SIVANTHA MANN WHEN PICTURISED
SIVANTHA MANN WHEN PICTURISED அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர். அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன். மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்...