Tuesday, 12 May 2020

DONKEYS AND ME




DONKEYS AND ME

கழுதைகளும் நானும்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான்
வண்ணான் மாமா வருவார். அவர் வந்தால்
என்னுடைய அப்பா, பக்கத்து வீடெல்லாம் போய்விட்டு
கடைசியாக இங்கு வா, என்பார்.
கழுதையுடன் வரும் அந்த வண்ணான் மாமா எனக்கு நல்ல
நண்பர். எங்கள் வீட்டு வாசலில் கழுதைகளை நிற்க வைத்துவிட்டு
தெருவில் உள்ள வீடுகளில் அழுக்கத்துணிகளை சேகரித்துக்
கொண்டு வரச்சென்று விடுவார்.
சிலசமயம் கழுதைக்குட்டிகளும் கூட வருவதுண்டு.
குட்டிகள் மிக அழகாக இருக்கும். அழுக்கு காக்கி கலரில்
கழுதைகள் இருப்பதால் தான், அவைகள் அழுக்கு மூட்டைகளை
சுமக்கின்றன என நான் நினைத்துக் கொள்வேன்.

வீட்டில் அழுக்குத்துணி சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்,
பிரம்புக்கூடையில் உள்ள துணிகளை ரகவாரியாக பிரித்து,
கணக்கெழுதி வாய்மொழியாக எண்ணிக்கையை
வண்ணான் மாமாவிடம் அப்பா சொல்லுவார். சரி சாமி
என்று சொல்லிவிட்டு மொத்தத் துணியையும்,
கச்சிதமான மூட்டையாகக் கட்டி, ஏற்கனவே கொண்டு வந்த
சலவை உருப்படிகளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு
புறப்படுவார்.

இந்த இடைவெளியில் அம்மாவிடம் கேட்டு
பழைய சாதம் கலந்த தண்ணீர், வீட்டில் கிடைக்கும்
பழங்கள் எல்லாம் கழுதைகளுக்கு கொடுத்து,
அவைகள் சாப்பிடுவதை கண்டு மகிழ்வேன்.

கழுதைகளுக்கு நாய்கள் போன்று உணர்ச்சிகளை
வெளிப்படுத்தத் தெரியாது. ஆனாலும் அதனுடைய
வெகுளித்தனமே அதன் அழகு. அதன் வாயில் தெரியும்
பெரிய பற்கள் நம்மிடம் எதோ சேதி சொல்வது போல்
தோன்றும். அதுவும் கழுதைகளின்
நீண்ட செவிமடல்கள் அதன் கம்பீரத்தைக் கூட்டும்.

அந்த அந்த வீட்டு அழுக்குத் துணி மூட்டைகளை
ஒரேயொரு மூட்டையாக, பெரிய தொரு துணியில் முடிந்து,
அதை கழுதை மேல் வைத்து, வண்ணான் மாமா
முன் நடந்தால், கழுதையும்
அவர் பின்னே ஆடி அசைந்து தூங்கிக் கொண்டே நடந்து
போவது போல அழகாக துணிச் சுமையை சுமந்து செல்லும்.



கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பண்புகள்
பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.

கழுதைப் பால் (Donkey milk அல்லது ass milk/jenny milk) என்பது வளர்ப்புக் கழுதை (ஈக்வஸ் அஸினஸ்) கொடுக்கும் பால் ஆகும். இது பழங்காலத்திலிருந்து அழகுக்கான நோக்கங்களுக்காகவும், குழந்தைப் பருவ ஊட்டச்சத்துகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு
எகிப்தில் பழங்காலத்தில் இருந்து உணவு மற்றும் ஒப்பனை நோக்கங்களுக்காக மனிதர்களால் கழுதைப் பால் உபயோகப்படுத்தப்படுகிறது.[2]

விற்பனை
கழுதைப்பால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது, மருத்துவ குணம் நிறைந்தது என்ற நம்பிக்கை தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, காய்ச்சல், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் கழுதைப் பாலால் குணமாகும் என நம்பப்படுகிறது. இதனால் சிலர் கழுதைப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.30 வரை விற்கப்படுகிறது. ஒரு கழுதையிடமிருந்து ஒரு வேளைக்கு 150 மில்லி பால் கறக்க இயலும்.[3]

உற்பத்தி
ஆசினின் இனக் கழுதை பருவகால பாலிஸ்டிரோஸில் ஒன்றாக கருதப்படுகிறது, ஆனால்   அட்சரேகையில் பண்ணை அமைந்தால் அது பெரிதும் இனப்பெருக்கச் சுழற்சியை பாதிக்கும். பெண்கழுதை பொதுவாக 12 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும்.


தன்னுடைய உதவிக்கு எவையெல்லாம் பயனுள்ளதாக இருக்குமோ அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றுவதில் மனிதன் படுகில்லாடி. குதிரையில் ஆரம்பித்து யானை, மாடு, ஒட்டகம், கழுதை எனப் பல விலங்குகளை தன்னுடைய பயன்பாட்டுக்கு லாகவமாக பயன்படுத்திக்கொண்டான். இன்னும் அந்த விலங்குகளை எப்படியெல்லாம்  பயன்படுத்தலாம் என யோசித்தவனின் 21-ம் நூற்றாண்டின் வினோத கண்டுபிடிப்பு  “BEEKEEPING DONKEY” 

விபரீத வேலை... பிரத்யேக உடை... விவசாயிக்குத் தோள் கொடுக்கும் கழுதை!
மானுவல் ஜூராசி வியரா என்பவர் பிரேசில் நாட்டில் உள்ள இடதிரா என்கிற ஊரில் வசித்துவருகிறார். அங்கிருக்கிற மக்களின் முக்கியத் தொழிலாக தேனீ வளர்ப்பு இருந்துவருகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் வருகிற தேனை தள்ளுவண்டி போன்ற ஒரு வண்டியில் தேனை சேகரித்து விற்பனை செய்துவருகிறார். இருபது பேர் அவருடைய தேனீ பண்ணையில் பணிபுரிந்துவருகின்றனர். 

ஜூராசி வியரா தன்னுடைய வீட்டில் “போனிகோ” எனப் பெயரிட்ட ஒரு  கழுதையை வளர்த்துவருகிறார். அவருடைய பண்ணையில் பணிபுரிகிற ஒரு சிலர் “இந்தக் கழுதையை தேன் சார்ந்த ஏதாவது ஒரு வேளையில் பயன்படுத்தலாமே என யோசனை சொல்கிறார்கள். இரண்டொரு நாள் கழித்து கழுதைக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக சொல்கிறார். அதாவது தேனீ வளர்க்கும் இடத்தில் இருந்து தேனை சேகரிக்கக் கழுதையை பயன்படுத்தப்போவதாகச் சொல்கிறார். ஆனால் அவரோடு பணி புரிகிறவர்கள், "கழுதையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தேனீ இருக்கிற இடத்துக்கு கழுதை வரநேர்ந்தால் தேனீக்கள் கொட்டுமே!” எனச் சந்தேகப்படுகிறார்கள். 

பத்து நாள்கள் இடைவெளியில் தேனீ இருக்கிற பண்ணைப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வினோதமான விலங்கு வருவதைத் தோட்டத்தில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்கள். உடன் ஜூராசி வியரா வருவதையும் பார்க்கிறார்கள். சற்று கூர்ந்து கவனித்ததில் ஜூராசி வியராவுடன் வருவது அவருடைய  கழுதை போனிகோ  என்பதை உணர்கிறார்கள். “கழுதையைப் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதா என்கிற ஒரு கேள்வி எழலாம்” அவர்கள் குழம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது. 

ஏனெனில், தேனீக்கள் இருக்கிற பகுதிக்கு எந்த விலங்குகளும் செல்வதற்குப் பயப்படும். காரணம் கூட்டமாக சேர்ந்து தேனீக்கள் கொட்ட ஆரம்பித்துவிடும். தேனீக்களின் சத்தமே பல விலங்குகளை அச்சமடையச் செய்யும். ஆப்ரிக்கா நாடுகளில் யானைகளிடமிருந்து பயிர்களை காக்கத் தேனீ வேலி என்கிற முறை இப்போதும் வழக்கத்தில் இருந்துவருகிறது. அப்படியான ஒரு பகுதிக்கு போனிகோவை ஜூராசி வியரா அழைத்து வந்திருந்தார். அதுவும் சேகரிக்கிற மொத்த தேனையும் வீட்டுக்குச் சுமந்து செல்ல கழுதையைப் பயன்படுத்துவதற்காக அழைத்துவந்திருந்திருந்தார்.  

கழுதையின் உடல் முழுமைக்கும் பிரத்யேக உடை தயாரித்து அதைக் கழுதைக்கு அணிவித்திருந்தார். தலையிலிருந்து வால் பகுதி வரைக்கும் கழுதையின் உடல் மறைக்கப்பட்டிருந்தது. கழுதையின் முகப்பகுதிக்கு வலை போன்ற ஒரு துணியைப் பயன்படுத்தியிருந்தார். கழுதையின் எந்த உடல் பாகத்தையும் தேனீக்கள் தீண்டாத வண்ணம் அந்த உடை தயாரிக்கப்பட்டிருந்தது. 


உடையைத் தயாரிக்க 15 நாள்கள் ஆனது எனக் கூறும் ஜூராசி வியரா, 2014-ம் ஆண்டிலிருந்து தேன்  சேகரிக்கக் கழுதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். முதல்முறை அந்த உடையை போனிகோவுக்கு அணிவிக்கும்பொழுது அந்த உடை அதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது; அந்த உடை அணிவித்ததற்காக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என்கிறார். மூன்று வருடங்களாகத் தேனீ சேகரிப்பில் இருக்கிற போனிகோ உலகின் முதல் தேன் சேகரிக்கும் விலங்கினம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. 

தேனீ பண்ணையில், போனிகோ சீருடை அணிந்து ஜூராசி வியராவுடன் ஒய்யாராமாய் நடந்துவருவதைப் பார்க்கும்போது, நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதைப் போலவே இருக்கிறது; அந்த அழகிலும், மிடுக்கிலும்!


[4]

No comments:

Post a Comment