SIKHS REVOLT - OPERATION BLUE STAR 1984 JUNE 3
SIKHS REVOLT - OPERATION BLUE STAR 1984 JUNE 3 புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கியக் கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "புளூஸ்டார் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது. அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவ...