T.S.S.RAJAN FREEDOM FIGHTER 1880 -1953
T.S.S.RAJAN FREEDOM FIGHTER 1880 -1953 மருத்துவர் தி. சே. சௌ. ராஜன் 1937-39ல் சென்னை மாகாணத்தின் அமைச்சராகப் பணியாற்றியவர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறைக்குச் சென்றபோதெல்லாம் ஒவ்வொருமுறையும், 'எனக்குச் சமையலறையில் ஏதாவது வேலை கொடுங்கள்' என்றுதான் கேட்பாராம். அங்கு எந்தப் பணி கொடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வாராம்.ஒருமுறை, இவரிடம் ராஜாஜி விளையாட்டாகக் கேட்கிறார், 'நீங்கள் ஏன் எப்போதும் சிறையில் சமையலறை வேலையையே விரும்பிக் கேட்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு ராஜன் சொல்லும் பதில் மிகச் சுவையானது. '1909ல் நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குக் காந்தியைத் தலைமை தாங்க அழைத்திருந்தோம். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.' 'விழா நாளன்று மதியம் சுமார் 2 மணியளவில் நாங்கள் சமையல் வேலைகளைத் தொடங்கினோம். சிறிது நேரம் கழித்து, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் அங்கு வந்தார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்...