Posts

Showing posts with the label PAAVA

PAAVA MANNIPPU CENSOR PROBLEMS

Image
  PAAVA MANNIPPU CENSOR PROBLEMS இப்போதெல்லாம் சென்சார் போர்டு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஆனால் கண்ணதாசன் காலத்தில் மிக மிக கண்டிப்போடு இருந்தது சென்சார் போர்டு. "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொடுத்திருந்தார் கண்ணதாசன். படத்தை சென்சாருக்கு அனுப்பினார்கள் படக்குழுவினர். அப்போதுதான் பிரச்சினை எழுந்தது. கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டு, கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் ! "இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." படக் குழுவினர் கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள். சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனை...