JEYARAJ ARTIST
இன்றைக்கு 63 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைகளுக்கு சித்திரங்கள் போட துவங்கி விட்டார் திரு.ஜெயராஜ்.
சரியாக சொல்வதென்றால் 10-10-1958 ஆம் ஆண்டில் இருந்து சித்திரங்கள் போட்டு கொண்டிருக்கிறார் ஜெ...
தமிழ் இதழ்கள் மட்டும் அல்ல..தெலுங்கு,மலையாள இதழ்களுக்கும் சித்திரங்கள் போடுகிறார்..
அவர் சித்திரங்கள் போட்ட அந்த பிற மொழி இதழ்கள் அவரது வீட்டில் குவிந்து கிடக்கின்றன...
குமுதத்தில் அவர் போட்டிருக்கின்ற நகைச்சுவை துணுக்குகள் ஏராளம்..
சிறுவர்களை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகள் போட்டிருக்கிறார் திரு.ஜெயராஜ்..
நிறைய ஸ்ட்ரிப்ஸ் எனப்படும் சித்திர துணுக்குகள்....
மரண அடி மல்லப்பா நினைவிருக்கிறதா உங்களில் எவருக்கேனும்?
இடியப்ப நாயக்கர் பரம்பரை பயில்வான்..
கருப்பு நிற கை இல்லா பனியன்..
கைலி கட்டி கொண்டு கலக்குவார்..
முறுக்கு மீசை...ஆனால் எல்லோரையும் போல மனைவிக்கு பயந்தவர்...
வெயிட் வெங்கம்மா.....சரியான குண்டம்மா...
நவ நாகரீக உ
டை அணிந்து வரும் நாரிமணி..
நீச்சல் உடையில் கூட வருவார்.
நடு வானில் என்று ஒரு சித்திர தொடர்..
கர்னல் ஸாரநாத்,ராணி சாஹிபா,ஒற்றை கண்ணாடி,புலி குட்டி ஒன்று என்று அமர்க்களமான தொடர் அது..
சமஸ்தானங்களை இணைத்த காலத்தில் நடக்கும் கதை...
ஆரம்ப கால சித்திரங்கள் முற்றிலும் வேறு மாதிரி இருந்தன..
நவீன ஜெயராஜை ஊக்க படுத்தியவர் சாவி...
1980 களில் ஜெ..வின் பெண்கள் எல்லோரும் T-Shirts தான் அணிவார்கள்..
அவற்றின் மத்தியில் ஜெ...எழுதிய ஆங்கில வார்த்தைகளுக்கு வெளிப்படையாக வாலிப கூட்டம் வரவேற்பு வாசித்தது..
நடுத்தர,மூத்த வாசகர்கள் மறைவாக அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரசித்து மகிழ்ந்தனர்..
TNDDC என்று ஒரு பெண்ணுக்கு T.shirt மாட்டி விட்டார்.ஏக ரகளையாகி விட்டது.
TNDDC என்றால் என்ன தெரியுமோ?
Tamil Nadu Dairy Development Corporation😃😃😃😃.
சவீதா,ராஜேந்திர குமார்,ராஜேஷ் குமார்,ப.கோட்டை பிரபாகர்,புஷ்பா தங்க துரை.....இவர்களில் .யார் எழுதும் தொடர்கள் என்றாலும் ஜெ..தான் சித்திரம்..
சூப்பர் ஸ்டார் சுஜாதா எழுதும் தொடர்களுக்கு ஜெ..தான்..
நிர்வாண நகரம்,பதவிக்காக,24 ரூபாய் தீவு,பிரியா,கனவு தொழிற்சாலை...
கவியரசர் கண்ணதாசன் அதை விட ரகசியம் என்று ஒரு தொடர் குமுதத்தில் எழுதினார்...
ஜெ...தான் சித்திரம்...
பிள்ளைகள் கண்ணில் படாமல் படிக்க வேண்டி இருக்கிறது என்று ஒரே கூக்குரல் குமுதத்தில்...
ஆனால் ஒரு ஆத்மாவாவது நாங்கள் குமுதம் வாங்கி அதை விட ரகசியம் படிக்க மாட்டோம் என்று அறை கூவல் விடவில்லை..😁😁😁😁😁😁
கலைகளில் அவள் ஓவியம் என்று நான் எழுதியது ஜெயராஜின் பெண் சித்திரங்களை பார்த்து தான் என்றார் கவியரசர்...
ஜெயராஜ் அவர்கள் ஏன் தெய்வ சித்திரங்களை தீட்ட வில்லை என்று அவரையே கேட்டேன்..
ஒரு பத்திரிக்கையும் என்னை கேட்க வில்லையே என்று சிரித்து கொண்டே சொன்னார்..
கலைஞரின் குரளோவியம்,சங்க தமிழ் போன்ற இலக்கிய தொடர்கள் சிலவற்றிற்கும் சித்திரங்கள் எழுதியுள்ளார் ஜெ..
இன்னுமொரு 12 ஆண்டுகளில் அவர் ஓவியம் வரைய தொடங்கி 75 ஆண்டுகள் ஆகும்..
பவழ விழா காண்பார்..
நாமும் இருந்து கண்டு களிக்க இறைவன் அருளட்டும்..
No comments:
Post a Comment