PRIME MINISTER SECURITY IN INDIA
PRIME MINISTER SECURITY IN INDIA கோட்டு சூட்டுடன் கையில் சூட் கேஸ்.!! என்ன அது.? பிரதமரை சுற்றி இத்தனை சிறப்பா.? ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்.. நாடு ஏற்கனவே பயங்கரவாதத்தால் இரண்டு பிரதமர்களை இழந்திருக்கையில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், பிரதமர் 20 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நிறுத்தவைக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விஷயம். இதை பல மூத்த காங்கிரஸ்காரர்களே கூறிவிட்டனர். அந்த பரபரப்பு காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்க, பிரதமரை அன்று அங்கு, கண் இமை போலவும், கர்ணனின் கவசம் போலவும் காத்து நின்றவர்கள் மீது, தற்போது மக்களின் பார்வை திரும்பியுள்ளது. கோட்டு சூட்டுடன் துப்பாக்கி..? சிலர், கையில் ஏதோ File-லையும் வைத்துள்ளனர்..!! பாதுகாவலர்களா? அதிகாரிகளா? யார் அவர்கள்? அவர்கள் தான்.. “SPG” எனப்படும் Special Protection Group.. நாட்டில் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்று பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. X பாதுகாப்பு, Y பாதுகாப்பு, Y plus பாதுகாப்பு, Z பாதுகாப்பு, Z plus பாதுகாப்பு மற்றும் SPG. இதில் SPG பாதுகாப்பு என்ப...