Tuesday, 12 May 2020

NADU IRAVIL MOVIE




NADU IRAVIL MOVIE


நாலுபக்கம் ஏரி, 




ஏரியில தீவு, 
தீவுக்கொரு ராணி (அந்த ராணியாக, பொன்னி  என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியாக பண்டரிபாய் - அம்மையார் அழகோ அழகு,  ஒரு கோடி எழில் சேர்த்த உருவம்...'அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?ஆ ...'  நினைவு கூரவும்) 
ராணிக்கொரு ராஜா (அந்த ராஜாவாக பொன்னியின் கணவர் முதியவர் தயானந்தம் - மேஜர் சுந்தர்ராஜன்)

முதலைகள் நிரம்பிய ஏரியின் நடுவில் ஒரு அரண்மனை போன்றதொரு பங்களா.  யாரோ ஒரு ஐரோப்பியரால் கட்டப்பட்ட ஆடம்பரமான மாளிகையாம்.  பின்னர் தயானந்தம் வாங்கி தனது மனைவியுடன் தனித்து வாழ்கிறாராம். கதையின் காலம் சற்றொப்ப இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.  தொலைபேசி, கார்  குறித்துப் பேசுகிறார்கள், இயந்திரப்படகு இருக்கிறது, ஆனால்  தீவில் மின்சாரம் இல்லை. மாடிக்குச் செல்ல  உதவும்  லிஃப்ட் கையால் இயக்கப்படுகிறது, மாளிகையில் எங்குப் பார்த்தாலும் இரவில் ஒளிவீச மெழுகுவர்த்தி விளக்குகள்.  இந்த இரவு நேர இருட்டு, விளக்கு ஒளியில் தெரியும் நிழல் உருவங்கள், இருட்டில் மறைந்து தெரியும் உருவங்கள், காற்றில் ஆடும் திரைச்சீலைகள் என இந்தச் சூழ்நிலையை திகில் கதைக்காக தக்கவாறு பயன்படுத்தியுள்ளார் கதை எழுதி, 
இசையமைத்தவரும், இயக்குநரும் தயாரிப்பாளருமான வீணை எஸ்.  பாலசந்தர். தயானந்தத்தின் உறவினர் என நடிகர்கள்  பட்டாளமே படத்தில் உள்ளனர்.  தீவுக்கு வரவழைக்கப்பட்ட இவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்த நாட்களில் நள்ளிரவில் கொலை செய்யப்படுவதுதான் கதை.  இவர்களின் கதைப்பெயர் எந்த அளவும் உதவப்போவதில்லை என்பதால்  நடிகர்களின் பெயர்களையே வைத்துக் கொள்ளலாம். 

பெரிய குடும்பத்தில் இரண்டு அண்ணன், இரண்டு தம்பி, ஒரு தங்கையுடன் பிறந்த மேஜர்  தாழ்ந்தகுலப்பெண்ணாகக் கருதப்பட்ட பண்டரிபாயை திருமணம் செய்து கொள்ள, அதைக் குடும்பத்தாரும் ஊராரும்  ஏற்றுக் கொள்ள மறுக்க, அவர்களை எதிர்க்க, அவர்களால் தாக்கப்பட்டு,  ஓட ஓட விரட்டப்பட்டு ஊரைவிட்டு ஓடி வருகிறார்கள்.  பெருஞ்செல்வந்தராகிறார் மேஜர். ஆனால் தாக்கப்பட்டதில் மனநலம் பாதிக்கப்படுகிறார் பண்டரிபாய்.  இவர்களுக்கு குழுந்தைகள் இல்லை. ஒரு மொட்டைத்தலை எடுபிடி (ராமனுஜம்), அவர் மகளாக வீட்டு வேலை செய்யும்  பணிப்பெண்  ( சரோஜா), அவரைக் காதலிக்கும் சர்வர்  (சோ) மற்றும் ஒரு சமையற்காரர் (கொட்டபுளி ஜெயராமன்) என நான்கு உதவியாளர்களுடன் முதிய வயதில் தீவில் அமைதியான வாழ்க்கை நாடி தனியே வசிக்கிறார்கள்.  இவர்களுக்குக் குடும்ப மருத்துவர் சரவணன் ( எஸ். பாலசந்தர்).  இரத்தப்புற்று நோயால் இன்னமும் சில வாரங்களே வாழப்போகும் மேஜருக்குப் பிறகு பண்டரிபாயை கவனித்துக்கொள்ளவும், மேஜரின் உறவினருக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுத்து வாரிசற்ற சொத்துக்கு வழிவகுக்கவும் திட்டமிட்டு உறவினர்களைத் தீவிற்கு மேஜரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அழைக்கிறார் பாலசந்தர்.



மூத்த அண்ணனாக சி.வி.வி பந்தலு + அவர் மகள் மற்றும் மருமகனாக  வி. ஆர். திலகம், வி. கோபால கிருஷ்ணன்
கைம்பெண்ணான  அண்ணியாக   எஸ்.ஆர்.ஜானகி  + அவர் மகனாக மாலி
தங்கையாக  எஸ். என். லட்சுமி + அவர் மகன்களாக  விஜயன், சதன்
தம்பியாக  இ. ஆர். சகாதேவன் + அவர் மனைவியாக  எம். எஸ். எஸ். பாக்கியம் மற்றும் மகளாக  கல்பனா 
மற்றொரு தம்பியாக  போரில் கண்பார்வை, காலிழந்து சக்கர நாற்காலியில் வாழ்பவராக  வி. எஸ். ராகவன், அவர் மகளாக  சவுகார் ஜானகி ஆகிய 13 பேர்  தீவுக்கு வருகிறார்கள். 
இவர்களை எப்படியாவது பயமுறுத்தி விரட்டிவிட சோவும் மற்ற பணியாட்களும் திட்டமிடுகிறார்கள். உறங்குபவர் மீது தேளை எறிவது, குடிக்கும் பாலில் நஞ்சு கலந்திருக்கலாம் என்ற மொட்டைக் கடிதாசி எழுதவது போன்ற வேலைகள் செய்கிறார்கள்.  உறவினர்களில் சிலர் ஒவ்வொருவராகத் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். 



முதல் கொலை விழுந்ததும் அனைவரும் மேஜரை சந்தேகிக்கிறார்கள். தங்களைப் பழி வாங்கும் முயற்சியாகத் தீவுக்கு வரவழைத்ததாக எண்ணுகிறார்கள்.  மேஜர் அதற்கு மறுப்பு தெரிவித்து காவல் துறையை அழைக்கக்கூடாது,  குற்றவாளியைக் கண்டுபிடித்து பிறகு அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்று எச்சரிக்கிறார். குற்றவாளி தப்பக்கூடாது என்ற நோக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை யாரும் தீவை விட்டு வெளியேறவும் அனுமதியில்லை.  ஒவ்வொருமுறையும் சொத்துகளைத் திருடிக்கொண்டு ஓடிவிடவோ, அல்லது காவல் துறைக்கு உதவிக்குச் செல்லலாம் என்றோ தப்பிக்க முயலும் ஒவ்வொரு  உறவினரும் ஏதோ ஒரு வகையில் கொலை செய்யப்படுகிறார்கள்.  அனைவருக்கும் அச்சம் உச்சத்தைத் தொடுகிறது.  தானாக இசைக்கும் பியானோ, கஜானாவைக்  கொள்ளையடிக்கச் சென்ற அறையில் பிணமாக அலமாரியில் பெண்மணி என்று அச்சம் தொடர்கிறது. கொலைகள் தொடர்கிறது, ஆறு பேர் கொலை செய்யப்படுகிறார்கள்.  ஒவ்வொருவரும் விதம் விதமாக உயிரை இழக்கிறார்கள். ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் கொதித்துப் போகும் உறவினர்களை,  அவர்களை வரவழைத்த குடும்ப டாக்டர் சமாதானப்படுத்துகிறார்.  பிறகு அனைவரும் தங்கள்


உயிருக்காகவும், யார் கொலை செய்கிறார்கள், அவரின் நோக்கமென்ன என அறியவும்   முயல்கிறார்கள்.  படம்பார்ப்பவருக்கும் கொலையாளியை அடையாளம் காணும் ஆர்வம் தொற்றிக் கொள்ளும். மனநிலை பாதிப்படைந்த பண்டரிபாய் மீதும் உறவினர்களுக்குச் சந்தேகம் வருகிறது, தங்களில் ஒருவரோ என்றும் எண்ணுகிறார்கள்.  ஒரு கட்டத்தில் குடும்ப டாக்டரின் மீதே ஐயம் கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.  உறவினர்களை ஒவ்வொருவராகக் கொன்றுவிட்டு, அவர்கள் பங்கு கேட்க வரமுடியாமல்  சொத்தை அடைய நினைப்பவர்  அவர் என்றும் நினைக்கிறார்கள். சக்கரநாற்காலியில் இருக்கும் முதியவரை டாக்டர் மாடிப்படியில் உருட்டி கொலை செய்ய முயன்றதைப் பார்த்ததாக அவர் மகள் டாக்டர் மீது  குற்றம் சாட்டுகிறார். 

இதற்கிடையில்  மாடிக்கைப்பிடிச்சுவர் ஓரத்தில் நின்ற பண்டரிபாயே கீழே தள்ளிவிடப்பட்டு அவரும் உயிரை விட்டு விடுகிறார்.  தனது மனைவியின் மீது அன்பு செலுத்தி, 'கண்காட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்' என்று அருமையாகப் பாடி  அவரை மனமகிழச் செய்த தனது தம்பியின் மகளாக வரும் சவுகார் ஜானகிக்கே சொத்து முழுவதையும் எழுதி வைக்கப் போவதாக மேஜர் சொல்கிறார். அடுத்து அதனாலேயே அவர் கொலை செய்யப்படப் போகிறார் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருகிறது. மனம் உடைந்த நிலையில் படுத்திருக்கும் மேஜர் சவுக்கார் ஜானகியை அழைத்து மீண்டும் தனது மனைவியின் மனத்தைக் கவர்ந்த பாடலைப் பாடுமாறு கேட்கிறார்.  அவர் பியோனா வாசித்துப் பாடும் பொழுது கொலைகாரன் அவரைக் கொலை செய்ய வருகிறான்.  பியானோ மீது நிழல் விழுவதைப் பார்த்து, எச்சரிக்கையுடன் கொலைகாரனை எதிர்பார்த்திருந்த சவுகார் அவனை நேரடியாக எதிர் கொள்கிறார். குடும்ப டாக்டர் முகத்தை மறைத்துக் கொண்டு கையில் கத்தியுடன் நிற்பது தெரிகிறது.  பாடல் நின்றவுடன் எச்சரிக்கை அடைந்து விரைந்து  துப்பாக்கியுடன் வந்த  மேஜர் கொலைகாரனை சுட்டுவிடுகிறார்.  துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அனைவரும் டாக்டர் மேஜரால் சுடப் பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க,  என்ன சத்தம் இங்கே  என்று கேட்டுக் கொண்டே மேலே பால்கனியில் இருந்து  டாக்டரே கீழே  எட்டிப் பார்க்கிறார். அங்குதான் இயக்குநர் என்று தலைப்பு போடுகிறார்கள் படத்தில்.  அப்படியானால் மேஜரின் உறவினர்களைக் கொன்ற  கொலைகாரன் யார்?  இதற்கு விடை சொல்வது அநீதி.  படத்தைப் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும், கதையின் போக்கை காட்டிக் கொடுப்பது முறையல்ல. முடிவை  யூடியூப்  திரையில் காணலாம்.

பின்னணி இசை அருமை, திகில் படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது, பாடல் இசை எஸ். பாலசந்தர். அகதா கிறிஸ்டியின் மர்மக்கதையின்  (Ten Little Indians and Then There Were None) அடியொட்டி கதை எழுதி, இயக்கியுள்ளார் எஸ். பாலசந்தர். பாடல்கள் இரண்டே என்றாலும் ஒவ்வொன்றும் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.  எல். ஆர். ஈசுவரியும், பி. சுசீலாவும் பாடிய பாடல்கள், அரைநூற்றாண்டிற்கு முன்னர் புகழ் பெற்ற பாடல்களாக வானொலியில் கேட்டது பசுமையாக நினைவில் உள்ளது.  Ten Little Indians (1965)  என்ற ஹாலிவுட் படம் இந்தப் படம் எடுக்கத் தூண்டுதலாக அமைந்துள்ளது தெரிகிறது. கதையின் கரவில்  இந்தியாவிற்கேற்ப ஜாதி மாறிய திருமணம் துவக்கி வைத்த கொடுமையின் தூண்டுதல் என்பதும் பொருத்தமாக இருக்கிறது. இதே படம் ஹாலிவுட்டில் 1945, 1974 ம் வந்துள்ளது. தமிழிலும் இக்காலத்திற்கேற்ற திரைக்கதை உருவாக்கி மற்றொருமுறை படம் எடுக்கலாம்.  தகவல் தொலைத்தொடர்பற்ற அத்துவானத் தீவு என்பதை இக்காலத்திற்காகக் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். 

நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர், ஒவ்வொருவரும் மதிக்கப்பட்டு தனித்தனியாக நல்ல  முறையில் அறிமுகமும் செய்யப்படுகிறார்கள் என்பது பாராட்டப்படவேண்டிய அணுகுமுறை. தேவையற்ற காட்சிகள், நகைச்சுவை என்ற இழுவைகள் இன்றிப் படவோட்டம் தொய்வடையாமல்  விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒலி ஒளிப் பதிவு, படத்தொகுப்பு, சில இடங்களில் கேமரா கோணங்கள்  என அனைத்தும் கவனமாக செய்யப்பட்டு, படத்தை இக்காலத்திலும் ஏற்கும் வண்ணம் உருவாக்கிய எஸ். பாலசந்தர் பாராட்டிற்குரியவர்.  இவரது திறமை ஏனோ  ஆர்சன் வெல்ஸ் (Orson Welles)ஐ  நினைவுக்குக் கொண்டுவருகிறது. அவரது சிட்டிசன் கேன் படத்தின் சில காட்சி அமைப்புகளும் நினைவுக்கு வருகிறது.  அப்படி யாரேனும் அக்காலத்தில் எஸ். பாலசந்தரைப் பாராட்டியுள்ளார்களா எனத் தெரியவில்லை



Plot
Dhayanandam is a rich man who takes care of his wife Ponni, they have no children. Dr.Saravanan was the close friend of Dhayanandam and tells about his blood cancer and he died in 20 days. Dhayanandam's all assets are going in vein. Dr.Saravanan give an idea, to call all his relations and they have come. Unfortunately, they are murdered one by one in the midnight. All are terrified. The doubt on the murderer shifts onto Dr.Saravanan only to be revealed the real murderer is Dhayanandam's handicapped brother.

Cast
Major Sundarrajan as Dhayanandam
Pandari Bai as Ponni (Dhayanandam's wife)
Sundaram Balachandar as Dr. Saravanan
Sowcar Janaki as Ragini
Cho Ramaswamy as Servar Mose
V. Gopalakrishnan as Ranga Rajan, (Somanathan's Son-in-law/Leela's Husband)
V. R. Thilagam as Leela (Ranga Rajan's Wife)
M.S.S.Pakkiyam as Neelamegham's wife
E.R.Sahadevan as Neelamegham
K.Vijayan as Aravindhan (Vadivambal elder son)
V. S. Raghavan as Jambulingam (Dhayanandam's younger brother / blind man)
Sadhan as Kalyam (Aravindan's younger brother)
Kottappuli Jayaraman as Joseph (Dhayanandam's house servant)
Maali alias Mahalingam (Mohanambal's Son)
S.N.Lakshmi as Vadivambal (Dhayanandam's Sister)
C.V.V.Banthulu as Somanathan
Kalpana as Anu Radha (Neelamegham's Daughter)
S.R.Janaki as Mohanambal (Dhayanandam's Sister)
Ramanujam as Mottaiyan
Saroja as Pankajam (Mottaiyan's Daughter)
Production and release
After the success of Bommai (1964), Sundaram Balachander made Nadu Iravil the same year. It was based on the 1939 novel And Then There Were None (also known as Ten Little Niggers) by the British writer Agatha Christie. Though he completed the film in 1964-1965, no distributor was willing to buy it, forcing Balachander to finance and distribute the film himself; Nadu Iravil was eventually released in 1970 and became a major success, prompting several distributors who earlier rejected the film, to return and beg Balachander for distributing it.

Soundtrack
Music composed by Sundaram Balachander and lyrics written by Ve. Laxmanan.

. 






INDIAN SEPOY REBELLION 1857

No comments:

Post a Comment