PITHTHUKULI MURUGADAS , DEVOTIONAL SINGER DIED 2015 NOVEMBER 17
PITHTHUKULI MURUGADAS , DEVOTIONAL SINGER DIED 2015 NOVEMBER 17 பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்[ இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு] பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன். பக்தி வழி[மூலத்தைத் தொகு] 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.[3] தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சே...