Posts

Showing posts with the label THUMPS

THUMBS UP

Image
  THUMBS UP தம்ஸ் அப் ''ச்சே... இதென்ன பள்ளிக்கூடமா... சந்தைக் கடையா... இல்லே, கட்சி, 'மீட்டிங்' நடக்கற மைதானமா... முதலில், மாணவர்களை அதட்டி, வகுப்பறைக்கு போக சொல்லுங்க... அப்புறம் அந்த கூட்டத்தை அனுப்பி வைக்கிற வழியை பாருங்க,'' டீச்சர் தயாமலரிடம், எரிந்து விழுந்தார், தலைமையாசிரியர். பள்ளி மைதானம் முழுக்க ஒரே கூட்டம். மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கூடியிருந்தனர். கோபம், ஏமாற்றம், ஆதங்கம், பரிதவிப்பு, ஆவல்... இப்படி, பல உணர்வுகள் பூசியிருந்தன, அவர்களின் முகங்களில். 'போராடுவோம்... போராடுவோம்...' 'தயா டீச்சரை அனுப்பாதே...' 'தயா டீச்சர் சேவை, எங்களுக்கு தேவை...' 'மாட்டோம், போக விடமாட்டோம்... தயா டீச்சரை போக விடமாட்டோம்...'  இதுவரை இந்த பள்ளிக்கு எத்தனையோ பேர் மாற்றலாகி வந்தும், போயும் உள்ளனர். ஆனால், 'தயா டீச்சருக்கு, மாற்றல் உத்தரவு வந்துள்ளது...' என்ற விஷயம் கசிந்ததுமே... கூட ஆரம்பித்தது கூட்டம். பெற்றோரும் கூடுவர் என்பது, பள்ளி வரலாற்றிலேயே, புது அத்தியாயம்! நகரமுமில்லாத, கிராமமும் இல்லாத, ரெண்டுங்கெட்டா...