Posts

Showing posts with the label MANDAPAM

STONE MANDAPAM OF MADURAI MADANA GOPALASAMY TEMPLE IN AMERICA ,PHILADELPHIA,1912

Image
  STONE MANDAPAM OF MADURAI , MADANA GOPALASAMY TEMPLE  IN AMERICA ,PHILADELPHIA1912 சாமி சிலைகள் மட்டுமல்ல, #கோவில் #மண்டபமே வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆச்சர்யமாக இருக்கலாம். இது தமிழகத்தில் அதுவும் கோவில் நகரமாகச் சொல்லப்படுகிற மதுரையில் நடந்திருக்கிறது. அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குப் பிறகு தான் எல்லா திருவிளையாடல்களும் நடந்தன என்று வாதிடுகிறவர்கள்-கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது எப்படி இருந்தன என்பதையும் சற்றுக் கவனிக்கலாம். வாங்க…பார்க்கலாம். மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில். நாநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு ததும்பும் சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் கிடக்கிறது. அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதே வெட்டவெளியை முன்பு அபூர்வ வனப்பால் நிரப்பியிருந்தது, நுணுக்கமான அழகு மிளிர்ந்த அற்புதமான கல் மண்டபம். அந்த அபூர்வம் இப்போது எங்கே போனது? பிரிட்டிஷாரின் ஆட்சி நடத்த காலம். சிற்பங்களுக்குப் பெயர்போன மதுரை...

SETHUPATHY MANDAPAM ALIAS NOSE-CUT MANDAPAM -MADURAI HISTORY

Image
  SETHUPATHY MANDAPAM ALIAS  NOSE-CUT MANDAPAM -MADURAI HISTORY மதுரை – மூதூர் மாநகரத்தின் கதை - 6 | மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை! ஆயிரக்கணக்கன பெண்கள், குழந்தைகள், ஆண்களின் மேலுதட்டுடன் மூக்கும் கொடுமையான முறையில் அரிந்து எடுக்கப்பட்ட மிக வக்கிரமான போர் ஒன்றை மதுரை மண் அனுபவித்திருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சி அம்மையோடு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நினைவுக்கு வந்துவிடும். பத்துநாள் மதுரையே கொண்டாடிக் களிக்கும் சித்திரை திருவிழாவில், ஏழாம் நாள் அனந்தராயர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, சேதுபதி மண்டபத்தில் அழகர் இரவு தங்குவார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் எட்டாம் நாள் காலை பூப்பல்லக்கு ஜோடனையோடு கிளம்பி, ஒன்பதாம் நாள் வழிநெடுக மக்களின் அன்பைப் பெற்றபடி, பத்தாம் நாள் பயணக்களைப்புத்தீர ஓய்வெடுத்து, சித்திரைத் திருவிழாவை முடித்து வைப்பார். இந்தத் திருவிழாவின் அடியொற்றி, சேதுபதி மன்னருக்கு எதற்குத் தல்லாகுளத்தில் கல்மண்டபம் என்ற கேள்விக்கு விடைதேடிப் புறப்படபோது, மதுரை மூதூர் மாநகரத்தின் கதை ஒன்று கிடைத்தது. பெண்களும், குழந...