SWARGAM
சொர்க்கம்
-----------------
மெரினா பீச் போனால்
மிளகாய் பஜ்ஜி சொர்க்கம்
Rayars Cafe போனால்
ரவா தோசை சொர்க்கம்
ஏப்ரல் உச்சி வெயிலுக்கு
இளநீரே சொர்க்கம்
December மாத குளிருக்கு
Degree coffee சொர்க்கம் ;
திருமணமான புதிதில்
தினந்தோறும் சொர்க்கம்
விளக்கு வைத்த பின்னால்
வெள்ளி நிலா சொர்க்கம்
குலவும் காதல் ஜோடிக்கு
கும்மிருட்டே சொர்க்கம்
உலவும் தென்றல் காற்று
உடலை வருட சொர்க்கம்
படுத்தவுடன் தூக்கம்
பட்டென்று வந்தால் சொர்க்கம்;
மீந்து போன அடைமாவில்
மிருதுவான குனுக்கு சொர்க்கம்
ஒருவாரமான தோசைமாவில்
ஊத்தப்பமே சொர்க்கம்
மார்கழி மாத குளிரில்
மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்
கார மிளகு தாளித்த - பொங்கலுடன்
கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்
பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ்
பருப்புசிலி சொர்க்கம்
கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச
கத்திரிக்காய் கறி சொர்க்கம்
குடைமிளகாய் சாம்பாருக்கு
கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்
உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்
உருளை காரகறியே சொர்க்கம்
வெந்திய குழம்பிற்கு
வெண்டைக்காய் கறி சொர்க்கம்
சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு
சுட்ட அப்பளமே சொர்க்கம்
பத்திய மிளகு குழம்பிற்கு
பருப்பு தொகையலே சொர்க்கம்
மத்தியான தயிர் சாதத்திற்கு
மாவடு இருந்தால் சொர்க்கம்
Fast ஆய் வளரும் குழந்தைக்கு
Fast foodஏ சொர்க்கம்
Waste ஆய் போன food கூட
வீதியில் நிற்போருக்கு சொர்க்கம்
பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு
பருப்பு சாதமே சொர்க்கம்
அடைக்கு வெல்லத்தோடு
அவியல் இருந்தா சொர்க்கம்;
Bhai வீட்டு திருமணத்தில் - முதல்
பந்தி கிடைச்சா சொர்க்கம்
பாய்ப் போட்டு படுத்தவுடன்
வாய் பிளந்து தூங்கினா சொர்க்கம்
கோடை வெயிலுக்கு
குளிர்ந்த மோர் சொர்க்கம்
வாடை காற்றுக்கு
வஞ்சியின் வெப்பம் சொர்க்கம்
நேசிக்க நெஞ்சமிருந்தால்
நினைவெல்லாம் சொர்க்கம்
வாசிக்க புத்தகமிருந்தால்
வரிக்கு வரி சொர்க்கம்
தள்ளாத வயதில்
தாரத்தின் தாய்மடி சொர்க்கம்
மரணம் வரும் நேரத்தில்
மரிப்பதே சொர்க்கம்
இரவு படுக்க போகும் முன்
இரண்டு முத்தம் சொர்க்கம்
தூங்கி எழவில்லையென்றால்
தூக்கத்திலேயே சொர்க்கம்! சொர்க்கம்!!
No comments:
Post a Comment