Posts

Showing posts with the label முகமது அலி

சென்னை ஷோ பைட் - முகமது அலிக்கு மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்

Image
சென்னை  ஷோ பைட் - முகமது அலிக்கு  மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக  இருந்தது உங்கள் அன்புதான் - முகமது அலி சென்னை வந்து ஷோ பைட் போட்டிகளில் கலக்கிய முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர்  Boxer Muhammad Ali & Jimmy Ellis with CM MGR, jan 1980 "எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்..."என அலியிடம் கேட்டார்.  அதற்கு அலி,  “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம்  இப்படி ஒருவர்  அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது. ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமா...

பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா இறப்பு 1948 செப்டம்பர் 11

Image
பாகிஸ்தானின் தந்தை  முகமது அலி ஜின்னா  இறப்பு 1948 செப்டம்பர் 11 பாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பிறந்தார். தந்தை பெயர் பூஞ்சா. தாயார் மிதிபாய்.  தந்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பெரும் பணக்காரராக விளங்கினார். கராச்சியிலும், பம்பாயிலும் கல்வி பயின்ற ஜின்னா, லண்டனுக்குச் சென்று சட்டம் பயில எண்ணினார்.  மகனை லண்டனுக்கு அனுப்ப தாயார் பயந்தார். அக்காலத்தில் லண்டன் செல்லும் இளைஞர்கள், வெள்ளைக்காரப் பெண்களை மணந்து கொண்டு ஊர் திரும்புவது வழக்கமாக இருந்தது. இதனால், ஜின்னா லண்டன் செல்வதென்றால் அதற்கு முன் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று தாயார் விரும்பினார். முதலில் இதற்கு ஜின்னா சம்மதிக்கவில்லை. என்றாலும் பின்னர் இணங்கினார். லண்டன் புறப்படுவதற்கு முன் ஜின்னாவின் திருமணம் நடந்தது.  மனைவியின் முகத்தைக்கூட அவர் பார்க்க வில்லை. அக்கால சம்பிரதாயப்படி மணமகள் சார்பாக உறவினர் ஒருவர் திருமணச் சடங்குகளில் பங்கு கொண்டார். லண்டனுக...