இந்திய பிரதமர் உட்பட, பல்லாயிரம் இந்தியர்கள் எடுத்து கொண்ட,
முழுதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கோவாக்ஸினுக்கு,
WHO அனுமதி கிடைக்கும் என,
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட நிலையில், மீண்டும் சில ஆவணங்களை கேட்டு, தள்ளிப் போட்டது சமூக வளைதளங்களில் பெரிதும் பேசப்படும் விஷயமாக உள்ளது.
ஆனால் உண்மையிலேயே
இந்திய தயாரிப்பு என்பதால் தாமதப் படுத்தபடுகிறதா என்பது கேள்வி.
கொஞ்சம் விவரமாக பார்த்தால்
இது புரியும்.
WHO தடுப்பூசிக்கு
எப்படி அனுமதி அளிக்கிறது?
WHO பெரும்பாலும் 5-7 வருடங்கள் ஆவணங்கள், ரிசல்ட் சரிபார்த்து தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பது வழக்கம்.
ஆனா; கோவிட் காரணமாக விலக்குகள் அளிக்கப்பட்டு, சில தடுப்பூசிகளை எமர்ஜென்சி என்ற முறையில் அனுமதி அளித்தன.
இதில் Pfizer, AstraZenca (Covi Shield), Moderna, Jhonson Jhonson, Novavax, Sputnik, Sinopharm, Sinovac போன்றவை
அனுமதி பெற்றன.
அப்படியானால் கோவாக்ஸினுக்கு
ஏன் அனுமதி வழங்கப் படவில்லை?
இதற்குள் போவதற்கு முன் கோவாக்ஸினுக்கும் மற்ற தடுப்பூசிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற அனைத்தும் Non Replicating Viral Vector எனும் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட, கோவாக்ஸின் Inactivated Virus தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது.
இதுவே WHO அனுமதி பெற தாமதம் ஆவதற்கான முக்கிய காரணம்.
ஏற்கனவே பல்லாயிரம் பேர் தடுப்பூசி பெற்றவர்கள் இருக்க,
ஏன் இதனை அனுமதிக்க கூடாது?
இதற்கு பதில் சொல்லும் முன், இதுபோன்ற தொழில்நுட்பத்தில் வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப் பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்.
ஆம் 1955ல் அமெரிக்காவின் Cutter Laboratories இதுபோன்ற தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி, அனுமதி பெற்ற சில காலத்திற்கு பிறகு, உற்பத்தியில் செய்த தவறுகளின் காரணமாக,
அந்த வைரஸ் உயிரூட்டப் பட்டு, சுமார் 40,000 குழந்தைகள் போலியோவினால் பாதிக்கப் பட்டனர்.
சுமார் 10லிருந்து 200 குழந்தைகள் இறந்தனர்.
அதுபோன்ற தவறுகள் இந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட பெரும் வாய்ப்புகள் இருப்பதால், பல தடுப்பூசிகள் இந்த முறையில் தயாரிக்கப் பட்டவை,
அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதுடன், உற்பத்தியின் போது கடுமையான கட்டுபாடுகள் கடைபிடிப்பதை உறுதி செய்வதில், பெருமளவு கவனம் செலுத்துவதுடன்,
இதனால் இதன் உற்பத்தி செலவு அதிகரிப்பதும் சாதாரணம்.
பாரத் பயோடெக் ஏற்கனவே Typhar (typhoid), Rotavac (Diaarorhea), Bipolio (Polio) எனும் மூன்று தடுப்பூசிகள் பெருமளவில் தயாரித்தாலும்,
இவை அனைத்தும் Non Replicating Viral Vector முறையில் தயாரிக்கப் படுகின்றன.
Inactivated Virus தொழில்நுட்பத்தில் முதன்முறையாக தயாரிக்கிறது
என்பதால், GMP Good Manufacturing Practice, எனும் தொடர்ந்து தரமாக தயாரிப்பதில் கடுமையான விதிகளை பின்பற்றுவதை குறித்த முறைகளை குறித்த ஆவணங்களை கேட்கிறது.
எதிர்காலத்தில் தவறாக தயாரிக்கப் பட்டுவிட்டால், இந்த வைரஸ் மனித உடலில் செலுத்திய பின்னர், Activate ஆகிவிட்டால், ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தாமதம்.
கண்டிப்பாக இந்த உத்திரவாதம் தேவையான் ஒன்றே, மற்ற தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் படும் தடுப்பூசிகளில் இந்த விபரீதம் உண்டாக வாய்ப்பில்லை.
எனவே அனுமதி கிடைக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இது மனித உயிர்கள் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல,
கோவிட் வைரஸின் தாக்கம்
இதுவரை மனித முயற்சிகளுக்கு, திறமைக்கு சவால் விடும்
ஒன்று என்பதால்,
இந்த தாமதம் சரியானதே..!
ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment