DONKEYS AND ME
DONKEYS AND ME கழுதைகளும் நானும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வண்ணான் மாமா வருவார். அவர் வந்தால் என்னுடைய அப்பா, பக்கத்து வீடெல்லாம் போய்விட்டு கடைசியாக இங்கு வா, என்பார். கழுதையுடன் வரும் அந்த வண்ணான் மாமா எனக்கு நல்ல நண்பர். எங்கள் வீட்டு வாசலில் கழுதைகளை நிற்க வைத்துவிட்டு தெருவில் உள்ள வீடுகளில் அழுக்கத்துணிகளை சேகரித்துக் கொண்டு வரச்சென்று விடுவார். சிலசமயம் கழுதைக்குட்டிகளும் கூட வருவதுண்டு. குட்டிகள் மிக அழகாக இருக்கும். அழுக்கு காக்கி கலரில் கழுதைகள் இருப்பதால் தான், அவைகள் அழுக்கு மூட்டைகளை சுமக்கின்றன என நான் நினைத்துக் கொள்வேன். வீட்டில் அழுக்குத்துணி சேகரித்து வைக்கப்பட்டிருக்கும், பிரம்புக்கூடையில் உள்ள துணிகளை ரகவாரியாக பிரித்து, கணக்கெழுதி வாய்மொழியாக எண்ணிக்கையை வண்ணான் மாமாவிடம் அப்பா சொல்லுவார். சரி சாமி என்று சொல்லிவிட்டு மொத்தத் துணியையும், கச்சிதமான மூட்டையாகக் கட்டி, ஏற்கனவே கொண்டு வந்த சலவை உருப்படிகளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு புறப்படுவார். இந்த இடைவெளியில் அம்மாவிடம் கேட்டு பழைய சாதம் கலந்த தண்ணீர், வீட்டில் கிடைக்கும...