதை மக்களின் கவனத்தை ஈர்த்ததுக்கு முக்கிய காரணம், சாலியா சிங்களவர்கள் பெருமையாக பேசும் இலங்கை முழுவதையும் கிமு 161 -137 காலத்தில் ஆண்ட துட்டகைமுனு மன்னனின் மகன் ஆவான். அதோடு பட்டத்துக்கு இளவரசன். அசோக்கமாலா கீழ்சாதியான சண்டாளக் குலத்தைச் சேர்நதவள், ஆனால் அழகி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள இனத்திடையே சாதிவேற்றுமை இருந்து வந்ததுக்கு இக்கதை ஒரு ஆதாரம். அனுராதபுரத்தில் இக்காதலர்களை கல்லில் சிலை வடிவில் அமைத்து, அனுராதபுரத்தில் உள்ள “இசுருமுனிய” விகாரவுக்கு போக முன், வாசலில் “இசுருமுனிய காதலர்கள்” என்ற பெயரில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிங்களவர்கள் போற்றும் “மகாவம்சம்” என்ற இலங்கையின் வரலாற்று நூலில் இக்காதல் கதை விபரமாக எழுதப்பட்டுள்ளது ஒருநாள், இளவரசன் சாலியா, அசோக மரக்காட்டில் உலாவும் போது ஒரு இனிமையான பெண்குரலில் பாட்டோன்றைக் கேட்டான். அந்தக் குரலால் கவரப்பட்ட ...