NICHOLAS II OF RUSSIA MURDERED BY BOLSVIC PARTY
NICHOLAS II OF RUSSIA MURDERED BY BOLSVIC PARTY உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு கொலை , 1918 ஜூலை 17 Nicholas II of Russia, உருசிய மொழி: Николай II, Николай Александрович Романов, நிக்கொலாய் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ், மே 18 [யூ.நா. மே 6] 1868 – ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) உருசியப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும்[1] பின்லாந்தின் இளவரசரும் ஆவார். இரண்டாம் நிக்கலாசு 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார். முதலாம் உலகப் போரில் உருசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தினார்.[2] ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர். 1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்ப...