Posts

Showing posts with the label பிராப்தம்

நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை

Image
நடிகையர் திலகம் சாவித்திரி மடிந்த கதை  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி . அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, அதன்பின், சாவித்திரியைப் பார்ப்பதையே தவிர்த்தார். சாவித்திரியிடம், எப்போதும் தலை தூக்கும் உயர்வு மனப்பான்மை, இங்கேயும் தலை தூக்கியது. தன்னை அவமானப்படுத்த முயலும்  ஜெமினி முன், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உணர்வு,  அவருக்குள் மேலோங்கியது.  இச்சூழலில் படம் தயாரிக்க வேண்டுமாயின்,  சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைப்பது தான் சிறந்தது என,  அவர் மனதில் தோன்றியது. ஊமை உள்ளங்கள் என்ற படம், பிராப்தம் என,பெயர் மாற்றப்பட்டது. ஜெமினியோடு, சாவித்திரிக்கு நடந்த சண்டை, சிவாஜிக்குத் தெரியாது. தன் தங்கை இயக்கப் போகும் படத்தில் நடிப்பது அண்ணனின் கடமை என்ற ...