Posts

Showing posts with the label KARLMARX

Jenny ,von, Westphalen,KARLMARX, 12 February ,1814, 2 December ,1881

Image
  Jenny von Westphalen,KARLMARX  12 February 1814 – 2 December 1881 The Moore has also died"  (மூரும் கூட இறந்துவிட்டார்) என்று ஏங்கல்ஸ் தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களைப் பார்த்துச் சொன்னார். கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னி மார்க்ஸ் இறந்துவிட்டார். ஜென்னி மார்க்ஸின் உடலம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் கார்ல் மார்க்ஸ் உயிரோடுதான் இருந்தார். ஆனால் அவரும் இறந்து போனதாக நண்பர்களிடம் ஏங்கல்ஸ் சொன்ன வார்த்தைகள்தான் முதலில் குறிப்பிடப்பட்டவை. மார்க்சின் குடும்ப வட்டத்துக்குள் மூர் என்ற பட்டப்பெயரால்தான் அறியப்பட்டார். மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் சொன்ன வார்த்தைகளுக்கு பின்னால் மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் இடையிலான அற்புதமான காதல் உறவு ஒளிந்திருக்கிறது. மார்க்ஸூக்கும் ஏங்கல்ஸூக்கும் இடையிலான அற்புதமான நட்புறவை காவிய நட்பு என்ற மாமேதை லெனின் போற்றுவார். அதற்கு இணையாக மார்க்சுக்கு ஜென்னிக்கும் இடையில் முகிழ்த்திருந்த காதலும் காவியக் காதல் என்றே சொல்லலாம். உண்மையைச் சொன்னால், ஜென்னி மறைந்த மறு ஆண்டில் மார்க்ஸூம் மண்ணில் இரு...