AROOR DAS ,DIALOGUE WRITER, GEM OF TAMIL CINEMA
AROOR DAS ,DIALOGUE WRITER, GEM OF TAMIL CINEMA ஆரூர்தாஸ் போன்ற மாமனிதர்களோடு பழகும் பாக்கியம் - Ravi Prakash என் மதிப்புக்குரிய வி.ஐ.பி. நண்பர்களில் ஒருவர் - திரைக்கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள். 500 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி, கின்னஸ் ரிக்கார்டில் தன் பெயரைப் பதித்தவர். ஆனால் ஆச்சரியம்... நேரில் பழகும்போது அந்தப் பெருமிதம், கர்வம் எதுவும் இன்றி, மிக எளிமையாக, நமக்குச் சரிசமமாகப் பழகுபவர். கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் எனக்கு இவரோடு அறிமுகம். முதல் முறை பார்த்தபோது, “என் பெயர் ஆரூர்தாஸ். பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறேன். என் பெயரை நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரூர்தாஸ் என்கிற பெயரை எனக்கு ‘தெய்வ மகன்’ காலத்திலிருந்து பரிச்சயம். தீவிர சிவாஜி ரசிகராக இருப்பவர் யாரும் ஆரூர்தாஸ், பாலமுருகன் ஆகிய இரண்டு கதை வசனகர்த்தாக்களின் பெயர்களைக் கடந்து வந்திருக்கவே முடியாது. அப்படியிருக்க, எளிமையான கதர்ச் சட்டையும் ஒரு சாதாரண மில் வேட்டியுமாக என் எதிரே அமர்ந்திருப்பவர் அந்த ஆரூர்தாஸே...