SRILANKA WAS CAPTURED BY PORTUGHESE , THEN CAPTURED BY DUTCH 1658 MAY 13
SRILANKA WAS CAPTURED BY PORTUGHESE , THEN CAPTURED BY DUTCH 1658 MAY 13 .கண்டி இராச்சியம் - இலங்கை இந்துப் பெருங்கடலில் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவகம் ஆகும். போர்த்துக்கேயர் 1505 இல் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு ஒரு தமிழ் அரசும் இரண்டு சிங்கள அரசுகளும் இருந்தன. வடக்கே யாழ்ப்பாண அரசு மேற்கே கோட்டை அரசு மத்தியில் கண்டி அரசு ஆகியனவே அந்த அரசுகளாகும். இதற்கும் மேலாக வன்னி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய ஆட்புலம் வன்னித் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. வன்னியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த ஆட்புலம் யாழ்ப்பாண அரசின் எல்லையிலிருந்து கிழக்குக் கரையோரமாக தெற்கே யால - பாணம வரை பரந்திருந்தது. திருகோணமலையும் மட்டக்களப்பும் புவியியல் மற்றும் அரசியல் அடிப்படையில் ~வன்னி| அல்லது �வன்னிமை� என்றே அழைக்கப்பட்டன. யாழ்ப்பாண அரசு மறைந்த பின்னர் (கிபி 1619) திருகோணமலை � மட்டக்களப்பு மாவட்டங்கள் கண்டி அரசின் செல்வாக்கு உட்பட்டன. இன்றைய கிழக்கு மாகாணம் 9965 சகிமீ பரப்பளவு கொண்டது. இது முழு இலங்கையின் பரப்பளவில் 16 விழுக்க...