Posts

Showing posts with the label மலையாள

மலையாள நடிகை ஷோபா பிறப்பு 1962 செப்டம்பர் 23

Image
மலையாள நடிகை ஷோபா  பிறப்பு 1962 செப்டம்பர் 23 ஷோபா (Shobha, 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். வாழ்க்கைக் குறிப்பு[தொகு] சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.[2][3] 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார்.[4] இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.[5] ...

மலையாள நடிகர் மம்மூட்டி ஒரு இந்திய சரித்திர நாயகன் பிறப்பு 1957 செப்டம்பர் 7

Image
மலையாள நடிகர் மம்மூட்டி  ஒரு இந்திய சரித்திர நாயகன்  பிறப்பு  1957 செப்டம்பர் 7 மம்முட்டி (மலையாளம்: മമ്മൂട്ടി, முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951[1]), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்,[2]. மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலை...

ராணி சந்திரா, விமான விபத்தில்

Image
Rani Chandra ‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் பலியானார். அவருடைய தாயாரும், 3 தங்கைகளும் இதே விபத்தில் மாண்டனர். ராணி சந்திராவுக்கு வயது 22. கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி.  1965-ம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’)  ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உள்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெறவேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை. எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976-ல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார். எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை....