Wednesday, 13 May 2020

SRILANKA WAS CAPTURED BY PORTUGHESE , THEN CAPTURED BY DUTCH 1658 MAY 13




SRILANKA WAS CAPTURED BY PORTUGHESE ,
THEN CAPTURED  BY DUTCH 1658 MAY 13

.கண்டி இராச்சியம் -

இலங்கை இந்துப் பெருங்கடலில் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவகம் ஆகும். போர்த்துக்கேயர் 1505 இல் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு ஒரு தமிழ் அரசும் இரண்டு சிங்கள அரசுகளும் இருந்தன. வடக்கே யாழ்ப்பாண அரசு மேற்கே கோட்டை அரசு மத்தியில் கண்டி அரசு ஆகியனவே அந்த அரசுகளாகும்.


இதற்கும் மேலாக வன்னி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய ஆட்புலம் வன்னித் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. வன்னியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த ஆட்புலம் யாழ்ப்பாண அரசின் எல்லையிலிருந்து கிழக்குக் கரையோரமாக தெற்கே யால - பாணம வரை பரந்திருந்தது. திருகோணமலையும் மட்டக்களப்பும் புவியியல் மற்றும் அரசியல் அடிப்படையில் ~வன்னி| அல்லது �வன்னிமை� என்றே அழைக்கப்பட்டன.

யாழ்ப்பாண அரசு மறைந்த பின்னர் (கிபி 1619) திருகோணமலை � மட்டக்களப்பு மாவட்டங்கள் கண்டி அரசின் செல்வாக்கு உட்பட்டன. இன்றைய கிழக்கு மாகாணம் 9965 சகிமீ பரப்பளவு கொண்டது. இது முழு இலங்கையின் பரப்பளவில் 16 விழுக்காடாகும். ஆகக் கூடிய நீளம் தெற்கே குமணையில் இருந்து வட - கிழக்கே புல்மோட்டை வரை 285 கிமீ தொலை ஆகும். ஆகக் கூடிய அகலம் மேற்கே உத்தியவில் இருந்து கிழக்கே கிரான்குளம் வரை 89 கிமீ தொலை ஆகும். கிழக்கு மாகாணத்தின் கடலோரம் 420 கிமீ (அம்பாரை 110 கிமீ மட்டக்களப்பு 100 கிமீ மற்றும் திருகோணமலை 210 கிமீ நீளமாகும்.

1591 இல் போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்து மன்னார் வழியாக யாழ்ப்பாண அரசின் மீது படையெடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன் புவிராசசிங்கனைக் கொன்று அதனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமக்கு ஆதரவான எதிர்மன்னசிங்கன் என்பவனை யாழ்ப்பாண அரசின்; மன்னனாக முடிசு10ட்டினர்.

1616 இல் இவனின் மறைவைத் தொடர்ந்து இரண்டாம் சங்கிலி ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவன் போர்த்துக்கேயரின் மேலாண்மையை ஏற்கமறுத்து அவர்களுக்கு எதிராகப் போராடினான்.

1619 இல் போர்த்துக்கேயத் தளபது பிலிப் எடி ஒலிவேரா (Philip de Oliviers) 2000 சிங்களக் கூலிப் படையோடு யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். போர்த்துக்கேயப் படையையும் பீரங்கிகளையம் பூநகரியில் இருந்து கடல்வழியாகக் கொழும்புத்துறைக்கு நகர்த்த காக்கைவன்னியன் என்ற அரச அதிகாரி தோணிகளைக் கொடுத்து உதவினான்.

போர்த்துக்கேயப் படைக்கும் சங்கிலியனுக்கும் நல்லூரில் நடந்த போரில் சங்கிலியன் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலியன் தனது குடும்பத்தோடு தோணியில் தமிழ்நாட்டுக்குத் தப்பியோட எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

சிறைப்பிடிக்கப்பட்ட சங்கிலி யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஒலிவேரா சங்கிலியையும் அவனது குடும்பத்தையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தான். போர்த்துக்கேய ஆளுநர் அவர்களைத் தங்கள் ஆட்சி அதிகாரத்துக்குள் இருந்த கோவாவுக்கு அனுப்பி வைத்தான்.

கோவாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டாவது சங்கிலி மீது தேசத்துரோகக் குற்றம் சாடடப்பட்டு விசாரிக்கப்பட்டான். விசாரணை முடிவில் அவனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது.

போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் சங்கிலி தனது கடைசிக் காலத்தில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி டொன் பிலிப் சங்கிலி என்று பெயர் சூட்டிக் கொண்டான் எனக் குறிப்பிடுகின்றன. அரசியார் டோனா மாரியா (Donna Maria) எனப் பெயர் மாற்றிக் கொண்டார்.

தூக்கு மேடையில் சங்கியின் கைகளைக் கட்ட முற்பட்டபோது அது தேவையில்லை என்று மறுத்துவிட்டான். சங்கிலியின் தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். அவனது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.

சங்கிலியின் மறைவோடு யாழ்ப்பாண அரசு முற்றுப் பெற்றது. இதன் பின்னர் யாழ்ப்பாண அரசு முழுமையாகவும் நேரடியாகவும் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. போர்த்துக்கேயரிடம் இருந்து 1658 இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றினர். ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயர் 1796 இல் அதனைக் கைப்பற்றினர்.

1593 இல் முதலாம் இராசசிங்கனின் மறைவுக்குப் பின்னர் சீதாவாக்கை அரசு வீழ்ச்சியுற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவின் தென்மேற்குக் கரையோர ஆட்புலம் முழுவதும் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கோட்டை அரசின்; மன்னனாக இருந்த தர்மபால போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாகவே (figurehead) இருந்தான்.

1597 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி தர்மபாலாவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்களில் சட்ட அடிப்படையில் கோட்டை அரசு போர்த்;துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு யாழ்ப்பாண அரசு�� கோட்டை அரசு இரண்டும் தமது சுதந்திரத்தினைப் போர்த்துக்கேயரிடம் இழந்தன.

கண்டி அரசு தொடர்ந்தும் சுதந்திர அரசாக விளங்கியது. போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர நிலப்பரப்பு முழுவதையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தபோதிலும் தமிழர் நிலப்பரப்பையும் சிங்களவர் நிலப்பரப்பையும் ஒன்றாக இணைக்கவில்லை. இவ்விரண்டு நிலப்பரப்புக்களும் தனித்தனியாகவே அன்னிய கொலனித்துவ நாடுகளால் ஆட்சிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1656 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்புத் துறைமுகம் ஒல்லாந்தரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இத்தீவில் ஒல்லாந்தரின் ஆட்சி தொடங்கியது. எனினும் முழுமையாகப் போர்த்துக்கேயரை இத்தீவிலிருந்து வெளியேற்ற ஒல்லாந்தருக்கு மேலும் 2 ஆண்டுகள் எடுத்தன. 1658 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றியதைத் தொடர்ந்து இத்தீவின்மீது போர்த்துக்கேயருக்கு இருந்த கடைசிப் பிடியும் தளர்ந்தது.

ஒல்லாந்தர் தமது ஆளுகைக்கு உட்பட்ட ஆட்புலங்களை நிருவாக அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தினர்.

1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்

2. கொழும்பு நீதி மாவட்டம்

3. காலி நீதி மாவட்டம்

யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர்களின் ஆட்புலமான இன்றைய வடக்கு�� கிழக்கு நிலப்பரப்பதை உள்ளடக்கியிருந்தது. எனவே ஒல்லாந்தர் கூட தமிழர் ஆட்புலத்தை இத்தீவின் ஏனைய ஆட்புலத்தோடு இணைக்காமல் தனி நிருவாக ஆட்புலமாக ஆட்சி செய்தனர்.

இதில் கோட்டை அரசை ஆண்ட தர்மபாலா என்ற மன்னன் தனது ஆட்சியை 1580 இல் போர்த்துக்கேயருக்குக் கையளித்தான். பின்னர் அவன் 1597 இல் இறந்தபோது அவனது இறுதிச் சாவோலையின்படி கோட்டை அரசின்; இறைமை முற்றாக போர்த்துக்கேயர் கைக்கு மாறியது.

கண்டி அரசைப் போர்த்துக்கேயர்கள் பலமுறை கைப்பற்ற முயன்றும் அது கைகூடாது போயிற்று. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் கண்டி அரசு தனி அரசாகவே இருந்து வந்தது.

இவ்வாறு போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் என இரண்டு கொலனித்துவ அரசுகளின் பிடிக்குத் தப்பிய கண்டி அரசை ஆங்கிலேயர் 1815 இல் கைப்பற்றினார்கள். கண்டி அரசின்; கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராசசிங்கன் மற்றும் அவனது இரண்டு மனைவியர் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டு கொழும்பு வழியாகத் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் திப்பு சுல்தான் கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களது வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரம இராசசிங்கனின் வீழ்ச்சிக்கு உட்பகையே முக்கிய காரணமாகும். கண்டி இராச்சியத்தை தமிழ் அரசன் ஆளுவதைப் பொறுக்க முடியாத முக்கிய சிங்கள பிரதானிகள் சூழ்ச்சி செய்து அவனை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்தார்கள். அவனோடு இலங்கைத் தீவை ஆண்ட கடைசி அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. ஸ்ரீவிக்கிரமசிங்கன் ஆட்சி கண்டி அரசின்; வரலாற்றில் ஒரு கறைபடிந்த சோகக் கதையாகும்.

துட்டகைமுனு எல்லாளன் இடையிலான போரோடு தொடங்கிய சிங்கள - தமிழர் இடையிலான பகை ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனுக்கும் அவனது சிங்கள அமைச்சர்களுக்கும் இடையிலான பகையாக நீடித்தது. உண்மையில் துட்டகைமுனு சிங்களவன் அல்ல. அவன் தாய் வழியிலும் தந்தை வழியிலும் விஜயனுக்குப் பின்னர் இலங்கையை ஆண்ட நாகவம்சத்தவன். மகாவம்சம் கூட துட்டகைமுனுவை சிங்களவன் எனச் சித்திரிக்கவில்லை. சிங்களவர் என்ற ஒரு கூட்டுணர்வு கிபி 8 ஆம் நூற்றாண்டளவிலேயே தோற்றம் பெற்றது.

சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றி பொலனறுவையைத் தலைநகராகக் கொண்டு 77 ஆண்டுகள் (கிபி 993 - 1070) மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரோடு ஆண்டார்கள்.

சோழர்களது ஆட்சியை முதலாவது விஜயபாகு (கிபி 1056 - 1111) முடிவுக்குக் கொண்டு வந்தான்.

கலிங்க மாகன் எனும் அரசன் கலிங்கநாட்டில் இருந்து தமிழர்�� தெலுங்கர்�� கன்னடர்�� கேரளர் அடங்கிய பெரும்படை ஒன்றைத் திரட்டி வந்து 1215 இல் பொலநறுவையைத் தாக்கி அதனைக் கைப்பற்றினான். ஜனநாதமங்கலத்தைத் (பொலநறுவை) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். பின்னர் அவனது ஆட்சி முழு இலங்கைக்கும் விரிவுபடுத்தப் பட்டது.

கிழக்கே பழுகாமம் இவனது துணை இராசதானியாக விளங்கியது. கலிங்க மாகனது பேரரசின் கீழ் திஸ்ஸ அலிபோடி என்பவர் கரவாகுபற்றுக்குப் பிரதானியாய் இருந்தார். இந்த திஸ்ஸ அலி போடியாரின் மகனது திருமணத்திற்கு மாகன் எனப்படும் விஜயகலிங்க சக்கரவர்த்தி பழுகாமத்திலிருந்து சென்றிருந்தான்.

ஈற்றில் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி கலிங்கமான் அல்லது கூழங்கை சிங்கை ஆரியன் அல்லது கலிங்க விஜயபாகு என்ற பெயரோடு 25 ஆண்டுகள் (கிபி 1215-1240) அரசு செய்தான். கலிங்க மாகன் 1255 இல் இறந்து போனான்.

மாகனுக்குப் பின்னர் மூன்று மன்னர்கள் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டார்கள். பொலநறுவையை ஆண்ட கடைசி சிங்கள மன்னன் மூன்றாவது பராக்கிரமபாகு (கிபி 1278 - 1293) ஆவான். பாண்டிய மன்னர்களது மேலாண்மைக்குக் கட்டுப்பட்டே அவன் அரசாண்டான். அவனது ஆட்சியில் ஏற்பட்ட உறுதியின்மை காரணமாக முன்னரே நிலைகுலைந்து போயிருந்த பொலநறுவை அரசு வீழ்ச்சியுற்றது. சிங்கள அரசர்கள் பொலநறுவையைக் கைவிட்டு தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். இது காரணமாக பல சிங்கள சிற்றரசுகள் தென்னிலங்கையில் தோன்றின. யாப்பகூவ குருநாகல் கம்பளை கோட்டை அந்த அரசுகளின் தலைநகராக மாறின.

சீத்தவாக்கையை ஆண்ட முதலாவது இராசசிங்கன் சிங்கள மக்களை ஒன்றுபடுத்துவதில் வெற்றி கண்டான். சில ஆண்டுகளில் சீத்தவாக்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனது ஆட்சியை நிலைநாட்டினான். கண்டி அரசைக் கைப்பற்றி சீத்தவாக்க அரசோடு இணைத்தான். அரசியல் அடிப்படையில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளத் தனது உடன்பிறந்தாளை கோட்டை அரசன் தர்மபாலாவுக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

முதலாவது இராசசிங்கன் கண்டி அரசின் மன்னனாக போர்த்துக்கேயர்களால் முடிசூட்டப்பட்ட கறலியட்ட பண்டாரா என்ற பொம்மை அரசனைக் கண்டியை விட்டுத் துரத்தினான். துரத்தியதோடு நில்லாமல் செங்கடக்கல அரண்மனையையும் தீயிட்டுக் கொளுத்தினான்.

கறலியட்ட பண்டார தனது மனைவி மூன்று மக்கள் மருமகனோடு ஓடிப்போய் போர்த்துக்கேயரிடம் புகலிடம் கேட்டு சரண் அடைந்தான்.

முதலாவது இராசசிங்கன் 1587 ஆம் ஆண்டு விஜயசுந்தர பண்டார என்ற கண்டிப் பிரதானியை அரசனாக அரசகட்டிலில் அமர்த்தினான். விஜயசுந்தர பண்டார பலம் அடைவதையும் மக்களிடையே செல்வாக்கோடு விளங்குவதையும் கண்டு அவனைக் குரூரமாக இராசசிங்கன் கொன்றான். விஜயசுந்தர பண்டார படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்த அவனது மகன் கொன்னப்பு பண்டார போர்த்துக்கேயரிடம் ஓடிச் சென்று புகலிடம் கேட்டான்.

அரசியல் புகலிடம் கேட்டுச் சரணடைந்த கொன்னப்பு பண்டாரவை போர்த்துக்கேயர் கிறித்து மதத்திற்கு மதம் மாற்றம் செய்தார்கள். டொன் யுவான் என்ற பட்டப்பெயர் அவனுக்கு வழங்கப்பட்டது.

போர்த்துக்கேயர் அவனை இராசசிங்கனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு அனுப்பி வைத்தார்கள். அதில் அவன் வெற்றி கண்டான்.

இதே கால கட்டத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலி�� செகராசசேகரன் மகனான புவிராச பண்டாரம் பரராசசேகரனை (கிபி 1582 - 1591) ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பெரியபிள்ளை செகராசசேகரன் மகனான எதிர்மன்னசிங்கன் பரராசசேகரன் (கிபி 1591 - 1615) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து போர்த்துக்கேயரது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்தான்.







யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையின் வான்பார்வைப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

இலங்கையர்களிடம் மாத்திரமன்றி சர்வதேச மக்கள் மத்தியிலும் இந்த புகைப்படம் பிரபலமாகிவருகின்றமையை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டு ஒல்லாந்தரால் மீள் வடிவம் கொடுக்கப்பட்ட இந்த கோட்டை இலங்கையிலுள்ள வான்பார்வைக் காட்சிகளில் மிகவும் அழகானதும் அற்புதமானதுமென ஐரோப்பியர் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேவேளை இந்த புகைப்படம் சிறிலங்கன் விமான நிறுவனத்தின் முகநூல் பக்கத்திலும் இன்றைய தினம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் நாவலாசிரியரான செங்கை ஆழியானால் எழுதப்பட்ட களம் பல கண்ட கோட்டை எனும் வரலாற்றுப் புத்தகத்தில் யாழ்ப்பாணக் கோட்டையின் சுவாரசியமான பல பக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் படைகளால் பல்வேறு காலத்தில் கைப்பற்றப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டையானது யாழ்ப்பாணத்தின் சைவ ஆலயங்களின் சிதைவுகளுக்கு சான்றாக விளங்குகின்றது.

அதாவது இலங்கையில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக வந்த ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக்கேயர், யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட இறுதித் தமிழ் மன்னனான சங்கிலி செகராசசேகரனுடன் போர்புரிந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தொன்மையான சைவ ஆலயங்களை உடைத்து கத்தோலிக்க தேவாலயங்களை கட்டினர். இந்த நிலையிலேயே வேறு அன்னிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து தமது ஆட்சியதிகாரத்தைப் பாதுகாஅதற்காக மிகப்பெரிய கோட்டையினை யாழ்ப்பாணத்தில் நிறுவினர். இந்தக் கோட்டை மிகப் பலம் வாய்ந்ததாக அமைவதற்கு சைவ ஆலயங்களில் இடிக்கப்பட்ட முருகைக்கல் பாறைகள் பயன்படுத்தப்பட்டன.

போர்த்துக்கேயரிடம் கோட்டை இருந்தபோது மற்றொரு ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களான ஒல்லாந்தர் முற்றுகைப்போர்மூலம் கைப்பற்றி கோட்டையின் வடிவத்தினை இன்றிருக்கும் நிலைக்கேற்ப மாற்றினர். அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் ஒல்லாந்தருடன் போர்புரிந்து அதனைக் கைப்பற்றினர்.

எவ்வாறாயினும் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆகிரமிப்புப் படைகளின் தகுந்த கூடாரமாக கோட்டை விளங்கியது. குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியப் படைகள் இந்தக் கோட்டையினைக் கைப்பற்றி தமிழ் மக்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர்.

கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணக் கோட்டை பாரிய முற்றுகைச் சமர்கள் இரண்டினைக் கண்டிருந்தது. இலங்கை மற்றும் ந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த இந்தக் கோட்டையினை மீட்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட முற்றுகை யுத்தம் அபரிமிதமானது.

முதலாவது முற்றுகை யுத்தம் 1986ஆம் ஆண்டு கேணல் கிட்டுவின் தலைமையில் நடந்தது. இது கோட்டையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரை வெளியே வரவிடாமல் முடக்குவதற்கான முற்றுகை யுத்தமாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தளபதி, கேணல் பானு தலைமையில் மற்றொரு முற்றுகைச் சமர் நடந்து சிறிலங்காப் படையினரிடமிருந்து முற்றாகவே மீட்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாணக் கோட்டையில் புலிக்கொடி ஏற்றப்பட்டமை உலகத் தமிழரிடையே நெகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் பல களங்களைக் கண்டு பாரிய சேதங்களைக் கண்டிருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி தவியுடன் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.






இலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக் நெவில், டர்னர், கல்வின், ரிவர்ஸ், லொவி, ஹர்ஷோத், பால்தேயு போன்றவர்கள் வரிசையில் கெப்டன் ஜொவாவோ ரிபைரோவுக்கும் (Captain Joao Ribeiro 1622-1693) முக்கிய இடம் உண்டு. மேற்குறிப்பிட்டவர்களில் ரிபைரோ மிகவும் முதன்மையான, பழமையானவரும் கூட. இலங்கையின் வரலாற்றுப் பாட நூல்களிலும் “வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்” என்கிற பட்டியலில் இடம்பெற்றிருப்பவர். இலங்கையில் இரண்டாம் இராஜசிங்கனின் காலகட்ட போர்க்காலத்தில் போர்த்துக்கேய கப்டனாக இருந்தவர். இராணுவச் சேவையில் நாற்பது ஆண்டுகாலம் பணிபுரிந்த ரிபைரோ இலங்கையில் 1640-1658 வரையான 18 ஆண்டுகாலம் அதாவது 1658இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை இருந்தார்.

தனது இறுதிக் காலத்தில் அவர் தனது நாற்பது ஆண்டுகால அனுபவத்தின் பின்னர் 1685 இல் “இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல்” (Fatalidade Histórica da Ilha de Ceilão) என்கிற தலைப்பில் போர்த்துகீச மொழியில் எழுதினார். 

இந்த நூலை அவர் அன்றைய போர்த்துகல் அரசர் இரண்டாம் டொம் பெற்றோவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  

இலங்கையின் வரலாற்றை கற்பவர்களின் மூல நூல்களின் வரிசையில் உள்ளது இந்த நூல். மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த நூலில் வரைபடங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். கண்டி நகரம், கொழும்பு துறைமுகம், இலங்கையின் முழுமையான வரைபடங்களை வரைந்து அப்புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த ஆண்டு 1505. ஒன்றரை நூற்றாண்டு கால கரையோரப் பகுதிகளை ஆட்சிசெய்து வந்த அவர்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் தமது ஆட்சியைப் பறிகொடுத்தனர். ரிபைரோ தனது 18வது வயதில் இந்தியாவுக்குச் சென்ற போர்த்துகேய படையில் சாதாரண சிப்பாயாக 1640 மார்ச் மாதம் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் செப்ரம்பர் 19ஆம் திகதி தென்னிந்தியாவில் கோவாவில் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் 400 சிப்பாய்களுடன் நீர்கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் நீர்கொழும்பைக் கைப்பற்றுவதற்கான சமர் நடந்துகொண்டிருந்த காலம். அதே ஆண்டு நீர்கொழும்பை ஒல்லாந்தரிடம் இழந்தது போர்த்துக்கேய தரப்பு. அதிலிருந்து அடுத்த 18 ஆண்டுகள் ரிபைரோவின் வாழ்க்கை இலங்கையில் தான் அமைந்தது. தொடர்ச்சியாக பல்வேறு சமர்களில் ஈடுபட்டார் ரிபைரோ. ஒருபுறம் இரண்டாம் ராஜசிங்கனின் படைகளுடனான போர்; மறுபுறம் ஒல்லாந்தருடனான போர். இப்படி பல போர்களில் ரிபைரோ கலந்துகொண்டு பல தடவைகள் படுகாயங்களுக்கு உள்ளானார். சாதாரண சார்ஜன்ட் நிலையிலிருந்து அவர் கெப்டன் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார். அதிலிருந்து அவர் கெப்டன் ரிபைரோ என்று தான் அழைக்கப்பட்டார்.


போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் இலங்கை பறிபோன நிலைமாறுகாலத்தின் காலக்கண்ணாடி என்றும் நேரடி சாட்சியம் என்றும் நாம் ரிபைரோவைக் கொள்ளலாம். எனவே அவர் எழுதிய நூல் முக்கிய ஆதார நூல். ரிபைரோ நாட்டை விட்டு வெளியேறிய சில வருடங்களில் தான் ரொபர்ட் நொக்ஸ் கைது செய்யப்பட்டார். ரொபர்ட் நொக்ஸ் எழுதிய நூலுக்கும் ரிபைரோவின் நூலுக்கும் இடையில் உள்ள பெரும்பாலான ஒற்றுமைகளால் இந்த நூல்களை முக்கிய வரலாற்று ஆதாரங்களாகப் பயன்படுத்துவது வழக்கம். போர்த்துகேய, ஒல்லாந்து கால வரலாற்றை ஆராய்பவர்கள் தவறவிடக்கூடாத மூன்று அக்காலத்து நூலாசிரியர்கள் கேப்டர் ரிபைரோ, பிலிப்பு பால்டேயு (Phillipus Baldaeus), ரொபர்ட் நொக்ஸ்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் ரிபைரோவைத் தவிர மற்ற இருவரையும் கொண்டாடுவதைக் காண முடியும். பால்டேயு, ரொபர்ட் நொக்ஸ் ஆகிய இருவரின் நூல்களும் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்டுவிட்டபோதும் ரிபைரோவின் நூல் இதுவரை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டதில்லை. ரிபைரோவின் பணிக்காலம் அதிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்ததால் வடக்கில் செல்வாக்கு செலுத்திய தமிழ் இராஜ்ஜியங்கள் குறித்த பதிவுகளை அவர் செய்திருக்கிறார். மற்ற இருவரும் அதிகமாக கண்டி இராஜ்ஜியம் குறித்தும் சிங்களவர்கள் குறித்துமே அதிகமாக பதிவு செய்திருப்பது அப்படி சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்படாதற்கு காரணமாக இருக்கலாம்.
ரிபைரோவின் நூல் குறித்து ஆராயத் தொடங்கியபோது கண்டெடுத்த முக்கிய சில விடயங்களை வரலாற்றை ஆய்பவர்களுக்கு வெளிபடுத்த தோணிற்று.

ஆனால் அது ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாக அச்சேறாமலேயே இருந்தது. மூல மொழியான போர்த்துக்கேய மொழியில் வெளிவருவதற்கு முன்னரே 1701இல் இந்த நூல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு (Histoire de l'isle de Ceylan, ecrite par le capitaine Jean Ribeyro) பாரிசில் வெளியானது. 1836இல் தான் முதன் முறையாக போர்த்துக்கேய மொழியில் அது நூலாக வெளிவந்தது. பிரெஞ்சு மொழியிலிருந்து இலங்கை அரச சேவையில் பணிபுரிந்த ஜோர்ஜ் லீ எம்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிரதி MDCCCXLVII ஆம் ஆண்டு (1847) கொழும்பில் வெளியானது. 1890இல் ரோயல்  ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியிடப்பட்ட சஞ்சிகையில் Captain Joao Ribeiro என்கிற கட்டுரையில் அவர் அதில் உள்ள கயமைகளை வெளியிட்டார் டொனால்ட் பெர்குசன். பிரெஞ்சுப் பிரதியானது மூல நூலை திரிபுபடுத்தி நாசப்படுத்தப்பட்ட நூல் என்பதை போட்டு உடைத்தவர் டொனால்ட் பெர்குசன்.

பீரிஸ் (P.E. Pieris) மொழிபெயர்த்த மூல நூலில் இருந்து மொழிபெயர்த்த ஆங்கிலப் பதிப்பு “Ribeiro’s History of Ceilao” 1909 தான் வெளிவந்தது. அதன் பின்னர் 1948 இலும் அது “The Historic Tragedy of the Island of Ceilāo” என்கிற இன்னொரு தலைப்பில் கொழும்பில் மீளவும் பதிப்பிடப்பட்டது. அந்த நூலிலும் மூல நூலின் சிக்கல்கள் போதுமான அளவு அவிழ்க்கப்படாததால் C.R.Boxer இது பற்றி ஆராய்வதற்காக ரிபைரோவின் ஊருக்கு பயணித்தார். இந்த விபரங்களையும் சுவீகரித்துக்கொண்டு  1955 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான  ரோயல்  ஆசிய கழக சஞ்சிகையில் சீ.ஆர்.பொக்சர் (C.R.Boxer) எழுதிய “கெப்டன் ஜாவோ ரிபைரோவும் இலங்கையின் வரலாறும்” (Captain João Ribeiro and his History of Ceylon: 1622-1693) என்கிற விரிவான கட்டுரையும் கட்டுரையும் கவனிக்கத்தக்கது.



இந்த நிலையில் வரலாற்றாய்வாளர்கள் பலர் இந்த குழப்பங்களை சில சமயங்களில் அறியாத நிலையில் பிரெஞ்சு மொழி பதிப்பையும், அதன் மொழிபெயர்ப்பான “History of Ceylon presented by captain John Ribeyro to the King of Portugal, in 1685, translated from the Portuguese, by the Abbe Le Grand” நூலைக் கையாண்டு வருவதைக் காண முடிகிறது. தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு என்பது இறுதியாக பீரிஸ் (P.E. Pieris) வெளியிட்ட பிரதி தான். அந்தப் பிரதி கூட பல பதிப்புக்களைக் கடந்துவிட்டது. பீரிஸ் இலங்கையின் முக்கியமாக கவனிக்கக்கூடிய வரலாற்றாசியர். இந்த மொழிபெயர்க்கு முன்னரே அவர் 1920ஆம் ஆண்டே போர்த்துகேயர் காலத்து இலங்கையைப் பற்றிய ஆய்வு நூலை (Ceylon and the Portuguese 1505-1658) வெளியிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தில் சில...
இந்த நூலில் ரிபைரோ எழுதிய பல குறிப்புகள் ஆய்வுகளுக்கு மிகுந்த பயனுள்ளது.

கொழும்பு கோட்டை உருவான கதை, கொழும்பின் உருவாக்கம் பற்றி அறிவதென்றால் ரிபைரோவின் குறிப்புகளை கட்டாயம் அறிதல் அவசியம். கொழும்பு கோட்டையை கட்டுவிக்க அக்காலப்பகுதியில் வேடுவர்களின் உழைப்பும் பெறப்பட்டதாக குறிப்பிடுவதுடன் யாழ்ப்பாணப் பட்டினத்தின் கீழ் செறிவான வனக்காடுகளாக இருந்த வன்னி, திருகோணமலைப் பகுதியையும் அதன் கடற்பகுதிகளையும் வேடுவர்களின் சாம்ராஜ்ஜியமென்கிறார். விலங்குகளின் தோல்களை அணிந்திருந்த அவர்கள் போர்த்துக்கேயர்களின் நிறத்துக்கு சமானமாக காணப்பட்டார்களென்றும், வேட்டையாடப்படும் விலங்குகளை தேனில் துவைத்து உண்பவர்களென்றும், ஒரே இடத்தில் ஆறு மாதத்துக்கு மேல் தங்கியிருப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.  

போர்த்துக்கேயரின் பிடியில் இருந்த யாழ்ப்பாணத்தை மீட்க 1629 ஆம் ஆண்டு அத்தபத்து முதலியார் தலைமையிலான 5000 பேரைக் கொண்ட சிறப்புப்படையணி சமரிட்டு விடுவித்தது. பின்னர் போர்த்துக்கேயர் பத்தாயிரம் படையினருடன் சென்று யாழ்ப்பாணத்தை  மீண்டும் கைப்பற்றி அத்தபத்துவின் தலையை வெட்டி யாழ்ப்பாணத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று காட்சிப்படுத்திய கதையை அறிந்திருப்போம். 13 நாட்களில் ஐயாயிரம் பேரை பலிகொடுத்த அந்தப் சமர் குறித்த ஆரம்பத் தகவல்கள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் போர்த்துகேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த அந்த சமர் அன்றைய “முள்ளிவாய்க்கால் சமர்” என்றே குறிப்பிடவேண்டும். அங்கு நிகழ்ந்த கொடூரகரமான அழிவுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

முதன் முதலாகப் போர்த்துக்கேயர்கள் இலங்கையில் கால் பதித்த பொழுது தென்புலத்தில் இயங்கிய சிங்கள இராச்சியமாகிய கோட்டை இராச்சியத்திற்கு நிகராக வடபுலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும், மாந்தோட்டைச் சிற்றரசும், வன்னிமைகளும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய சிற்றரசுகளும் இயங்கியமையும் பதிவு செய்திருக்கிறார்.

1638-1640 காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயரின் படைகளுக்குப் பொறுப்பாக இருந்த கெப்டன் ஜெனரல் அந்தோனியோ மஸ்கரஞ்ஞஸ் (Dom Antonio Mascarenhas) போர்த்துகேய படையில் உள்ள அத்தனை சிப்பாய்களும் புகைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாகக் அவரது இந்த நூலில் குறிப்பிடுகிறார்.   சின்னம்மை போன்ற ஒரு குறிப்பிட்ட வகை நோய்க்கு நிவாரணமாக புகையிலை இருந்ததாகவும் யுத்தகாலங்களில் புகையிலையின் விலை அதிகரித்ததாகவும் இந்தக் காலப்பகுதியில் இருந்துதான் இலங்கையில் புகையிலைச் செய்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.


17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை தொடர்பாக வெளிவந்த பல நூல்களில் இலங்கையையும், இலங்கைக்குள் இருந்த பிரதேசங்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொற்கள் ஒன்றுக்கு ஒன்று வேறானவை. இந்த நூலில் அன்றைய ceylonஐ Ceilao என்று பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பாளர் பின்னர் அதனை ceylon என்றே மாற்றிவிடுகிறார்.
ரோமானியர்கள் - Serendivis,
அரேபியர்கள்  - Serandib
பாரசீகத்தினர் - Serendip
லத்தீனில் - Seelan
போர்த்துக்கேயர் - Ceilão
ஸ்பானியர்கள் - Ceilán
பிரெஞ்சில் - Selon
டச்சில் - Zeilan, Ceilan, Seylon
ஆங்கிலேயர்கள் - Ceylon

என்றெல்லாம் அழைத்தார்கள். இதைவிட வேறு பல சொற்களாலும் அழைத்திருக்கிறார்கள். மேற்படி நூலில் கண்டியை  candia என்றும், சிங்களவர்களை Chingalas என்றும், யாழ்ப்பாணத்தை  Jafanapatao அதுமட்டுமல்ல யாழ்ப்பாணம், திருகோணமலையில் வாழ்ந்த தமிழர்களை Bedas என்று அழைக்கிறார். அன்றைய காலப்பகுதியில் வெளியான நூற்றுகணக்கான வேறு நூல்களில் தமிழர்களை மலபார் இனத்தவர் என்றே குறிப்பிட்டிருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். இதே காலப்பகுதியில் நம் நாட்டவர்களின் வரையறுக்கப்பட்ட மிகச் சில குறிப்புகள் கூட பணயோலைகளிலும், செப்பேடுகளிலும் தான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன. அந்த வகையில் நமது வரலாற்றை அறிய வரலாற்றாசிரியர்கள் எல்லோரும் இத்தகைய நூல்களின் குறிப்புகளில் இருந்து தான் குறிப்புகளை எடுத்து ஆராய வேண்டியிருக்கிறது. அந்த வகையில் அவர்கள் தரும் ஊர் பெயர்கள் பலவற்றை கட்டுடைத்துத் தான் (crack) அறியவேண்டியிருக்கிறது.

ரிபைரோவின் நூலில் பயன்படுத்தப்பட்டப்பட்டிருக்கும் பதவிகளைக் குறிக்கும் சில அடைமொழிகளை சகல மொழிபெயர்ப்புகளிலும் காணமுடிகிறது. இந்தக் கட்டுரைக்காக சகல மொழிபெயர்ப்பு பிரதிகளையும் கண்டெடுக்கமுடிந்தபோதும் மூல நூலான போர்த்துகேய நூலை பெற முடியவில்லை. அந்தவகையில் இந்த பதவிகளைக் குறிக்கும் அடைமொழி மூல நூலில் இருந்ததா என்று அறியமுடியவில்லை. ஆகவே இந்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகளா என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த அடைமொழிகள் பிற்காலங்களில் எந்தெந்த அர்த்தங்களில் அறியப்பட்டிருக்கின்றன என்பதையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
Appoohaamy – அப்புஹாமி - ஜெனரல் தர அதிகாரி
Dessave  - திசாவ - மாவட்ட அதிகாரி
Modiliar – முதலியார் - கேர்னல் தர அதிகாரி
Arachy – ஆராச்சி - கெப்டன் தர அதிகாரி
Lascarin – லஸ்கறின்- உள்ளூர் சிப்பாய்
Topaz – டொபாஸ் - கறுப்பினத்தவர்
Adigar – அதிகார் - நீதிபதி
Bandigaralla – பண்டிகறல்ல - நீதிமன்ற பொறுப்பாளர்
Mareillero – மொறைலேரோ- தீர்ப்பின் நடுவர்
Changaar - சங்கார் - மதகுரு
Atapata – அதபத்த - மாவட்ட அதிகாரியின் பிரதான காவலதிகாரி
Bandanezes - Soldiers from Banda – பண்டாவின் சிப்பாய்கள்



ரிபைரோவை சகலரும் ஒரு வரலாற்றாசிரியராகவே குறிப்பதை ஏராளமான ஆய்வுகளில் காணலாம். இந்தக் கட்டுரைக்கான தேடுதல்களின் போது ரிபைரோவின் பெயரை பல நூல்களிலும் ஆய்வுகளிலும் வெவ்வேறு பெயர்களுடன் இருப்பதைக் காண முடிந்தது. இது ஆய்வாளர்களுக்கு பல குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு Jean Ribeyro, John Ribeyro, João Ribeiro போன்ற குழப்பங்களைக் காணலாம்.

1639இல் திருகோணமலையையும், 1640இல் நீர்கொழும்பு காலியையும், 1655இல் களுத்துறையையும், 1656இல் கொழும்பையும் 1658இல் இறுதியாக மன்னாரையும், யாழ்ப்பாணப் பட்டினத்தையும் போர்த்துக்கேயர்கள் ஒல்லாந்தர்களிடம் இழந்தார்கள். கொழும்பைக் கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தர் நடத்திய இறுதிச்சண்டையில் ரிபைரோ கிரேனேட் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் எஞ்சிய படையினருடன் பின்வாங்கி கடல் மார்க்கமாக காயப்பட்ட படையினருடன் தென்னிந்திய கோவாவில் நிலைகொண்டிருந்த முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயங்கள் ஆறியதும் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். போர்த்துகேயரிடம் இறுதியாக எஞ்சியிருந்த யாழ்ப்பாணத்தைத் தக்கவைப்பதற்காக நடந்த இறுதிச் சண்டையில் மோசமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன போர்த்துகேய படையினர். போர்த்துகேய படைகள் கைதுக்குள்ளான போது காயப்பட்டிருந்த ரிபைரோவும் கைதியானார். அங்கிருந்து அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகம் இயங்கிவந்த பட்டவியாவுக்கு (இன்றைய இந்தோனேசியாவிலுள்ள ஜகார்த்தா) கைதியாக அனுப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர் ஒல்லாந்துக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு 1660இல் சொந்த நாடான போர்த்துக்கலை அடைந்தார்.

போர்த்துக்கலின் அண்டை நாடான ஸ்பெயினுடனான தொடர் போரில் பல சமர்களில் தலைமை தாங்கினார். ரிபைரோவின் நீண்ட கால இராணுவச் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு போர்த்துகேய அரசு பிரபுப் பட்டம் வழங்கியது. தனது இறுதிக் காலத்தில் மிகுந்த சமயப் பற்றுள்ளவராகளாக விளங்கிய ரிபைரோ 1693ம் ஆண்டு காலம் ஆனார். குறிப்பட்ட காலத்து இலங்கையின் வரலாற்றை மீட்க நமக்கெல்லாம் ரிபைரோ தந்துவிட்டு போன தகவல்கள் இன்றும் அவரின் பெயரைச் சொல்லி நிற்கின்றன.





எங்கள் நாட்டை 1505ல் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் றோமன் கத்தோலிக்க மதத்தை இங்கு அறிமுகம் செயாதார்கள்

எங்கள் நாட்டை 1505ல் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் றோமன் கத்தோலிக்க மதத்தை இங்கு அறிமுகம் செயாதார்கள்
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொண்டு வருவதில் அமெரிக்காவையே மிஞ்சிவிடக் கூடிய வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இராஜதந்திரம் என்ற போர்வையின் கீழ் இன்று சதி வேலைகளை திரைமறைவில் செய்து கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த முகமூடியை கிழித்து எறியும் நோக்கத்துடனேயே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள உண்மையான தகவல்களை வாசித்து தெரிந்து கொள்வதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் இராணுவ வீரர்களும் வரலாற்றுக் காலம் தொட்டு நம் நாட்டு மக்களை அடிமைகளாக வைத்து பிரித்து வாழும் கொள்கையை மிகவும் தந்திரமான முறையில் கையாள்வதன் மூலம் எங்கள் தேசிய செல்வத்தை சூரையாடிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

இலங்கை வரலாற்றை திரும்பிப் பார்க்குமிடத்து 2014 மே மாதத்தை அடைந்த போது நாம் போர்த்துக்கேய ஆட்சியாளர்களினால் 1505ம் ஆண்டில் அடிமையாக்கப்பட்ட நிகழ்வில் 358வது வருடம் நிறைவடைந்துள்ளது.

இதுவரைகாலமும் இலங்கைக்கும் தமிழ் நாட்டில் உள்ள சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையில் அடிக்கடி யுத்தங்கள் ஏற்பட்டு இம் மூன்று மன்னர்களின் எவராவது ஒருவர் இலங்கையின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போதிலும் அவர்களினால் கலாசார சீர்குலைவோ இந்து, பௌத்த மதங்களுக்கு அழிவோ ஏற்படவில்லை.

இவ்விதம் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த இந்திய மன்னர்களை நம் நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் படைகளைத் திரட்டி விரட்டி அடித்ததும் உண்டு. இந்த யுத்தங்கள் ஒரே நாட்டில் உள்ள இரு குழுக்களுக்கு இடையில் நடந்த சண்டையைப் போன்று இருந்ததே ஒழிய அவை இரு நாடுகளுக்கு இடையிலான கோர யுத்தங்களாக அமையவில்லை.

இவ்விதம் தென்னிந்திய சேர, சோழ. பாண்டிய மன்னர்களின் ஆக்கிரமிப்பினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கீழைத்தேய கலாசாரம் வலுவடைவதற்கும் அதன் மூலம் இந்தியா வின் கட்டிடக்கலை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கையில் இந்துக் கோயில்கள் உருவாகுவதற்கும் ஒரு பின்னணி காரணியாக அமைந்து இருந்தது.

ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போன்று இந்தியாவில் இருந்து இலங்கையை கைப்பற்றி ஆட்சி நடத்திய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படை வீரர்கள் நம்நாட்டுப் பெண்களை தங்கள் காம இச்சையைப் பு+ர்த்தி செய்வதற்காக தான்தோன்றித் தனமாக நடந்து துன்புறுத்தினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.

இங்கு வந்த தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்கள் எமது பெண்களை சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்து இல்லறவாழ்க்கையி;ல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பெண்களைக் கூட இந்த இந்திய மன்னர்களின் வழித்தோன்றல்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்ததாகவும் அதனால் தான் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களின் பெயர்களில் தமிழ்ப் பெயர்களும் இணைந்திருப்பதாக வரலாற்றில் இருந்து ஆதாரங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

1505ம் ஆண்டில் இலங்கையை ஐரோப்பாவில் இருந்து வந்த போர்த்துக்கேய மாலுமிகள் கைப்பற்றிய சம்பவம் முதல் 1948ல் இலங்கை பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் வரை இடம்பெற்ற வரலாற்று சம்பவங்களை நாம் இப்போது ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

1505ம் ஆண்டில் இடம்பெற்ற போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பே இலங்கையின் வரலாற்றில் ஒரு அதிமுக்கிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. அன்றிலிருந்து போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தத்தில் எங்கள் நாட்டில் தேசப்பற்றுள்ள படையினர் முல்லேரியாவிலும், ரன்தெனிவெலயிலும் நடத்திய போராட்டங்கள் போர்த்துக்கேயரை வலுவடையச் செய்தது.

இந்தக் காலகட்டத்தில் ஒல்லாந்த ஆக்கிரமிப்பாளர்களும் போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தத்தை நடத்தியதனால் போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தம் இருமுனைப்போராட்டமாக மாறியது. ஒரு பக்கத்தில் ஒல்லாந்தரும் மறு பக்கத்தில் இலங்கையின் தேசப்பற்றுள்ள படைகளும் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடினார்கள்.

இவற்றின் எதிரொலியாக 1505ம் ஆண்டில் லோரன்ஸ் டி அல்மேதா என்ற போர்த்துக்கேய இராணுவத் தளபதி இலங்கையை ஆக்கிரமித்த தினத்தில் இருந்து 150 வருடங்களுக்குப் பின்னர் போர்த்துக்கேயர் இலங்கையின் தேசப்பற்றுள்ள இராணுவத்தினரின் உதவி யுடன் போர்த்துக்கேயரை யுத்த முனையில் தோற்கடித்து அவர்களின் கப்பல்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கி இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

இந்தக் கடைசி யுத்தம் 7 மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று இறுதியில் இவ் யுத்தத்தில் போர்த்துக்கேயர் மண் கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாவது இராஜசிம்ம என்ற மன்னன் ஒல்லாந்தர்களின் உதவியை நாடி போர்த்துக்கேயரை இங்கிருந்து விரட்டியடித்தான்.

போர்த்துக்கேயரை விரட்டியடித்த ஒல்லாந்தருக்கு இலங்கை மன்னன் வரவேற்பளித் நிகழ்வை மிளகாயைக் கொடுத்து அதற்கு பதில் இஞ்சியை பெற்றுக் கொண்டது போன்ற ஒரு பாரதூரமான விளைவு என்று அன்றைய மூதாதையர்கள் கிண்டல் செய்து போர்த்துக்கேயரைப் போன்று ஒல்லாந்தரும் இலங்கை மக்களின் செல்வத்தை சுரண்டி எங்களை அடிமையாக்கும் திட்டத்தை செயற்படுத்துவார்கள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலேயே இலங்கைக்கு றோமன் கத்தோலிக்க மதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனால் வடபகுதியிலும் நாட்டின் கரையோரப் பகுதிகளிலும் உள்ள பௌத்த மற்றும் இந்துக்கள் பலவந்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விதம் றோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியர்களுக்கு அன்றைய போர்த்துக்கேய ஆட்சியாளர்கள் பல சலுகைகளையும் சன்மானங்களையும் கொடுத்து தமது மதத்தினை பரப்புவதற்கு உதவி செய்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த அராபிய மாலுமிகளின் வழித்தோன்றல்களான சோனக இன வர்த்தகர்களிடம் இருந்த வாசணைத் திரவி யம் மற்றும் இரத்தினக்கல் தொழிலை போர்த்துக்கேயர் அபகரித்து அவர்களையும் துன்பத்தில் ஆழ்த்தினார்கள்.

இங்கு வந்த மலபார் இனத்து முஸ்லிம்களும் 1538ல் பெடலை என்னும் இடத்தில் மார்டின் அல்பான்சோ டி சூசா என்ற போர்த்துக்கேய இராணுவத் தளபதியி னாலும் 1539ல் மிகல் பெரேரா என்ற இராணு தளபதியினாலும் நீர்கொழும்பில் தோற்கடிக்கப்பட்டனர்.

1550ம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ரோய் என்ற உயர் பதவி வகித்த அல்வான்சோ நொரான்னோ என்ற இராணுவத் தளபதி 500 போர்த்துக்கேய போர்வீரர்களுடன் கொழும்புக்கு வந்து முதலில் சீதாவக்கவில் தாக்குதலை மேற்கொண்டு பின்னர் கோட்டை இராஜதானியையும் ஆக்கிரமிப்பு செய்தார்.

இந்த கொடுமைக்கார போர்த்துக்கேய தளபதி எங்கள் நாட்டு மக்களின் இரண்டு இராஜதானிகளை ஆக்கிரமிப்பு செய்ததுடன் அங்கிருந்த பௌத்த விகாரைகளை அழித்து ஒழித்ததுடன் அங்கிருந்த 2 மன்னர் மாளிகைகளில் உள்ள பொக்கி'ங்களையும் கொள்ளையிட்டான்.

இந்தக் காலகட்டத்திலேயே போர்த்துக் கேயர் கத்தோலிக்க மத போதகர்களை இங்கு அழைத்து வந்து நம் நாட்டவர்களை கத்தோலிக்கர்களாக மனமாற்றம் செய்யும் பணியையும் நிறைவேற்றினார்கள்.


ºìயு ...-






No comments:

Post a Comment