Posts

Showing posts with the label Covaxin

#Covaxin_WHO_Approval

Image
  #Covaxin_WHO_Approval இந்திய பிரதமர் உட்பட, பல்லாயிரம் இந்தியர்கள் எடுத்து கொண்ட, முழுதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கோவாக்ஸினுக்கு, WHO அனுமதி கிடைக்கும் என, மிகவும் எதிர்பார்க்கப் பட்ட நிலையில், மீண்டும் சில ஆவணங்களை கேட்டு, தள்ளிப் போட்டது சமூக வளைதளங்களில் பெரிதும் பேசப்படும் விஷயமாக உள்ளது. ஆனால் உண்மையிலேயே இந்திய தயாரிப்பு என்பதால் தாமதப் படுத்தபடுகிறதா என்பது கேள்வி. கொஞ்சம் விவரமாக பார்த்தால் இது புரியும். WHO தடுப்பூசிக்கு எப்படி அனுமதி அளிக்கிறது? WHO பெரும்பாலும் 5-7 வருடங்கள் ஆவணங்கள், ரிசல்ட் சரிபார்த்து தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பது வழக்கம். ஆனா; கோவிட் காரணமாக விலக்குகள் அளிக்கப்பட்டு, சில தடுப்பூசிகளை எமர்ஜென்சி என்ற முறையில் அனுமதி அளித்தன. இதில் Pfizer, AstraZenca (Covi Shield), Moderna, Jhonson Jhonson, Novavax, Sputnik, Sinopharm, Sinovac போன்றவை அனுமதி பெற்றன. அப்படியானால் கோவாக்ஸினுக்கு ஏன் அனுமதி வழங்கப் படவில்லை? இதற்குள் போவதற்கு முன் கோவாக்ஸினுக்கும் மற்ற தடுப்பூசிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற அனைத்தும் ...