MERYL STREEP , FAMOUS ACTRESS BORN 22 JUNE 1949 SLASHES DONALD TRUMP
MERYL STREEP , FAMOUS ACTRESS BORN 22 JUNE 1949 SLASHES DONALD TRUMP சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) மெரில் லூயி ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' (The Deer Hunter), 'கிரேமர் எதிர் கிரேமர்'(Kramer vs Kramer) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்க ளிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக ' தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்...