Sunday 24 May 2020

THIRUKURAL - RESEARCH - WHY DRAVIDANS SPLIT TAMILANS





THIRUKURAL - RESEARCH -
WHY DRAVIDANS SPLIT TAMILANS


திருக்குறளை முதன் முதலில் எழுத்து வடிவத்தில் கண்டறிந்தது யார்? இதனை எங்கு, எப்போது கண்டறிந்தனர்?
திருக்குறள் என்ற ஓர் உயர்ந்த தமிழ் அற நூல் நமக்கு கிடைக்க ஒரு ஆங்கில அதிகாரியும் ,ஒரு சமையல்காரரும் தான் காரணம்.

அயோத்தி தாசர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர்,
தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல்
போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் ,
அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது .


எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு
(Francis Whyte Ellis 1777-1819)( எல் = சூரியன் , கடவுள் , எல் + ஈசன் = ஈசனாகிய கடவுள் = எல்லீசன் = எல்லிஸ் )
என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு
வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார்.
1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி
என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல்
துறையிலும் இவர் தமிழ் மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம்
ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து,
" தமிழ் மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார்.
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு
40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார்.

கி.பி. 1818-இல் சென்னையில்; உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளில்
ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச்
சுவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் எல்லீஸ் துரை 1818-ம் ஆண்டில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும்
நம் பார்வைக்கு உள்ளது. அதில்,

சாயங்கொண்ட தொண்டியசாணுறு நாடெனும்
ஆழியிலிழைத்த வழகுறு மாமணி
குணகடன் முதலாக குடகடலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீச னென்பவன் யானே
பண்டார காரியப் பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

என்பதின் பொருளை யென்னுள்ளாய்ந்து... என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக்
கையாண்டிருக்கிறார்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லிஸ் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் ( 'எல்லீசன் என்னும் இயற்பெயருடையோன்
திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
அருள் குறள் நூலுள் அறப் பாலினுக்குத்
தங்கு பல நூல்உ தாரணக் கடலைப் பெய்(து)
இங்கி லீசுதனில் இணங்க மொழி பெயர்த்தோன்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும்
அவருக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.

எல்லிஸ் மாநில நிதி அதிகாரியாகவும், அக்கசாலை (Mint)யின் தலைவராகவும் இருந்த காரணத்தால்,
திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் என்று தெரிகிறது.
இந்நாணயங்களை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,

அளக்குடி ஆறுமுக �தாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.



தமிழறிஞர் எல்லிசு-சை மறைத்த திராவிட தேசியம்!

எல்லிசும் தமிழ் மொழிக் குடும்பமும்!!

தமிழும், அதன் கிளை மொழிகளான கன்னடம், தெலுங்கு, மழையாளம், துளு போன்ற திராவிட மொழிகளும்
முன்பு தமிழிய மொழிக் குடும்பமாகவே கருதப்பட்டு வந்ததுள்ளது.

கால்டுவல் காலத்திற்குப்பின் தான் அவை திராவிட மொழிக் குடும்பங்களாயின. கால்டுவலின் நூல் வெளிவருவதற்கு
முன்பே 1852 வாக்கிலேயே, என்றி ஒய்சிங்டன் (Henry Hoisington) என்பவர் தென்னிந்திய மொழிகளான
தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளை தமிழே தோற்றுவித்தது என்ற கருத்தை முன் வைத்தார்.
1816 வாக்கிலேயே ‘எல்லிசு’ (இயற்பெயர் – பிரான்சிசு வைட் எல்லிசு – Francis Whyte Ellis 1777-1819)
தென்னிந்திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் அவைகளுக்கான மூலமொழி தமிழ் எனவும்
கருத்துக் கொண்டிருந்தார். அதன்பின் 40 வருடம் கழித்துத்தான் (1856) கால்டுவல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை
எழுதினார். “தென்னிந்திய மொழிகள் ஒன்றோடொன்று உறவுடையன, சமற்கிருத செல்வாக்கு என்பது சொற்களில்
உள்ளதே தவிர இலக்கணத்தில் இல்லை, இம்மொழிகள் எல்லாம் ஒரே வினையடிச் சொற்களை உடையவை, தமிழ் மற்ற
மொழிகளுக்கு மூலம் என்ற கருத்துக்களை எல்லிஸ் முன் வைத்தார்” என்கிறார் தாமஸ் டிரவுட்மன்.

தமிழ் யாப்பியலை உள்ளடக்கிய நான்கு ஆய்வுரைகளை எழுத எல்லிசு திட்டமிட்டிருந்தார். அவை

1.தமிழ் பேசும் நாடுகளின் வரலாறு,
2.தமிழ்மொழி, அதன் பழைய, புதிய கிளை மொழிகள்,
3.தமிழ் யாப்பியல்,
4.தமிழ் இலக்கியம் ஆகியனவாகும்.

இந்த ஆய்வுரைகள் கிட்டத்தட்ட நிறைவுற்றதாகவும், சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நான்கு ஆய்வுரைகளும் வெளி வந்திருக்குமானால் அவை எல்லிசுக்குப் பெரும் புகழை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
என்கிறார் தாமஸ் டிரவுட்மன். தமிழும் அன்றே பெரும்புகழ் பெற்றிருக்கும். எல்லிசின் திட்டத்தின் மையப்பகுதியும் முதன்மை
ஆய்வுரையும் தமிழ் மொழி குறித்தது ஆகும். ஆனால் அவை வெளி வரவில்லை.

எல்லிசு 1819இல் எதிர்பாராமல் தனது 41ஆவது வயதில் இறந்து போனார். இது தமிழுக்கும் தமிழர்க்கும் மாபெரும் இழப்பாகும்.
இவருடைய கையெழுத்துப் படிகள் துரோகிகளால் அடுப்பெரிக்கப் பயன்படுத்தப்பட்டன.

அவரது தமிழ் ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எல்லிசின் ஆய்வு முடிவடைந்து நூலாக வெளி வந்திருக்குமானால் தமிழ் மொழிதான்
தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழி என்ற கருத்தும், தென்னிந்திய மொழிகள் தமிழிய மொழிக் குடும்பம் என்ற கருத்தும் நிலை
பெற்றிருக்கும். அவர் மூலத்திராவிட மொழி குறித்தோ, திராவிடமொழிக் குடும்பம் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. எல்லிஸ் அவர்கள்
கால்டுவலுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆய்வின் மூலம் இம்மொழிகளுக்கு மூலமொழி தமிழ்தான் என்பதைக் கண்டறிந்திருந்தார்.

உண்மையில் ‘திராவிடம்’ என்ற ஒரு மொழி இல்லை. தமிழ் என்ற சொல்தான் திரமிள, திரவிட என உருமாறி ‘திராவிடம்’ என்ற
சொல்லாக ஆகியது. இன்று இக்கருத்துக்கள் பல மொழியியல் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக உள்ளது. ஆகவே
இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழியமொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும்.

திராவிடத்தை சுட்டிக்காட்டிய தமிழகத்தில் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகத்தால் கால்டுவெல்லை
மட்டும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி, தமிழ் ஆய்வறிஞர் எல்லிசை இரட்டாடிப்பு செய்து வரலாற்றிலிருந்து மறையச் செய்தனர்.

ச. தனசேகர்
·
20 ஜனவரி
பொறியியல் மின்னியல் மற்றும் மின்னணுவியல், அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (2000 ஆண்டில் பட்டம் பெற்றார்)


திருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது? (7)

C P brown, Caldwell, Alexander Duncan Campbell



வடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.



எல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்?: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார்.  இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம்  என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.

சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்?: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

Charles Brown with Indian Pundits

உள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த   அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.

Buchanan, Ellis, Mackanzie

திருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.

© வேதபிரகாஷ்

23-06-2017








No comments:

Post a Comment