Posts

Showing posts with the label -CINEMA

CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW

Image
  CHENNAI -CINEMA THEATRES -ONE VIEW சென்னையில் காணாமல் போன முதல் மல்டி பிளக்ஸ் திரை அரங்கம் சபையர் - இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் காம்ப்ளக்ஸ்(2+ Screen Complex Theatre) தியேட்டர் சென்னை அண்னாசலையில் "சபையர்" என்ற பெயரில் இருந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் தான் சபையர் வளாகம் இருந்தது. அங்கு சபையர், ப்ளூ டைமண்ட் மற்றும் எமரால்ட் என்று மூன்று அரங்கங்கள் இருந்தன. அந்நாளில் இது ஒரு வித்தியாசமான திரை வளாகம். இங்கு பார்க்கிங் வசதியே வித்தியாசமானது (மல்டி லெவல் பார்க்கிங்) அன்று அது போல் சென்னையில் இருந்ததாக தெரியவில்லை. சபையர் 900 இருக்கைகள் கொண்டது, இங்குள்ள தரவரிசை பல வகையாக இருந்தது, 2:00, 2:90, 3:50, 4:50, 5:00 (இல்லை 6:00 என்று நினைவு). இதில் அதிக கட்டணம் இருக்கைகள் பாக்ஸ் என்று பெயர். இந்த பாக்ஸ் பிரத்யேகமாக இருவர் உட்கார்ந்து பார்க்கும் அறை போலிருக்கும். 6 பாக்ஸ் இருந்ததாக ஞாபகம், ஒவ்வொன்றுக்கும் தனியே கதவு உண்டு ஒரு சிறு அறை போலவே இருக்கும். ஜோடிகளுக்கு பொருத்தமான இடம் அந்த காலத்தில். சபையரில் இன்னுமொரு பிரத்யேக சிறப்பு, அங்கு வெளிவந்து ஓடிய படங்களை, வெளியிட்ட தேதிக...