JEYALALITHA AND HER FIRST TAMIL MOVIE VENNIRA AADAI
JEYALALITHA AND HER FIRST TAMIL MOVIE VENNIRA AADAI வெண்ணிற ஆடை படத்தின் கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சொன்ன போது, வீட்டிற்கு போய் சொல்வதாக கூறினர். வீட்டிற்கு போனதும், எனக்கு போன் செய்து, 'கோபு சார்... தப்பாக நினைக்க வேண்டாம், இதற்கு முன், ஒரு கன்னட படம், அதிலும் கைம்பெண் வேடம். தொடர்ந்து இந்த படத்திலும் கைம்பெண் வேடம் எனும்போது, மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால், இந்த படம் வேண்டாம்; இயக்குனர்கிட்ட சொல்லிடுங்க...' என்றார், சந்தியா. நான், 'சரி...' என்று சொல்லி எழுவதற்குள், இன்னொரு போன். இந்த முறை, ஜெயலலிதாவே பேசினார். 'நடிப்பது தான், என் தொழில் என்றாகி விட்டது. அதன் பிறகு, இந்த வேஷம் தான் வேண்டும் என்றால் எப்படி... அம்மாவை நான், 'கன்வின்ஸ்' செய்து கொள்கிறேன். நீங்கள், இயக்குனரிடம், என் சம்மதத்தை சொல்லி விடுங்கள்...' என்றார். அந்த படத்தில் பிரமாதமாக நடித்து, புகழ் பெற்றார், ஜெயலலிதா. அப்போது முதலே, ஜெயலலிதா மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. அவரது தொழில் பக்தி பாராட்டக் கூடியது. எனக்கும், அவருக்கும் அதன் பிறகு, பல படங்களில் ந...